என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » saamy
நீங்கள் தேடியது "Saamy"
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் 'அக்கா குருவி' படத்தை தமிழ், தெலுங்கில் சாமி இயக்கி வருகிறார். #Akkakuruvi
1997-ம் ஆண்டு உலகப் புகழ்வாய்ந்த ஆஸ்கர் விருது விழாவில் பங்கு பெற்ற படம் 'சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்' (children of heaven). 10-க்கும் மேற்பட்ட சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு அனைவரையும் நெகிழ வைத்த இந்த படத்தின் தென்னிந்திய மொழி மாற்றும் உரிமையை பெற்று உள்ளார்கள்.
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படத்திற்கு 'அக்கா குருவி' என்று பெயர் வைத்துள்ளார்கள்.
'மிருகம்' படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனரான சாமி இப்படத்தின் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இவர் நம்ம ரசிகர்களுக்காக சில காட்சிகளை இணைத்துள்ளார்.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி 'ஷூ' ஒன்று இடம்பெறுகிறது.
படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் அதனருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊரான பூம்பாறை கிராமம் போன்ற இடங்களில் 55 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கியுள்ளார்கள். படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் விமர்சனம். #SaamySquareReview #Vikram #KeerthySuresh
சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை ஆறுச்சாமியான விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று தான் முடிவு இருக்கும். அதன் தொடர்ச்சியாக சாமி ஸ்கொயர் படம் உருவாகி இருக்கிறது.
ஒருபுறத்தில் திருநெல்வேலியில் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனிக்கு திரும்புகிறார். மறுபுறத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பத்தினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பெருமாள் பிச்சைக்கு ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா என மூன்று மகன்கள் உள்ளனர். போலீசுக்கு பயந்து தனது தந்தை தலைமறைவாகி விட்டதாக பாபி சிம்ஹா கிண்டல் செய்யப்படுகிறார்.
இதையடுத்து தனது அப்பா பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள திருநெல்வேலி வரும் பாபி சிம்ஹா திருநெல்வேலியையே அலறவிடுகிறார். திருநெல்வேலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், ஆறுச்சாமிக்கும் - பெருமாள் பிச்சைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரிந்து கொண்டு ஆறுச்சாமியை கொல்ல திட்டம் போடுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.
அதேநேரத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார். ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்துச் சென்று விவேக்கின் குழந்தையாக வளர்க்கிறார்.
கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு வளரும் ராமசாமி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார். அதேநேரத்தில் மத்திய அமைச்சரான பிரபுவிடம் முக்கிய பொறுப்பிலும் பணியாற்றுகிறார். வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு விக்ரம் மீது காதல் வருகிறது.
இதற்கிடையே தேர்வில் வெற்றி பெறும் ராமசாமி, ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் டெல்லி கணேஷ், ராமசாமிக்கு அந்த வேலை வேண்டாம் என்று நிர்பந்திக்கிறார்.
கடைசியில், ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா? தனது அப்பா ஆறுச்சாமியின் வேட்டையை தொடர்ந்தாரா? ஆறுச்சாமியை பழிவாங்கியவர்களை பழிதீர்த்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
அப்பா, மகன் என இரு கெட்-அப்களில் விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் திருநெல்வேலி, பழனி, டெல்லி என கலக்கியிருக்கிறார். ஆறுச்சாமி கதாபாத்திரத்தில் பழைய விக்ரமை பார்க்க முடிகிறது. ராமசாமி கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற போலீசாக விக்ரம் வலம் வருகிறார். மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் அழகு தேவதையாக வலம் வருகிறார். முதல் பாதியை ஐஸ்வர்யா ராஜேஷும், இரண்டாவது பாதியை கீர்த்தி சுரேஷும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
பாபி சிம்ஹா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் பாபி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி தனது காமெடியால் ஓரளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்துக்கு துணையாக நிற்கின்றனர்.
பெருமாள் பிச்சை - ஆறுச்சாமி, இந்த இரு குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பழிவாங்குதலையே படமாக இயக்கியிருக்கிறார் ஹரி. தனது பாணியில், அதிரடி, காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது எளிதல்ல, அதை சாமர்த்தியமாகவே கையாண்டிருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `சாமி ஸ்கொயர்' டபுள் ட்ரீட். #SaamySquareReview #Vikram #KeerthySuresh
சாமி ஸ்கொயர் படத்தின் வீடியோ விமர்சனம்:
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முன்னோட்டம். #SaamySquare #Vikram #KeerthySuresh
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சாமி ஸ்கொயர்'.
