என் மலர்
நீங்கள் தேடியது "Ruthratcham"
- சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.
- ‘அகாரம்’ என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.
திரிபுராசுரன் என்ற அரக்கன் ஒரு தடவை ஸ்ரீபிரம்மா, பரமேசுவரனிடம் வரம் பெற்று வல்லமை அடைந்து அதனால் கர்வம் கொண்டு தேவர்களை இம்சிக்க ஆரம்பித்தபொழுது ஸ்ரீவிஷ்ணு பரமேசுவரனை அணுகி இதற்கு விமோசனம் காண வழி சொன்னார்.
சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.
'அகாரம்' என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.
'அகோர அஸ்த்ர' நிர்மாணத்தின் பொருட்டு தன் மூன்று கண்களையும் மூட பல வருடங்களுக்குப் பின் தன் கண்களை திறந்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.
அந்த கண்ணீர் துளிகள் பூமியில் ஆங்காங்கே தெறித்து விழுந்தன.
அப்படி கண்ணீர் துளிகள் விழுந்த இடங்களில் ருத்ராட்ச மரங்கள் முளைத்தன.
அப்படி ஈசனின் கண்களில் இருந்து கண்ணீர் தெறித்து விழுந்து ருத்ராட்ச மரம் உருவான தலங்களில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.
இதனால் ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்கு ருத்ராட்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து பல முகங்கள் உடையதாக இருக்கும்.
ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு விதை இருக்கும்.
அக்கினித்தேவன் மூன்று முக ருத்ராட்சத்திற்கு அதிபதி என்று கூறப்படுகிறது.
ஏழு முக ருத்ராட்சம் செல்வத்தைக் கொண்டு வரும் தன்மையையுடையது. அதாவது லட்சுமி தேவியை குறிக்கிறது.
மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை, ஈஸ்வர அனுக்கிரகம், பஞ்சபூத அனுக்கிரகம் பெறுவதற்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
செந்நிறமாக செப்புத்தாது போல் காட்சியளிக்கும் ருத்ராட்சக் காய்களில் அற்புதமான, அபரிமிதமான காந்த சக்தி அடங்கி உள்ளது.
இப்படி இயற்கையிலேயே காந்தசக்தி அடங்கிய காய் வேறு எதுவும் கிடையாது.
இதில் அடங்கி உள்ள காந்த சக்தியால் நம் உடலும், உள்ளமும் பயன் அடையும்.
ருத்ராட்சக் கொட்டை நம் உடலை தொட்டுக் கொண்டிருந்தால் உடலில் உள்ள உஷ்ணத்தையும், உள்ளத்தில் உள்ள கொந்தளிப்பையும் கிரகித்து பிளட் பிரஷரையும், மன சஞ்சலத்தையும் சீராக்கி விடும்.
பிளட் பிரஷர் உள்ளவர்கள் ருத்ராட்சக் கொட்டையை தாங்கள் குடிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் மிதக்கவிட்டுப் பின் அந்த நீரை அருந்த பிரஷர் கட்டுப்படும். குறையவும் செய்யும்.
எந்த யாகத்தையும் செய்யாதவனும், எந்த மந்திரத்தையும் உச்சரிக்காதவனும் கூட, ருத்ராட்சத்தை தொடுவதன் மூலமாகவே அனைத்து பாவங்களில் இருந்து விடுபட இயலும்.
ருத்ராட்சம் அணிந்த ஒருவன் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவனும், அதை வைத்து வழிபாடு செய்கிறவனும் சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு, இனியும் தொடர இருக்கும் பலகோடி பிறப்புகளில் இருந்து விடுபடுவான்.
ஒருவர் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்தாலும் கூட, அல்லது நம்பிக்கை இல்லாமல் அணிந்து கொண்டாலும் சரி.. அவன் ருத்ரனின் அம்சத்தை பெற்ற வனாக மாறுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவருக்கு உணவு, உடை வழங்குவது, ருத்ராட்சம் அணிந்த சிவனடியாருக்கு நீர் ஊற்றி பாத பூஜை செய்வதன் மூலமாக ஒருவன் சிவலோகத்தை அடைவான். ருத்ராட்ச மாலை அணிந்த ஒருவருக்கு உணவளித்தால், அவரின் 21 தலைமுறை மக்களும் பாவங்களில் இருந்து விடுபட்டு ருத்ர லோகத்தை அடைவார்கள்.
அனைத்து வித தெய்வ சுலோகங்கள், விரதங்களை அனுசரிப்பதன் மூலம் ஒருவன் அடைகின்ற பலனை, ருத்ராட்சம் அணிந்து கொள்வதன் மூலம் சுலபமாக பெற்றிட முடியும்.
ருத்ராட்ச மாலையை ஒருவன் வெறுமனே கையில் வைத்திருந்தால் கூட, அவன் நாக்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும், உபநிடதங்களையும் கற்றறிந்தவனை விட மேம்பட்டவனாக திகழ்வான்.

பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனோ அல்லது தாழ்ந்தவனோ, சைவ உணவை உண்பவனோ அல்லது அசைவ உணவை உண்பவனோ... யாராக இருப்பினும் ருத்ராட்சம் அணிந்தவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் சூடியவன், கோடி புண்ணியங்களைப் பெறுவான். காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான். கழுத்தில் அணிபவன் நூறு கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்; பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்; கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவாறு, வேத நியமங்களை ஒருவன் கடைப்பிடிப்பானாயின், அவன் பெறும் பலனை அளவிட முடியாது.
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவன், இந்த உலக பற்றில் இருந்தும், இன்ப- துன்பங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெரு மானைப் போலவே, முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடினால், ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் ஒருவனின் உடலைத் தீண்டுமாயின், அது கங்கையில் நீராடிய புண்ணியத்தை வழங்கும்.
மனிதன் மட்டுமல்ல; ஓரறிவு முதல் ஐந்தறிவுள்ள ஜீவராசிகள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால், அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.
ருத்ராட்சத்தை தானம் செய்பவர் களுக்கு, அதை அடுத்தவர் அணியும்படி செய்பவர்களுக்கு, இன்னொரு பிறவி இந்த பூமியில் கிடையாது.
இவை அனைத்தும் சிவ மகா புராணத்தில், பார்வதி தேவிக்கு, பரமேஸ்வரன் எடுத்துரைத்தது என்று சொல்லப்படுகிறது.
இந்த கலியுகத்தில் ருத்ராட்சத்தை அணிவதற்கு மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதை கிண்டல் செய்யவும், தேவையில்லாமல் பயம் காட்டவுமே பலரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதை அணிய யாருக்கும், எந்த தடையும் இல்லை என்று புராணங்கள் சொல்கின்றன. பெண்கள் மாத விலக்கு நாட்களிலும் கூட ருத்ராட்சம் அணிந்திருக்கலாம்; தாம்பத்தியமும் இதற்குத் தடை அல்ல. ஆகையால் இறைவன் அளித்த அருட் கொடையான ருத்ராட்சத்தை அணிந்து இறைவனை நாடுவோம்.