search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandpaper Gate ball Tampering"

    முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் சமயத்தில் பால் டேம்பரிங் சம்பவம் உதவிக்காக அழுவதுபோல் உள்ளது என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது கேப் டவுன் டெஸ்டின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் கேப்டன் ஸ்மித்திற்கும், துணைக் கேப்டன் வார்னருக்கும் தெரியும் என்று விசாரணையில் தெரிந்தது.

    பந்து சேதப்படுத்திய குற்றத்திற்காக ஐசிசி ஒரு டெஸ்டில் விளையாட தடையும், அபாரதமும் விதித்தது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதித்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடைவித்தது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தண்டனையை பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விரும்பவில்லை. இது மிகப்பெரிய தண்டனை என்று குறிப்பிட்டனர்.

    இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும் நிலையில் பால் டேம்பரிங் விவகாரம் உதவிக்காக அழுவது என்று தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘கேப்டவுன் டெஸ்டின் போது நடைபெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளிப்படையாக இல்லை. இது குறித்து நீங்கள் யோசித்தால், அது கிட்டத்தட்ட உதவிக்காக அழுவது போல் உள்ளது. நாம் ஏதாவது செய்ய வேண்டும்.



    பந்து வீச்சாளர்கள் எது செய்தாலும் அது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு போட்டியை எளிதாக்கும் வகையில் அமைகிறது. பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகி விடுகிறது.

    தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக அளவில் சாதகமாக உள்ளது. மைதானத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது, இரண்டு புதிய பந்துகள், பவர்பிளே, நிர்ணயித்ததை விட பெரிய பேட் என நீண்டு கொண்டே செல்கிறது.

    பந்து வீச்சாளர் நோ-பால் வீசினால், அது ப்ரீ ஹிட்டாக மாறிவிடுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் விதிமுறை மாற்றப்பட்டதை நான் பார்க்கவே இல்லை’’ என்றார்.
    ×