என் மலர்
நீங்கள் தேடியது "salmankhan"
- காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30-ந்தேதி உலக அளவில் வெளியானது.
'சிக்கந்தர்' படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே முழு படமும் எச்.டி வடிவில் இணையத்தில் வெளியாகி விட்டன. இதற்கு சினிமா வட்டாரங்கள் தங்களின் கடுமையான கண்டனம் தெரவித்தனர்.
இதனை தொடர்ந்து திரையரங்கில் 'சிக்கந்தர்' படம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலக அளவில் ரூ.160 கோடியும், இந்திய அளவில் ரூ.84.25 கோடி வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவான வசூல் என கூறப்படுகிறது. இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முதல் நாளில் ரூ. 15 கோடி வசூலித்திருந்தது. ஆனால் முதல் நாளில் ரூ. 33 கோடி வசூலித்த 'டைகர் ஜிந்தா ஹை' படத்தின் தொடக்க வசூலை சிக்கந்தரால் முறியடிக்க முடியவில்லை.
- பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான்.
- இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இந்தியில் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வரவே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

சல்மான்கான் - ஜானி மாஸ்டர்
இதையடுத்து சல்மான் கானை தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சல்மானுடன் ஜானி மாஸ்டர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜானி மாஸ்டர் சமீபத்தில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சல்மான்கானின் உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது.
- ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவரது தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு நேற்று முன்தினம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர்.

சல்மான்கான்
இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் கொடுத்த புகாரின் பேரில் பந்த்ரா போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி யான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
நடிகர் சல்மான்கான் தற்போது 'டைகர் 3' என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மனிஷ் சர்மா இயக்கத்தில் கத்ரினா கைப், இம்ரான் ஹாஸ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது சல்மான் கானுக்கு கையில் அடிபட்டு வலியால் துடித்திருக்கிறார்.

காயமடைந்த சல்மான்கான்
இந்த நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் வந்து சல்மான்கானை பரிசோதித்து முதலுதவி அளித்தனர். அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்து அதற்கான சிகிச்சை அளித்தனர். தோள்பட்டையில் பேண்டேஜ் ஒட்டி தசைநார்ப் பிடிப்பைச் சரி செய்தனர். சல்மான்கான் இந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
- இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள்.
- அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான் கானும் இப்போது ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.
இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான்கானும் இப்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.

சல்மான்கான்
மும்பையில் கடற்கரையை யொட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் கட்டபோவதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமைய இருக்கிறது. இதில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. இந்த ஓட்டல் நடிகர் சல்மான்கானின் தாயார் சல்மா பெயரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- நடிகர் சல்மான்கானுக்கு சில மாதங்களாக தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
- இவருக்கு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான்கான் தொடர்ந்து கொலை மிரட்டலை சந்தித்து வருகிறார். அண்மையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்ததையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கோல்டி பிரார்- சல்மான்கான்
இந்த நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி பிரார் தற்போது நடிகர் சல்மான்கானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் சல்மான்கானை நிச்சயமாக கொல்வோம். லாரன்ஸ் பாய் தான் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார். நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று கூறினார்.
- குத்துச்சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக சல்மான் கான் மற்றும் ரொனால்டோ பங்கேற்றனர்.
- சல்மான்கானை கண்டுகொள்ளாமல் ரொனால்டோ செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் சல்மான்கானும் கால்பந்து வீரர் ரொனால்டோவும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் சல்மான்கானை கண்டு கொள்ளாமல் ரொனால்டோ செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

சல்மான்கான் -ரொனால்டோ
அதில், நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் தனது மனைவியுடன் உள்ளே நுழையும் ரொனால்டோ, அங்கு நின்று கொண்டு இருந்த சல்மான்கானை கண்டு கொள்ளாமல் செல்வார். இந்த வீடியோ வைரலானது. இதற்கு சல்மான்கானை ரொனால்டோ அவமதித்து விட்டதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சல்மான்கானுடன் ரொனால்டோ சிரித்து பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Salman bhai ignoring Ronaldo. Major flex. Tiger Zinda etc. pic.twitter.com/e7PUVcKFZ4
— Gabbar (@GabbbarSingh) October 30, 2023
- சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைகர் 3'.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான ஒரே நாளில் ரூ.40 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பட்டாசு வெடித்த ரசிகர்கள்
இந்நிலையில், 'டைகர் 3' படத்தில் நடிகர் சல்மான் கானின் எண்ட்ரியை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் திரையரங்கில் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#भाई का जलवा ओर उनके फैंस का भी ❤️#आज लगा दी भाईजान के फैंस ने ?#Tiger3 । #SalmanKhan #Salmanics pic.twitter.com/NwqJmaQPCR
— KESHAV THAKUR ?? (@Keshu999999) November 13, 2023
- சல்மான்கான் நடித்துள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மேலும், இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.94 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'டைகர் 3' படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் மகராஷ்டிராவில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சல்மான் கானின் எண்ட்ரியின் போது அவரது ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டாசு வெடித்த ரசிகர்கள்
இந்நிலையில், ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக நடிகர் சல்மான்கான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டைகர் 3 படத்தின் போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்தது குறித்து கேள்விப்பட்டேன். இது ஆபத்தானது. நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் படத்தை ரசியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
I'm hearing about fireworks inside theaters during Tiger3. This is dangerous. Let's enjoy the film without putting ourselves and others at risk. Stay safe.
— Salman Khan (@BeingSalmanKhan) November 13, 2023
