search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sameer verma"

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் பிரனாய் ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா, சீன தைபே வீரரான சி.ஒய். லின் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் 12-21, 13-21 என்ற கணக்கில் சமீர் தோல்வியடைந்தார்.

    • இந்தியாவின் பிரனோய் மற்றும் பிரேசில் வீரரான மிஷா ஜில்பர்மேனுடன் மோதினார்.
    • இந்தியாவின் சமீர் வர்மா, சிங்கப்பூர் வீரரான லோ கீன் யூவுடன் மோதினர்.

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றைய பிரிவு ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனோய், 53-வது தரவரிசையில் உள்ள பிரேசில் வீரரான மிஷா ஜில்பர்மேனுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனோய் 21-17, 21-15 என்ற கணக்கில் மிஷா ஜில்பர்மேன்னை வீழ்த்தினார். இந்த போட்டி 46 நிமிடம் நடைபெற்றது. இதன் மூலம் அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 114-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சமீர் வர்மாவும் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் வீரரான லோ கீன் யூவும் மோதினர்.

    இதில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-14, 14-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டி 62 நிமிடம் நடைபெற்றது.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
    • இவர்களின் சாதனை நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.

    புதுடெல்லி:

    ஸ்லோவேனியாவின் மரிபோர் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா தங்கம் வென்று அசத்தி உள்ளார். இவர், ஆடவர் ஒற்யைர் இறுதிப்போட்டியில் தைவான் வீரர் சூ லீ யாங்கை 21-18 21-14 என்ற நேர்செட்களில் வென்றார்.

    இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த ஜோடி அரையிறுதியில் டென்மார்க் ஜோடியை 21-15 21-19 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் மற்றொரு ஜோடியிடம் 12-21 13-21 என தோல்வியடைந்தது. 

    ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி

    ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி

    இந்திய பேட்மிண்டனின் தொடர் வளர்ச்சி மற்றும் வெற்றியை இந்த வீரர்களின் சாதனைகள் பிரதிபலிக்கின்றன. அத்துடன், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர். #AsianBadmintonChampionship
    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் முன்னேறியிருந்தனர்.

    இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. பிவி சிந்து காய் யன்யன்-ஐ எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 19-21, 9-21 நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றமடைந்தார்.



    சாய்னா நேவால் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் சாய்னா முதல் செட்டை 13-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 23-21 எனக் கைப்பற்றினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் 16-21 இழந்து வெளியேறினார். யமகுச்சிக்கு எதிராக 9 ஆட்டத்தில் 8 முறை சாய்னா தோல்வியடைந்துள்ளார்.



    ஆண்களுக்கான காலிறுதி ஒன்றில் சமீர் வர்மா ஷி யுகியை எதிர்கொண்டார். இதில் 10-21, 12-21 என எளிதாக தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
    உ.பி.யில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். #SyedModiInternational #SameerVerma
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவும் மோதினர்.

    சீன வீரர் அபாரமாக ஆடியதால், 16-21 என்ற கணக்கில் சமீர் வர்மா முதல் செட்டை இழந்தார். ஆனாலும், மனம் தளராத சமீர் வர்மா இரண்டாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சமீர் வர்மா சிறப்பாக ஆடினார். இதனால் அவர் 21 -14 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் கைப்பற்றினார். 

    இறுதியில், 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சீன வீரரை வீழ்த்திய இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

    இது சமீர் பெற்ற மூன்றாவது சாம்பியன் பட்டமாகும். ஏற்கனவே சுவிஸ் ஓப்பன் மற்றும் ஐதராபாத் ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SyedModiInternational #SameerVerma
    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் இந்திய வீரர் சமீர் வர்மா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். #SyedModiInternational #SainaNehwal #SameerVerma
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், இந்தோனேசிய வீராங்கனை ருசெல்லி ஹர்தவானும் மோதினர். இதில் 12 - 21, 21 - 7, 21 - 6 என்ற செட்களில் சாய்னா நேவால் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், இந்தோனேசிய வீரர் ட்வி வார்டோயோவும் மோதினர். இதில் 21 -13, 17 - 21, 21 - 8 என்ற செட்களில் சமீர் வர்மா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டியில், சாய்னா நேவால் சீன வீராங்கனை ஹான் யூஹியுடனும், சமீர் வர்மா சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவுடன் மோதுகின்றனர். #SyedModiInternational #SainaNehwal #SameerVerma
    தாமஸ் கோப்பை பைனல் பேட்மிண்டன் முதல் ஆட்டத்தில் இந்தியா 1-4 என பிரான்ஸிடம் தோல்வியைத் தழுவியது. #thomasCupFinal
    தாமஸ் கோப்பை பைனல் பேட்மிண்டன் தொடரில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா பிரான்ஸை எதிர்கொண்டது. மொத்தம் 5 பிரிவாக ஆட்டம் நடைபெற்றது. முதல் பிரிவில் ஒற்றையருக்கான ஆட்டத்தில் பி சாய் பிரனீத் பிரான்ஸின் பிரைஸ் லெவெர்டெஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய் ப்ரனீத் 21-7, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் நடைபெற்ற நான்கு பிரிவிலும் இந்தியா தோல்வியடைந்தது. இரட்டையர் பிரிவில் அர்ஜூன் எம் ஆர் - ராமச்சந்திரன் ஷ்லோக் 13-21, 16-21 என நேர்செட்டில் தோல்வியடைந்தனர்.


    சமீர் வெர்மா

    2-வது ஒற்றையர் பிரிவில் சமீர் வெர்மா 18-21, 22-20, 18-21 என கடும் போராட்டத்திற்குப் பின் லூகாஸ் கோர்வீயிடம் வீழ்ந்தார். 2-வது இரட்டையர் பிரிவில் அருண் ஜார்ஜ் - சன்யான் சுக்லா ஜோடி 10-21, 12-21 என நேர்செட் கணக்கில் வீழ்ந்தது. 3-வது ஒற்றையர் பிரிவில் லக்சயா சென் 20-22, 21-19, 19-21 என தோல்வியடைந்தார்.
    ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சமீர் வெர்மா, சாய் ப்ரனீத் தோல்வியடைந்து வெளியேறினார்கள்.
    ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 4-ம் நிலை வீரரான இந்தியாவின் சமீர் வெர்மா தகுதிச் சுற்றின் மூலம் முதன்மை சுற்றுக்கு முன்னேறிய சீனாவின் லு குயாங்சு-வை எதிர்கொண்டார். இதில் சமீர் 14-21, 6-21 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

    2-ம் நிலை வீரரான பி சாய் ப்ரனீத் ஹாங்காங்கின் லீ செயுக் யியு-வை எதிர்கொண்டார். இதில் ப்ரீனித் 21-23, 14-23 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.



    ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரவில் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா, சாய் உத்தேஜிதா ராவ் சுக்கா தோல்வியடைந்து வெளியேறிவிட்டனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் மானு ஆத்ரி - சுமீத் பி ரெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    ×