என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saindhavi"

    • இவர்களின் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.
    • பொய்யான தகவல்களால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்.

    தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடியாக ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி தம்பதியினர் திகழ்ந்து வந்தனர். பள்ளி மாணவியாக இருக்கும்போதே பாட வந்த சைந்தவியை காதலித்த ஜி.வி. பிரகாஷ் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரது கூட்டணியில் வெளியான பாடல்கள் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு இருந்தது.

    கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிவதாக தெரிவித்தனர். இதனால் இவர்களது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இவர்களின் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

    2021-ம் ஆண்டு வெளியான 'பேச்சிலர்' படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து திவ்ய பாரதி பணியாற்றி உள்ளார். அப்போதில் இருந்தே அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவின. இது குறித்து இருவரும் பேசியிருந்தாலும், அவை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் குறித்து திவ்யபாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜி.வி. பிரகாஷின் குடும்பப் பிரச்சனைகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், ஒரு நடிகரை, குறிப்பாக திருமணமான ஒருவருடன் ஒருபோதும் டேட்டிங் செல்லமாட்டேன். நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்லமாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதால் இதுவரை அமைதியாக இருந்து வந்தேன். ஆனால் அவை ஒரு எல்லையை தாண்டிவிட்டதால் தற்போது வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொய்யான தகவல்களால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்.

    நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண். வதந்திகளால் சோர்ந்துவிட மாட்டேன். வதந்தியை பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். இந்த விஷயத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை என்று திவ்யபாரதி கூறியுள்ளார்.

    • மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’காம்ப்ளக்ஸ்’.
    • இப்படத்தின் இடம்பெற்றுள்ள கத்திக்கூவுது காதல் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காம்ப்ளக்ஸ்'. கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது.

     

    காம்ப்ளக்ஸ்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கத்தி கூவுது காதல் என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஜிவி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். ஞானகரவேல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    • தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
    • கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.

    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி தம்பதி விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்களிலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனையால் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. மேலும் இருவரும் விரைவில் விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்ல உள்ளனர் என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    நட்சத்திர ஜோடியாக வளம் வந்த ஜி.வி. - சைந்தவி தம்பதி பிரிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் விக்ரமின் 'தங்கலான்', 'வீர தீரச் சூரன்', பாலாவின் 'வணங்கான்', சிவகார்த்திகேயனின், 'அமரன்', தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.
    • இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும், சினிமா பின்னணி பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. மனைவி சைந்தவியை பிரிந்து விட்டதாக ஜி.வி.பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

    இது ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். 

    இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில்,

    புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?

    இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட்.
    • மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக்க அறிமுகமாகினார்.

    தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் நாளை [ஜூலை 5] வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். சமீபத்தில் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதனால் இப்பாடலிற்கு ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த பாடலிற்கு விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பாடகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூற இருக்கிறார்.
    • சைந்தவியின் இந்த புதிய பயணம் சிறப்பாக அமையவேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாசும், சைந்தவியும் பிரிந்தனர்.

    'எங்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப்பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்' எனவும் அறிவிக்கை வெளியிட்டு இருவரும் பிரிந்தனர்.

    விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஜி.பி.பிரகாஷ் நடிப்பு, இசையமைப்பு என வழக்கம் போல சினிமாவில் படு பிசியாக இருக்கிறார். ஆனால், சைந்தவி என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் டி.வி.நிகழ்ச்சிகளில் சைந்தவி தோன்ற இருக்கிறார். ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பாடகர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூற இருக்கிறார்.

    சைந்தவியின் இந்த புதிய பயணம் சிறப்பாக அமையவேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ஜி.வி. பிரகாஷ் வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
    • 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

    ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவர் கதாநாயகனாக நடித்த பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.

    ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.

    ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

    இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் நேற்று மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷ் கான்சர்ட்டில் சைந்தவி கலந்துக்கொண்டு பாடினார்.

    இந்த நிகழ்ச்சியில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தில் இருந்து பிறை தேடும் பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள்.

    அதில் வரும் வரிகளான " நிழல் தேடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் , ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா"

    அதற்கு ஜிவி பிரகாஷ் - " என் ஆயுள் ரேகை நீயடி. என் ஆணி வேரடி , சுமை தாங்கும் எந்தன் கண்மணி. என்னை சுடும் பனி" என்ற வரிகளை பாடினார்.

    இது இவர்கள் இருவருக்கும் இடையே பாடிய உணர்வு போல் இருப்பதனால் இது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. விவாகரத்திற்கு பிறகு ஒரே மேடையில் இருவரும் இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×