என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Saneeshwarar"
- ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.
- அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.
கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனி பகவானின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.
ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.
சனி பகவானின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி பகவான் அமர்ந்தார்.
இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனி பகவானின் தலைமீது வைத்தார்.
பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி பகவான், தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி பகவான்.
அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.
- இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
- இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்
இவன் சூரியனுக்கும், சாயாதேவி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
இவனுக்கு நீலா, மந்தா என இரு மனைவியர் உண்டு என நூல்கள் கூறுகின்றன.
எமனால் தண்டிக்கப்பட்டு சனியினுடைய வலக்கால் ஊனமாயிற்று என்றும், தட்சயாகத்தினால் ஒரு கண் போயிற்று என்றும் வரலாறு கூறுகிறது.
இவன் சிவபெருமானை வழிபாடு செய்து குறைகள் நீங்கப் பெற்று, கிரகப்பதமும் பெற்றான்
சனி வழிபட்ட சிவாலயங்கள்:
நெல்லிக்கா,
கொள்ளிக்காடு,
திருநள்ளாறு
- அவர்களுடைய ஆசியால் தான் நாம் இப்பூவுலகில் அமைதியாக வாழ முடிகின்றது.
- நாம் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனீஸ்வர பகவானின் பூரண அருளையும் பெறலாம்.
நாம் தினமும் சாப்பிடும் முன் காகத்ததிற்கு ஒருபிடி உணவாவது வைத்தல் வேண்டும்.
ஏனெனில் நம்முடைய முன்னோர்களும், பித்ருக்களும், பித்ரு தேவதைகளுமே காகத்தின் வடிவில் வருவதாக ஐதீகம்.
அவர்களுடைய ஆசியால் தான் நாம் இப்பூவுலகில் அமைதியாக வாழ முடிகின்றது.
எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காகத்திற்கு தினந்தோறும் உணவு வைப்பது அவசியமாகும்.
மேலும் காகத்திற்கு உணவிடும் நல்ல பழக்கத்தினால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவ வழி ஏற்படுகிறது.
மற்றும் காகம் ஸ்ரீசனீஸ்வர பகவானின் பிரியமான வாகனம் என்பதால் நாம் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனீஸ்வரரின் தீய பலன்களில் இருந்து விடுபடலாம்.
அது மட்டுமின்றி, பகவானின் பூரண அருளையும் பெறலாம்.
- சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.
- ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.
சனிபகவான்
சங்கடந்தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா
மாமன்னர்களையும் மகாபுருஷர்களையும் கூட விட்டுவைக்காத சக்தி வாய்ந்தவர் சனிபகவான்.
இவர் அவதார புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரையும் தனது ஏழரை வருட அதிகாரத்தில் படாதபாடு படுத்தி வைத்தவராவார்.
அனைத்துக் கிரகங்களுக்கும் அனேக வித சக்திகளை அளித்தருளும் சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.
காசியம்பதியில் சிவபெருமானைப் பூஜித்து அதன் பலனாக நவக்கிரகங்களில் ஒருவாரகத் திகழும் பேறு பெற்றவர் அவர்.
நன்மைகளானாலும், தீமைகளானாலும் உறுதியுடன் செய்பவர் என்பதால் அனைவருக்கும் அவரிடத்தில் அச்சம் அதிகம்.
எவரது ஜாதகத்தில் சனி பலம் மற்றும், சுமுகமான ஆதிபத்தியத்துடன் விளங்குகின்றாரோ, அந்த ஜாதகர்கள் நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஜீவன பாக்கியத்தையும் பெற்று மகிழ்வார்கள்.
ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டக சனி, அஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநாள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு வருதல் அளவற்ற நன்மை தரும்.
காகத்திற்கு தினமும் உணவளித்தலும், ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.
செய்தொழிலில் கடுமையாக உழைத்து, மிகப்பெரிய பதவிக்கு வரக்கூடிய ஆற்றலை சனி ஒருவராலேயே அளிக்க முடியும்.
