search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale gutka"

    பெரம்பலூர் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை வணிகம் செய்தால் உரிமமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் குட்கா, நிக்கோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை ஆகிய போதை பொருட்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்தல், வாகனங்களில் கொண்டு செல்லுதல், வினியோகம் மற்றும் சில்லறை விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்படி தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை வணிகம் செய்யும் வியாபாரிகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். இதன்மூலம் உணவு வணிகர்கள் தமது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாமல் போகும். செல்போன் கடைகள் மற்றும் சில இடங்களில் சில நபர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் எந்த குடியிருப்பு பகுதியிலாவது தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வீடு மூடி சீல் வைக்கப்படும்.

    மேலும், வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குட்கா, நிக்கோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை விற்கப்பட்டாலும், உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பான புகார் அளிப்பதற்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் கொடுக்கலாம். கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 
    ×