என் மலர்
நீங்கள் தேடியது "Salesforce"
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற டைம் வார இதழை 190 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் பேனியாப் வாங்கியுள்ளார். #TimeMagazine #Salesforce
நியூயார்க்:
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற டைம் வார இதழ் தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் பேனியாபும் அவரது மனைவியும் இணைந்து190 மில்லியன் டாலர்களுக்கு (ரூ.1375 கோடி) மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர்.
டைம் பத்திரிக்கையை வாங்கியதற்கும் சேல்ஸ்போர் நிறுவனத்திற்கு தொடர்பு இல்லை என்றும், பேனியாபும் அவரது மனைவியும் தனிநபர்கள் என்ற முறையிலேயே டைம் இதழை வாங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையை வாங்கினாலும், டைம் பத்திரிக்கையின் அன்றாட நடவடிக்கைகளிலோ இதழியல் சார்ந்த முடிவுகளிலோ பேனியாப் தலையிட மாட்டார் என்றும், அதை தற்போதுள்ள நிர்வாகத் தலைமைக் குழுவே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.