துலாம், மகரம், கும்பம் அகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தினால் ஆயுள், ஆரோக்கியம், செய்தொழில் அகியவற்றில் விசேஷ நன்மைகளை செய்வார்.
ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் மேஷ ராசியில் நீச்சம் பெற்றோ அல்லது லக்கினத்திலிருந்து 4 அல்லது 7 அல்லது 8 ம் இடங்களில் இருப்பின்,
அவர்கள் கண்டிப்பாகத் தினமும் சனிபகவானையும், பித்ருக்களையும் இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் அவசியம்.
வேறு விதங்களில் சனிபகவான் அனுகூலமில்லாமல் இருந்தாலும் பரிகாரம் மிகவும் அவசியம்.
சனிபகவானால் ஏற்படக்கூடிய ஏழு வகை தோஷங்களுக்கு மட்டும் பரிகாரம் கிடையாது.
இந்த ஏழு தோஷங்களுக்கு தொழில், ஆயுள் அல்லது ஆரோக்கியம் அகியவற்றைக் கடுமையாக பாதிக்கும்.
மற்ற தோஷங்கள் அனைத்தும் பரிகாரத்திற்கு உட்பட்டவையே.
சனிபகவான் திருவுள்ளம் மகிழ்ந்த பரிகாரத் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது, பிரசித்தி பெற்றது திருநாள்ளாறு ஆகும்.
வேத காலத்திலிருந்தே இந்த தர்ப்பாரண்யேஸ்வரர் சனிபகவானுக்கும் அருள் புரிந்த பேரருளாளர் ஆவார்.
இன்றும் சனி, தர்ப்பாரண்யேஸ்வரரைப் பூஜித்து வருவதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.
நைடத நாட்டின் மாமன்னான நளன் சனிபகவானையும், ஈஸ்வரனையும் பூஜித்துத் துன்பங்கள் விலகி, தன் மனைவி தமயந்தியுடன் இழந்த நாட்டையும், ஐஸ்வரியங்களையும் திரும்பப் பெற்று மகிழ்ந்த திருத்தலம் இது.
1.திருநாள்ளாறு சென்று, தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பிகை, சனிபகவான் மூலவரையும் தீபம் ஏற்றி தரிசித்துவிட்டு வரவும். (நளதீர்த்தத்தில் நீராடிய பின்பு தரிசித்தல் முறை)
2.பித்ரூ பூஜை, சனிபகவானுக்கு மிகவும் பிடித்த பூஜை அகும் என்று நாரத மகரிஷி கூறுவதாகப்புராண நூல்கள் கூறுகின்றன. பித்ருக்களுக்காகத் தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பதும் இதனை உறுதி செய்கிறது. காகம் சனியின் வாகனம் ஆகும்.
3.சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து, மாலையில் சனிபகவானுக்காகத் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வருவது.
4.சனிக்கிழமைகளில் உடல் ஊனமற்றவர்கள், எளியவர்கள் ஆகியோருக்கு வஸ்திரம் அளித்தும், உணவு கொடுப்பது.
5.எள் கலந்த சாதம் ஏழைகளுக்கு அளிப்பது.
6.வீட்டில் சனிக்கிழமைகளில், மாலையில் தீபம் ஏற்றி வைப்பது.
7.தினமும் சனி துதியையும், சனி காயத்திரியையும் கூறி வருதல் (108 தடவைகள் கூறுவது உத்தமம்)
இவற்றில் எது செய்தாலும், சனிபகவானுக்குப் பிரியமானதே.
- சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
- புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
ராகு கால பூஜைக்கான மலர்கள்
ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.
இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.
இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.
ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.
சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.
புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.
சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.
சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.
- கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
- சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.
நவக்கிரக தோஷ பரிகாரங்கள்
1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.
2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.
3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.
4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.
5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.
6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.
7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.
9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்