என் மலர்
நீங்கள் தேடியது "Salmaan Khan"
- ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.
படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை சல்மான் கான் கூறியதாவது " ரஜினிகாந்த், சிரஞ்சீவி காரு, சூர்யா, ராம் சரண் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் இந்தி திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதில்லை. அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம், "பாய்.. பாய்" என என்னை அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு செல்வதில்லை" என அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.


