என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sadaya Nayan"
- மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியார் நாயனாரும் ஒருவர்.
- தியாகராஜர் மீது பெரும் பக்தி கொண்டவராக இருந்தார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் உள்ள மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியார் நாயனாரும் ஒருவர். இவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னையார் ஆவார். இவர் சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.
சுந்தரமூர்த்தி நாயனாரை மகனாய் பெற்றதாலாயே, தாயான இசைஞானி நாயனாரையும், தந்தையான சடைய நாயனாரையும் நாயன்மார்களாகக் கொண்டாடி மகிழும் பாக்கியம் பெறுகிறோம். சுந்தரமூர்த்தி நாயனார், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
சோழவள நாட்டில், கமலாபுரத்தில் (திருவாரூர்) கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு இசைஞானியார் மகளாகப் பிறந்தார். சிறுவயது முதல் சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு சிறந்த சிவபக்தையாக வாழ்ந்தும், வளர்ந்தும் வந்தார்.
இவர் திருவாரூரில் உள்ள தியாகராஜர் மீது பெரும் பக்தி கொண்டவராக இருந்தார். குழந்தைப் பருவம் முடிந்து திருமண பருவத்தை அடைந்ததும், இவர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில், ஆதி சைவ மரபில் வந்த சிறந்த சிவபக்தரான சடையனார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சடையனாரிடம் பதிபக்தியுடனும், சிவபெருமானிடம் சிவ பக்தியுடனும் எவ்விதமான குறைகள் இன்றி வாழ்ந்து வந்தார். தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவ நாமங்கள் மற்றும் சிவஸ்துதிகளை கற்பித்தார். இசைஞானியார் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாகப் பெறும் பேறு பாக்கியத்தை இசைஞானியாருக்கு அருளினார்.
இசைஞானியார் நாயனார் சிவபக்தியும், பதிபக்தியும் பூண்டு வாழ்ந்து திருதொண்டத்தொகை பாடி, உலகையெல்லாம் உய்வித்த தெய்வ மகனை பெற்று முடிவில் சிவபெருமானின் பாதகமலம் அடைந்தார்.
சிவபக்தியில் சிறந்த இசைஞானியார் நாயனார் இறைத்தொண்டு செய்து, சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் திருநாவலூரில் (விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது) முக்தி அடைந்தார். அன்றில் இருந்து முக்தி அடைந்த நாளை எல்லா சிவாலயங்களிலும் குருபூஜை ஆக கொண்டாடப்படுகின்றது. அதாவது இன்று இசைஞானியார் நாயனார் குரு பூஜை தினம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்