search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saffron Facial"

    • சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.
    • குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.

    குங்குமப்பூ எண்ணெய் மசாஜ்

    குங்குமப்பூ எண்ணெய்யுடன் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் சேர்த்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க செய்யும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.

     குங்குமப்பூ பேஸ் மாஸ்க்

    ஒரு டீஸ்பூன் தேன் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிருடன் சிறிதளவு குங்குமப்பூ இழைகளை கலந்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவிவிட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ் மாஸ்க் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். சருமத்துக்கு கூடுதல் பிரகாசம் அளிக்கும்.

    கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் சூரிய கதிர்வீச்சுகளின் வீரியம் அதிகமாக இருக்கும் வேளையில் வெளியே நடமாடினால் சருமம் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும். அதனை தவிர்ப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

    இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்க விரும்புபவர்களின் தேர்வாக குங்குமப்பூ அமைந்திருக்கிறது. அது வெப்பத்தை விரட்டியடித்து சருமத்திற்கு பொலிவை தரக்கூடியது. வெப்பமான மாதங்களில் குங்குமப்பூவை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    * குங்குமப்பூவில் குரோசின், குரோசெடின், சப்ரானால் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் மற்றும் சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.

    * குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை, எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.

    * குங்குமப்பூவில் வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை சரும வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவை. இளமை தோற்றத்தை தக்க வைக்கவும் துணை புரியும்.

    * குங்குமப்பூவில் உள்ள இயற்கையான கரோட்டினாய்டுகள் சரும நிறத்தை மேம்படுத்தக்கூடியவை.

     சரும பராமரிப்புக்கு ஏற்ற குறிப்புகள்:

    நீரேற்றத்துடன் இருங்கள்:

    சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

    சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்:

    தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, எஸ்.பி.எப் 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளை கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

    சமச்சீர் உணவை உண்ணுங்கள்:

    பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்த கீரைகள், பெர்ரி வகை பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சருமத்தை சுத்தம் செய்யுங்கள்:

    சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக தவறாமல் சுத்தப்படுத்துங்கள். வெளி இடங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் 'பேஸ் வாஷ்' கொண்டு முகம் கழுவுங்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சருமத்தை சுத்தம் செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள். இறந்த செல்களை அகற்றவும், மென்மையான, பளபளப்பான சருமத்தை பராமரிக்கவும் உதவும்.

    ×