என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sanjay"

    • ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'நீ வருவாய் என'.
    • இந்த படத்தில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்தார்.

    தமிழ் திரையுலகில் 'தொட்டால் சிணுங்கி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவயானி, காதல் கோட்டை உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

    'நீ வருவாய் என' படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ராஜகுமாரன். அந்த படத்தில் நடிகர்கள் அஜித், பார்த்திபன், நடிகை தேவயானி ஆகியோர் நடித்தனர். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அப்போது நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்து அந்த காதலும் வெற்றி பெற்றது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்துக்கு பிறகு தேவயானி நடிக்கவில்லை. கணவர் ராஜகுமாரனுடன் கிராமத்தில் குடியேறி விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். இந்த தம்பதிக்கு பிரியங்கா ராஜகுமாரன், இனியா ராஜகுமாரன் ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.


    ராஜகுமாரன்- தேவயானி

    ராஜகுமாரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'நீ வருவாய் என' படத்தின் 2-ம் பாகத் தில் நடிகர் விஜய் மகன் சஞ்சயையும், தேவயானி மகள் பிரியங்காவும் ஜோடியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

    இது பற்றி தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- திரை உலகில் நான் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. 15 வருடங்கள் போராடி தான் சினிமா துறையில் வெற்றி பெற்றேன்.


    சஞ்சய்- இனியா தேவயானி

    1999-ல் சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான "நீ வருவாய் என" படத்தை முதல் முதலாக இயக்கினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு 2-ம் பாகத்தை உருவாக்கும்படி பலரும் கூறி வந்தார்கள். இப்போது அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.

    இந்த படததில் நடிகர் விஜய் மகன் சஞ்சயை நடிக்க வைக்க திட்டம் உள்ளது. எனது மகள்களுக்கும் சினிமா ஆசை உள்ளது. எனவே சஞ்சய் ஜோடியாக எனது மகளை நடிக்க வைக்கவும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜதுரை இயக்கத்தில் சஞ்ஜெய் - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஓவியாவ விட்டா யாரு சீனி' படத்தின் விமர்சனம்.
    மனோஜ்குமார்-மீராகிருஷ்ணன் தம்பதியின் மகன் சஞ்ஜெய். தன் அப்பாவை போல மாத சம்பளத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் சுயமாக தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவரும், பக்கத்து வீட்டுப்பெண்ணான ஓவியாவும் காதலிக்கிறார்கள்.

    இந்த நிலையில், பணம் சம்பாதிப்பற்கான வழியை காட்டுவதாக கூறி ஆசை வளர்க்கிறார் ராதாரவி. மண்ணுளி பாம்பு, சஞ்சீவி குச்சி, நாகரத்னம், நட்சத்திர ஆமை ஆகியவை மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சஞ்ஜெய்யின் தொழிலதிபராகும் ஆசையை தூண்டிவிடுகிறார்.



    ராதாரவி-சஞ்ஜெய் இருவரும் சொல்வதை நம்பி, மாவட்ட கலெக்டரான அருள்தாஸ், போலீஸ் அதிகாரி ரவிமரியா உள்ளிட்டோர் ஏமாறுகிறார்கள். இதற்கிடையே வியாபாரியான சரவணனும், ஓவியாவை ஒருதலையாக காதலிக்கிறார். அவருக்கு சஞ்ஜெய்-ஓவியாவின் காதல் தெரியவர சஞ்ஜெய்யை கொலை செய்ய எண்ணுகிறார். மறுபக்கம் ஏமாந்தவர்கள் சஞ்ஜெய்யை துரத்துகிறார்கள்.

    இவர்களிடம் இருந்து சஞ்ஜெய் எப்படி தப்புகிறார்? தொழிலதிபர் ஆனாரா? ஓவியாவுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றும் சஞ்ஜெய் ஓவியாவுடன் காதல்-டூயட், ரவுடிகளுடன் சண்டை என ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார். ஓவியா டைட்டிலில் ஆரம்பித்து, படம் முழுக்க வருகிறார். பாடல் காட்சிகளில் உள்ளாடை தெரியும்படி ஆடி, கவர்ச்சி விருந்து கொடுக்கிறார். டைட்டிலைப்போல் பாடல்களிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் கூடுதல் அம்சமாக ராதாரவியின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் அமைந்திருக்கிறது. அவர் தொடர்பான காட்சிகளில், தியேட்டரில் கலகலப்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகின்றன. இன்னொரு வில்லனாக ரவிமரியா காமெடி செய்கிறார். கடைசி சண்டை காட்சியில், மிரட்டுகிறார். வியாபாரி சரவணன் திடீர் வில்லனாக மாறுவது, எதிர்பாராத திருப்பம். யானைப்பாகனாக செந்தில், சஞ்ஜெய்யின் தாத்தாவாக டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.



    மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குனர் ராஜதுரை. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் செம குத்து. ஈ.கே.நாகராஜின் ஒளிப்பதிவு ரசனை.

    மொத்தத்தில் `ஓவியாவ விட்டா யாரு சீனி' ஆசை.

    வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடிச் சென்ற விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். #Vijay #Sanjay
    விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது.

    அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் தனது மகன் சஞ்சய்யை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். திரையுலகில் மகனைக் களமிறக்கும் முயற்சி என்று அப்போது அது பேசப்பட்டாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. 



    தனது நண்பர்களுடன் இணைந்து தற்போது சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தக் குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. ‘ஜங்‌ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. #Vijay #Sanjay

    ×