என் மலர்
நீங்கள் தேடியது "Sam CS"
- அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடர் 'லேபில்'.
- இந்த வெப்தொடர் நாளை ஒளிப்பரப்பாகவுள்ளது.
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த வெப்தொடர் நாளை (நவம்பர் 10) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியதாவது, ஹாட் ஸ்டாருக்கு நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. சீரிஸ் என்றாலே டிவி நாடகத்துக்கு அடுத்த கட்டம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது சினிமாவை தாண்டிய அடுத்த கட்டம். வரும் காலத்தில் சினிமாவை விட வெப் சீரிஸ் தான் பெரிதாக இருக்கும். நான் செய்து வரும் சீரிஸ்களே அதற்கு சாட்சி. அதில் ஒன்று தான் லேபில்.

நமக்கு என்று ஒரு அடையாளம் தேவை என்பதை எல்லோருமே நினைப்போம், அது மாதிரி அடையாளப் பிரச்சனையைச் சொல்லும் சீரிஸ் தான் இது. இதில் மூவி மாதிரி தான் வேலை பார்த்தோம். பாடல் எல்லாம், ஒரு கமர்ஷியல் படம் போலவே இருக்கிறது. எங்கள் டீமின் உழைப்பு உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். அருண் ராஜாவுடன் உழைத்தது மிக மகிழ்ச்சி. ஜெய் உடன் படம் செய்திருக்கிறேன், ஆனால் இந்த சீரிஸில் அவர் தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றி நடித்திருக்கிறார். எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். மிகச்சிறப்பான சீரிஸாக இருக்கும் என்று பேசினார்.
- டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
- இந்த படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது டிமான்டி காலனி 2. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
விரைவில் வெளியாக இருக்கும் டிமான்டி காலனி 2 படம் குறித்து டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., "இயக்குனர் அஜய்-யிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம் கலைஞன் தோற்பதில்லை."

"இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக, நான் வேறு பல படங்களை செய்யவில்லை, கொஞ்சம் வருத்தம் தான் ஆனால் இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார்."
"தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சி.ஜி. எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.

இப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
- டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
- கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள 'கார்டியன்' படம் மார்ச் 8-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, 'மொட்டை'ராஜேந்திரன், பிரதீப் ராயன்,'டைகர் கார்டன்' தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஏ.சக்திவேல் மேற்கொள்ள படத்தொகுப்பாளராக எம். தியாகராஜன் பணியாற்றியுள்ளார்.
குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி இருக்கும் கார்டியன் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ். "சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது."
"முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்சிகாவும் ஒருவர். மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார்."
"இந்த படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளியாகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.
- இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது
- இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது
'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்த 'மிஷன் சாப்டர் 1' ஆக்ஷன் படம் இயக்கத்துக்குப்பின் இயக்குனர் ஏ.எல். விஜய் தற்போது புதிய படம் இயக்கும் பணியை தொடங்குகிறார்.
இந்த படத்தில் நடிகர் மாதவன்- கங்கனா ரணாவத் நடிக்கின்றனர்.இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்பட வில்லை.
இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

ஏ.எல்.விஜய் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து தெய்வத்திருமகள், சைவம், மதராசப்பட்டினம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆனால், தற்போது இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
- பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார். சாம் சி.எஸ்.
- அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
இன்னும் சில தினங்களில் இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில், புஷ்பா 2 படத்தில் பணியாற்றியது பற்றி இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இது குறித்த பதிவில், "புஷ்பா 2 படம் எனக்கு மிகப்பெரிய பயணம். பி.ஜி.எம். பணிகளை மேற்கொள்ள செய்து அற்புதமான அனுபவத்தை வழங்கியதற்கு நன்றி மைத்ரி மூவி மேக்கர்ஸ். தயாரிப்பாளர்கள் ரவிசங்கர், நவீன் யெர்னெனி மற்றும் செர்ரி ஆகியோரது தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கை இன்றி இது சாத்தியமாகி இருக்காது."
"அல்லு அர்ஜூன் நீங்கள் அன்பாக இருந்தீர்கள். உங்களுக்கு பி.ஜி.எம். ஸ்கோர் செய்தது எனக்கு கூடுதல் ஆர்வத்தை கொடுத்தது. உண்மையில் ஃபயராக இருந்தது. இத்தகைய பிரமாண்ட திரைப்படத்தில் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் இயக்குநர் சுகுமார் சார். அதுவும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் பணியாற்றியது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது."
படத்தொகுப்பாளர் நவீன் நூலி சகோதரர், இந்த பணி முழுக்க தொடர்ந்து ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனது குழுவினர் அனைவருக்கும் நன்றி. டிசம்பர் 5 ஆம் தேதி புஷ்பா 2 காட்டுத்தீ உலகம் முழுக்க பரவ இருக்கிறது. அதனை உங்கள் அருகாமையில் உள்ள தியேட்டர்களில் பாருங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பின்னணி இசை பணி முடிவடைந்துள்ளது. இதனை இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

சாம் சி. எஸ் - ஹிருத்திக் ரோஷன்
மேலும் அந்த பதிவில், "வாய்ப்பளித்ததற்கு புஷ்கர்-காயத்ரி மற்றும் ஹிருத்திக் ரோஷனுக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் இந்த திரைப்படமும் என் இசையும் பிடிக்கும் என்று நம்புகிறேன். திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ஆர்வமாக காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
'விக்ரம் வேதா' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Finished #vikramvedha BGM
— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) September 22, 2022
Tnkq so much for the opportunity @PushkarGayatri and @hrithikroshan
Hope u will all like the movie and also "my music " 😎🤗
Eagerly waiting for the release #vikramvedha from 30th sep#SaifAliKhan @radhika_apte@RelianceEnt @TSeries @StudiosYNot pic.twitter.com/Ik9Ym7sssy
- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
- இவர் விக்ரம் வேதா இந்தி ரீமேக்கிலும் இசையமைத்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான சாம் சி.எஸ். 'ஓர் இரவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர், விக்ரம் வேதா படத்தில் இசையமைத்ததன் மூலம் தனக்கான இடத்தை பிடித்தார். இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சாம் சி.எஸ்
இதனைத்தொடர்ந்து அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இவர் பின்னணி இசையில் விக்ரம் வேதா இந்தி ரீமேக் டிரைலர் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் இந்தி திரையுலகினர் மத்தியில் சாம் சி.எஸ்ஸுக்கு பாராட்டுக்கள் குவிவது மட்டுமல்லாமல் இந்தி பட வாய்ப்புகளும் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.









As I wait. For my hardwork called #ayogya to release. I did my best.more than an https://t.co/nThd9d438M always. I groomed my child since it came on my lap.BUT.not enuf??? #gajjnimohamed. My time will come. I continue my journey Gb pic.twitter.com/yjKHQitJ7O
— Vishal (@VishalKOfficial) May 9, 2019