search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandeep Patil"

    ‘இங்கிலாந்து மண்ணில் தோல்வி பற்றி கவலைப் படாமல் இந்திய வீரர்கள் ஜாலியாக காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்’ என்று முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக அங்கு அணியின் திட்டம் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘கடந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற போதும் இப்படி தான் கேட்டார்கள். அதற்கு நான் இங்கிலாந்துக்கு சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக நடந்து சென்று காபி அருந்தி மகிழ்வேன். என்னுடைய சிந்தனை வித்தியாசமானது’ என்று பதில் அளித்தார்.



    அவரது இந்த கூற்றை இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சந்தீப் பட்டீல் கேலி செய்து சாடியுள்ளார். பட்டீல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்க்கும் போது விராட் கோலியின் கருத்தை இந்திய வீரர்கள் சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல் தான் தோன்றுகிறது. இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் அவர்கள் உண்மையிலேயே நல்ல காபி குடித்துவிட்டு உற்சாகமாக இருக்கிறார்கள் போலும்.

    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆனால் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் இணைந்து வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி 4 நாள் பயிற்சி ஆட்டத்தையும் 3 நாட்களாக குறைத்து விட்டார்கள். இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து கவாஸ்கர், தெண்டுல்கர், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் தங்களது கவலையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் அறிவுரையை இந்திய வீரர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.

    தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அசாதாரணமான திறமை கொண்டவர்கள். நான் தேர்வு குழு தலைவராக இருந்த போது அதை அறிவேன். ஆனால் இப்போது களத்தில் ஏதோ அறிமுக போட்டி போன்று பயந்து கொண்டு விளையாடுகிறார்கள். நான் முன்பு சொன்னது போல் கிரிக்கெட் ஒரு குரூரமான விளையாட்டு. இங்கு எதுவும் நிலையானது கிடையாது. முந்தைய நாள் ஹீரோவாக இருப்பவர்கள், இன்று ஜீரோவாகி விடுவார்கள். இந்த இங்கிலாந்து பயணத்தில் ஏற்கனவே 70 சதவீதம் போட்டி முடிந்து விட்ட நிலையில் நாம் இன்னும் காபி குடித்துக் கொண்டு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
    யோ-யோ தேர்வில் வீரர்கள் தேர்ச்சிபெற இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சந்தீப் பட்டேல் கேள்வி கூறியுள்ளார். #SandeepPatil #YoYoTest

    புதுடெல்லி:
     
    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சர்வேத போட்டிகளில் விளையாட யோ-யோ எனப்படும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா வெகு நாட்களாக போராடி தோல்வி அடைந்து வந்தனர்.
     
    சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. இதில் சுரேஷ் ரெய்னா,  ஐபிஎல் 2018 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு ஆகியோர் இடம்பிடித்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து அம்பதி ராயுடு இந்திய அணியில் இடம்பெற்றார்.

    இதையடுத்து நடத்தப்பட்ட யோ-யோ தேர்வில் டோனி, கோலி, ரெய்னா உள்ளிட்டோர் தேர்ச்சி அடைந்து அணியில் இடம்பிடித்தனர்.
    ஆனால் யோ-யோ தேர்வில் அம்பதி ராயுடு தோல்வி அடைந்ததால் இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனால் இந்த வாய்ப்பு சுரேஷ் ரெய்னாவுக்கு கிடைத்தது. இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.
     


    இந்நிலையில் யோ-யோ தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கென்யா அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சப்தீப் பட்டேல் கேள்வி எழுப்பியுள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க இரண்டு இன்னிங்சுகள் வழங்கப்படுவது போல யோ-யோ தேர்விலும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஒரு வீரர் அந்த தேர்வில், தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருக்கு சிறிது நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ மீண்டும் அடித்த வாய்ப்பை கொடுங்கள். 

    அம்பதி ராயுடு யோ-யோ தேர்வில் தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூர் போட்டிகளில் ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடிய அவரது திறைமையை, அரை மணி நேரம் தேர்வு மூலம் எப்படி கணக்கிடுவீர்கள். அதை வைத்து அவரை அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்?. இப்படி வீரர்களை நீக்காதீர்கள்,  என அவர் கூறியுள்ளார். #SandeepPatil #YoYoTest
    ×