என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Santhanam"

    • இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது.
    • ஆர்யா - சந்தானம் காம்போவில் உருவான இப்படத்தின் காமெடி ட்ராக்குக்கு என தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது.

    ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. 'சிவ மனசுல சக்தி' திரைப்படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷின் இரண்டாவது படமாகும்.

    'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் விஜயலட்சுமி, சித்ரா லட்சுமணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஆர்யா - சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது.

    யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக இது அமைந்தது. தல தளபதி சலூன்கடை ஓனராக வந்த சந்தானத்தின் காமெடி வொர்க் அவுட்டானது. குறிப்பாக ஆர்யா - சந்தானம் காம்போவில் உருவான இப்படத்தின் காமெடி ட்ராக்குக்கு என தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது. படத்தின் மிகப்பெரும் தூணாக இந்த காமெடி ட்ராக் அமைந்தது.

    இந்நிலையில் ஆர்யா நடிப்பில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படம் கோடை காலத்தில் மீண்டும் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.
    • இந்த படத்தின் புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

    சந்தானம்

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் சந்தானத்தின் பிறந்தநாளன்று ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

    ஏஜென்ட் கண்ணாயிரம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் 'ஒப்பாரி ரேப்' பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அம்மாவை இழந்த மனிதனின் கண்ணோட்டத்தில் உருவாகி இருக்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.
    • இந்த படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

    ஏஜென்ட் கண்ணாயிரம்

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் சந்தானத்தின் பிறந்தநாளன்று ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

    ஏஜென்ட் கண்ணாயிரம்

    இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஒரு பிரபல டிடக்டிவாக மாற சந்தானம் முயற்சித்து வருவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிக்’.
    • இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கிக்

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    கிக் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிக்' படத்தின் இரண்டாவது பாடலான 'கண்ணம்மா' பாடல் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘கிக்’.
    • இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கிக்

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    கிக்

    இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான 'கண்ணம்மா' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
    • இவருக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இன்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்

    உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி, "இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்" என்று தெரிவித்திருந்தார்.

    உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்

    உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்

    இந்நிலையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதிக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும், பந்தயங்களும், போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கணும். இந்தக் கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி உதயநிதி ஸ்டாலின்" என குறிப்பிட்டுள்ளார்.

    'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினுடன், சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    சந்தானம்

    இதைத்தொடர்ந்து சந்தானம் மீண்டும் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோவை தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் "இதன் பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிக்’.
    • இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கிக் பட டப்பிங் பணியில் சந்தானம்

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    கிக் பட டப்பிங் பணியில் சந்தானம்

    இந்நிலையில், 'கிக்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சந்தானம் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    • அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விக்னேஷ் சிவன் - அஜித்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    சந்தானம் - அரவிந்த் சாமி

    இந்நிலையில், ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘கிக்’.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கிக் 

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதை சந்தானம் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

    கிக் போஸ்டர்

    இந்நிலையில், 'கிக்' படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை 6.3 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    • இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘கிக்’.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கிக்

    ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதை சந்தானம் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

    கிக்

    'கிக்' படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிக்’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

    கிக்

    கிக்

    பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பாடல்கள் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    கிக்

    கிக்

    இந்நிலையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'கிக்' படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இணையத்தில் பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

    ×