விக்ரம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ், இசை - தேவி ஸ்ரீ பிரகாஷ், எடிட்டிங் - வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், பாடலாசிரியர் - விவேகா, கலை - பி.சண்முகம், பி.வி.பாலாஜி, சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, தயாரிப்பு - சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி, எழுத்து, இயக்கம் - ஹரி.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹரி பேசியதாவது,
தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார்.
`சாமி ஸ்கொயர்' உலகமெங்கும் நாளை (செப்டம்பர் 21-ஆம் தேதி) ரிலீசாக இருக்கிறது. #SaamySquare #Vikram #KeerthySuresh
சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர்:
சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஹரி, சாமி ஸ்கொயர் படத்தின் கதையை மேடையிலேயே போட்டுடைத்தார். #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி பேசும் போது,
மீண்டும் மீண்டும் எனக்கு தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார். #SaamySquare #Vikram
ஹரி இயக்கியிருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், தூள், தில், சாமி படங்களுக்கு பிறகு சாமி ஸ்கொயர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசியதாவது,
நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படம் சாமி. என்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக பெரிய ஆளாக நிறுத்தியதற்கு ஹரிக்கு நன்றி கூறினேன். கதை கேட்டு படத்தின் தலைப்பு கேட்டேன். சாமி என்று ஹரி சொல்லும் போதே எனக்கு ஒரு உத்வேகம் இருந்தது. பின்னர் அருள் படத்தில் இணைந்தோம். சாமி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி முன்பே பேசினோம். ஆனால் சும்மா தொடர்ச்சியாக இல்லாமல், ஒரு கதை அமைந்தால் பண்ணலாம் என்றேன். எத்தனை வருடம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று ஹரியிடம் சொன்னேன்.
முன்பு கதை சரியாக அமையவில்லை, தற்போது அமைந்துள்ளது. இது ஒரு சரியான நேரம் என்று தோன்றியது. தூள், தில், சாமி போன்ற படங்கள் பண்ணி ரொம்ப நாள் ஆகிவிட்டது. சாமி ஸ்கொயர் அந்த வகையில் எனக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று நினைக்கிறேன். தவம் செய்வது போல, படத்திற்காக ஹரி ரொம்ப மெனக்கிட்டிருக்கிறார். #SaamySquare #Vikram
ஹரி இயக்கியிருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், வார்த்தைக்கு வார்த்தை அவரை அண்ணா என்று தான் அழைக்கிறேன் என்று கூறினார். #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பேசும் போது,
நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஹரி சார் படத்தில் நடித்தால் கற்றுக்கொள்ள முடியும். தயாரிப்பாளர் பாராட்டும் இயக்குநர் ஹரி சார் தான். ஹரி சார் தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஹரி சார் இருக்கும் போது சாமி ஸ்கொயர் படத்தில் செட்டே பரபரப்பாக இருக்கும். யாருமே சாதாரணமாக இருக்க மாட்டார்கள். மற்ற படங்களில் பணிபுரியும் போது ஒரு சிறிய தூக்கத்தை போடலாமா என்று நினைக்க ஒரு சிறிய இடைவேளையாவது இருக்கும். ஆனால் ஹரி இயக்கும் படத்தில் அதை நினைக்க கூட முடியாது.
தொடக்கத்தில் இருந்து சூரி அண்ணாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரை எனது சொந்த அண்ணனாகவே பார்க்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, அண்ணா என்று அழைப்பது சூரி அண்ணாவை தான். இந்த படத்தில் எனக்கும், சூரி அண்ணாவுக்கும் நிறைய காட்சிகள் உள்ளது. பேசவே பயமாக இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தான் எனது ரசிகையாகி இருக்கிறார். காக்கா முட்டை படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை. மிகச்சிறந்த நடிகை. நாங்கள் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் ஒரே படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம்.
