என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sangu abhishekam"
- காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வடமதுரை காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூஜை நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூஜை நடத்தப்பட்டது. அதன்பின்னர் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிமாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ராஜாங்க கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித நீராடி நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் மாரியம்மன், கைலாசநாதர், பகவதி, காளியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
- யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன.
- மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவகப் பெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகளை கொண்டு நாமம், ஓம், சிவலிங்கம் வடிவிலும் மற்றும் மலர்கள் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் மண்டல பூஜை நடந்தது. திருப்பணி குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி தலைமையில் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலையில் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.
இதில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பூர்ணா குதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வலம்புரி சங்குகளில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு மூலவர் சேவகப் பெருமாள் அய்யனார், சுயம்பு லிங்கேஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், பிடாரியம்மன் போன்ற கோவில் சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் சுமந்து கொண்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சேவகபெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் கும்பத்தில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கிராமத்தின் சார்பிலும், அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பிலும் அன்னதான விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் திருப்பணி குழு தலைவர் ராம அருணகிரி, , அடைக்கலம் காத்த நாட்டார்கள் சிங்கம்புணரி கிராமத்தார்கள், பரம்பரை ஸ்தானியம் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
- குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.
- பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.
பாம்பன் சுவாமிகளின் 94-வது குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இதையடுத்து திருவான்மி யூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பாம்பன் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காலை 10.30 மணிக்கு பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் பாராயனம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை விசேஷ பூஜை மற்றும் மேளக் கச்சேரி நடைபெற்றது.
இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு பாம்பன் சுவாமிகள் மற்றும் 6666 பாடல்கள் அடங்கிய புத்தகம் மேளம், நாதஸ்வர இசையுடன் கோவில் வளாகத்தில் உட்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை வரை 6 கால பூஜை சண்முக சகச்சிரநாம அர்ச்சனையுடன் ஓதுதல் நடக்கிறது.
நாளை (9-ந் தேதி) காலை சிறப்பு சோடச உபசார மற்றும் குமாரஸ்தல பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற உள்ளது.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு ஆகும்.
முருகனின் வழிபாடாக இவர் மொத்தம் 6666 பாடல்கள் இயற்றினார். இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். பாம்பன் சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி முக்தி அடைந்தார்.
மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவரது அருளை பெற்று வருகிறார்கள்.
- குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.
- அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் காலத்தில் குரு தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
இந்த வருடம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுவதையொட்டி வருகிற 23-ந்தேதி உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.
இந்த அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோமவாரத்தையொட்டி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்து வந்தது. நேற்று சோமவாரம் நிறைவையொட்டி தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையுடன் 1008 சங்குகளுக்கும் கும்ப பூஜையும், மகா பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் வலம் வந்து தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம்.
- அகத்தீஸ்வரர், அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பகவான் சிவனின் கண்ணீரே ருத்ராட்சத்தின் தோற்றம் என சிவபுராணம் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் நன்மைக்காக சிவன் பல ஆண்டுகளாக தியானம் செய்தார். தியானத்தில் இருந்து கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் ருத்ராட்சமாக ஈன்றெடுத்ததாக கூறப்படுகிறது.
சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்தில் இருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ராட்ச மாலை சிவனுக்கு பிரதானமானதாக விளங்குகிறது. கோவில்களில் ருத்ராட்சம் கொண்டு பந்தல் அமைத்தால் சன்னதி குளிர்ச்சியாக காணப்படும் என்பது ஐதீகம்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனகர்நாடு கோட்டை தெருவில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 5 ஆயிரம் ருத்ராட்சங்கள் கொண்டு பந்தல் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ருத்ராட்ச பந்தலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சாமி, அம்பாள் சன்னதியில் பொருத்தப்பட்டு வழிபாடு நடந்தது.
அதுமட்டுமின்றி சோமவாரத்தையொட்டி கோவிலில் புனித நீர் அடங்கிய சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அவற்றைக்கொண்டு சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அகத்தீஸ்வரர், அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நவக்கிரக சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 1,008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த சோமவார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல திருவெண்காடு அருகே நாங்கூர் நம்புவோருக்கு அன்பர் கோவிலில் சோமவார வழிபாடு நடந்தது. முன்னதாக சாமி, அம்மனுக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் விசேஷ தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கடங்கள் ஊர்வலமாக மகாலிங்க சாமி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வார சிறப்பு வழிபாட்டில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கட்டளை ஸ்தானிகம் அம்பலவாண தம்பிரான் சாமிகள், கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
காசிக்கு இணையான தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 1,008 சங்குகள் கொண்டு அபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தலவரலாறு கூறுகிறது. நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி இக்கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சிவலிங்க வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அதில் புனித நீர் நிரப்பப்பட்டு, யாக பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து சாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ரவி, நாடி நிபுணர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கழிவறை, குளியலறை ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்