என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Saina"
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடந்த தகுதி சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் காஷ்யப், முக்தா ஆகியோர் வெற்றி பெற்று பிரதான சுற்றை எட்டினர்.
இன்றைய தினம் இந்திய நட்சத்திர மங்கைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து களம் இறங்குகிறார்கள்.
சிந்து தனது முதல் சுற்றில் லையனி அலெஸ்சாண்ட்டோ மைனகியையும் (இந்தோனேஷியா), சாய்னா நேவால், இந்தோனேஷியாவின் சுசான்டோவுடனும் மோதுகிறார்கள். இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்தும் முதல் சுற்றில் இன்று ஆடுகிறார். #SingaporeOpenBadminton
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி இந்திய முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மங்கையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் தென்கொரியாவின் சங் ஜி ஹயூனை எதிர்கொள்கிறார். சங் ஜி ஹயூன், கடந்த ஆண்டு ஹாங்காங் ஓபனில் சிந்துவை வீழ்த்தியவர். அதனால் சிந்து மிகவும் எச்சரிக்கையாக ஆட வேண்டியது முக்கியம். முதல் இரண்டு சுற்றுகளில் சிந்து வெற்றி கண்டால், கால்இறுதியில் பலம் வாய்ந்த 4-ம் நிலை வீராங்கனையான சென் யூபெயுடன் (சீனா) மோத வேண்டி இருக்கும்.
மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோருடன் மோதுகிறார். முதல் இரண்டு தடையை சாய்னா வெற்றிகரமாக கடந்தால், கால்இறுதியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுக்கட்ட வேண்டி வரும். தாய் ஜூ யிங்குடன் கடைசியாக மோதிய 12 ஆட்டங்களில் சாய்னா தொடர்ச்சியாக தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கவுகாத்தியில் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வரும் சிந்துவும், சாய்னாவும் இந்த போட்டியை முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், 8-ம் நிலை வீரரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், முதல் ரவுண்டில் பிரைஸ் லெவர்டெசை (பிரான்ஸ்) சந்திக்கிறார். அனேகமாக அவர் கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவை (ஜப்பான்) சந்திக்க வேண்டியது இருக்கும். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். அதே சமயம் சமீர் வர்மா தனது சவாலை முன்னாள் முதல் நிலை வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) தொடங்குகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடியாக இறங்குகிறார்கள்.
நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த கவுரவமிக்க இந்த போட்டியில் பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001-ம் ஆண்டு) ஆகியோர் தவிர வேறு எந்த இந்தியரும் மகுடம் சூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-14, 21-9 என்ற நேர்செட்டில் சக வீராங்கனை அமோலிகா சிங் சிசோடியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் காஷ்யப் 9-21, 22-20, 21-8 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் பிர்மான் அப்துல்கோலிக்கையும், சாய் பிரனீத் 21-12, 21-10 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரேன் ருஸ்தாவிதோவையும், சமீர் வர்மா 22-20, 21-17 என்ற நேர்செட்டில் சீன வீரர் ஜாவ் ஜன்பெங்கையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். #SyedModiInternational #SainaNehwal #Kashyap
டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் 83754 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனாவின் ஷி யுகி, மலேசியாவின் லீ் சாங் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பிவி சிந்து 85414 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். தைவானின் தாய் சு யிங் 98317 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜப்பானின் அகானே யமகுச்சி 87743 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். சாய்னா நேவால் 58014 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
நான்ஜிங் (சீனா):
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 5-ந்தேதிவரை இந்தப்போட்டி நடக்கிறது.
இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி.வி. சிந்து, சாய்னா நேவால் உலக பேட்மின்டன் போட்டியில் முத்திரை பதிப்பார்களா? என்று எதிர்பார்க்கப்டுகிறது.
உலக தரவரிசையில் 3-வது இடத்தில் சிந்து 2016-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் 2017-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும், 2013 மற்றும் 2014-ல் வெண்கல பதக்கமும் பெற்றார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
உலக தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார். உலக பேட்மின்டன் போட்டியில் 2 பதக்கம் பெற்று இருந்தார். 2015-ம் ஆண்டு வெள்ளியும், 2017-ல் வெண்கலமும் பெற்றார்.
வீரர்களில் ஸ்ரீகாந்த் கடாம்பி மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் உலக தர வரிசையில் 7-வது இடத்தில் உள்ளார். #WorldBadminton #pvsindhu #saina
இதற்கு முன் 7-வது இடத்தில் இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற மலேசியா ஓபன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். இதனால் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். எச் எஸ் பிராணய் ஒரு இடம் பின்தங்கி 14-வது இடத்திலும், சமீர் வர்மா 20-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து 3-வது இடத்திலேயே நீடிக்கிறார். சாய்னா நேவால் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இரண்டு இடங்கள் பின்தங்கி 21-வது இடத்தை பிடித்துள்ளது. மானு ஆத்ரி - பி சுமீத் ரெட்டி ஜோடி 28-வது இடத்தில் உள்ளது.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொண்ணப்பா - என் சிக்கி ரெட்டி 28-வது இடத்தில் உள்ளனர். #BWFrankings #KidambiSrikanth #saina #PVSindhu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்