அந்நியன் படத்தின் போது ரெமோவாக விக்ரம் சாரை ரசித்தேன். தற்போது அவருடன் இணைந்து நடித்திருப்பதில் மகிழ்ச்சி. சாமி முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் இருக்கிறார். ஹரி சார் மாதிரியே துறுதுறுவென்று இருப்பார். இந்த படத்தின் மூலம் என்னை பாடகியாக அறிமுகப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. இவ்வாறு பேசினார். #SaamySquare #Vikram #KeerthySuresh
Molagapodiye Adhiroobaney Saamy Square Hari Vikram Saamy Saamy 2 Keerthy Suresh Aishwarya Rajesh Trisha DSP Devi Sri Prasad Rock Star Bobby Simha Vivekh பாபி சிம்ஹா விவேகம் ஹரி விக்ரம் சாமி 2 கீர்த்தி சுரேஷ் த்ரிஷா ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தேவி ஸ்ரீ பிரசாத் ராக் ஸ்டார் சாமி ஸ்கொயர் சாமி ஸ்கொயர் டிரைலர் அதிரூபனே மொளகாப்பொடியே
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. `அதிரூபனே', `மொளகாப்பொடியே' என துவங்கும் அந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை நிலையில், படத்தின் முழு இசையும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Happy to announce that #SaamySquare album will be out on 23rd (Monday) #ChiyaanVikram@KeerthyOfficial#DirectorHari@ThisIsDSP#BobbySimha@shibuthameens@aishu_dil@sooriofficial@Viveka_Lyrics@SonyMusicSouth#SaamySquareAlbumFromJuly23
— Thameens Films (@ThameensFilms) July 19, 2018
தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram
Molagapodiye Adhiroobaney Saamy Square Hari Vikram Saamy Saamy 2 Keerthy Suresh Aishwarya Rajesh Trisha DSP Devi Sri Prasad Rock Star Bobby Simha Vivekh பாபி சிம்ஹா விவேகம் ஹரி விக்ரம் சாமி 2 கீர்த்தி சுரேஷ் த்ரிஷா ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தேவி ஸ்ரீ பிரசாத் ராக் ஸ்டார் சாமி ஸ்கொயர் சாமி ஸ்கொயர் டிரைலர் அதிரூபனே மொளகாப்பொடியே
ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. #SaamySquare #Saamy
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பாகஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டு வருகிறார்கள். இதில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்கும் டூயட் பாடலாக உருவாக்கி வருகிறார்கள்.
இந்தப் பாடல் படத்தின் முதல் பாடல் என்றும், விக்ரமுக்கு அறிமுகப் பாடல் இல்லை என்றும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார். மேலும், முதல் முறையாக டூயட் பாடலை படத்தில் முதல் பாடலாக உருவாக்கி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். சாமி படத்தின் முதல் பாகம் எடுத்த பிறகு, இதன் தொடர்ச்சி உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. அதற்கான கதையை சிங்கம் பாகத்தின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தி விட்டேன். சிங்கம் படத்திற்காக யோசித்ததை சாமி ஸ்கொயர் படத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன் என்றும் ஹரி கூறியிருக்கிறார்.
சாமி முதல் பாகத்தில் அறிமுகப்பாடலான ‘திருநெல்வேலி அல்வாடா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதுபோல், இந்தப் படத்திலும் விக்ரமுக்கு அறிமுகப்பாடல் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், அந்த அறிமுகப்பாடல் இல்லை என்று ஹரி கூறியிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அடைந்திருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்கள். வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர்.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்திருந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்றை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து `அதிரூபனே' என்று துவங்கும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
A captivating song that will touch your heart. #Adhiroobaney will be out tomorrow at 5PM. Download @WynkMusic app & get ready! #Vikram@ThisIsDSP@ThameensFilms@KeerthyOfficial@Viveka_Lyrics@manasimmpic.twitter.com/zNvkwYoezq
— Sony Music South (@SonyMusicSouth) July 9, 2018
இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேசும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தில் த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், மற்றொரு முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
எனவே இந்த பாகத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்தது படக்குழு. தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் படக்குழுவில் இருந்து த்ரிஷா வெளியேறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து த்ரிஷாவுடன் படக்குழு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விக்ரம் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும், விரைவில் ஒரு பாடலுடன் படப்பிடிப்பு நிறைவு பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram #AishwaryaRajesh
அரபு நாட்டு விமானி ஒருவர், விக்ரம் நடிப்பில் உருவான சாமி படத்தின் வசனத்தை டப்மாஸ் செய்தது, அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. #ChiyaanVikram #Vikram
விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை அரபு நாட்டு விமானி ஒருவர், டப்மாஸ் செய்துள்ளார். இது விக்ரமை மிகவும் கவர்ந்திருக்கிறது. விமானி பேசும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் அரபு சாமி என்று பதிவு செய்திருக்கிறார்.
தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்லார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. #SaamySquare #Vikram
ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்துள்ளன.
இந்த டிரைலருக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மறுபுறத்தில் நெட்சன்கள் டிரைலரை கிண்டல் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில், `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. பெரும் எதிபார்ப்புக்கு இடையே வெளியான இந்த டிரைலரை ஒரு வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்த்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X