search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarkar"

    • அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
    • அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.

    சென்னை:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், சர்கார் பட பாணியை தழுவும் சம்பவம் சென்னை சூளைமேட்டில் நடைபெற்றுள்ளது.

    சென்னையை சேர்ந்த பால்ராஜ் (67) என்பவர் பணி நிமித்தமாக லண்டனில் உள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக லண்டனில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்துள்ளார்.

    இதையடுத்து இன்று வாக்களிக்க சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தின் பாணியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வாக்களித்திருக்கிறார். #Sarkar
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி, தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.

    இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48-ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49 பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 



    இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

    நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக சர்கார் பட கதையை முன்வைத்து ‘49பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். #49P #Sarkar #LokSabhaElections2019 #ElectionCommission
    சென்னை:

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’.

    அமெரிக்காவில் இருக்கும் விஜய் தேர்தலில் தன் வாக்கை செலுத்துவதற்காக இந்தியா வருவார். ஆனால் அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘49 பி’ பிரிவைப் பயன்படுத்தி, தன் வாக்குரிமையைப் பெறுவார். பெரும்பாலானவர்களால் அறியப்படாத இந்த சட்டப்பிரிவு ‘சர்கார்’ படத்துக்கு பிறகு பரவலாக தெரியவந்தது. ‘நோட்டா’ வின் சட்டப்பிரிவான ‘49 ஓ’ போல, ‘49 பி’யும் மக்கள் கவனத்துக்கு வந்தது.

    நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக சர்கார் பட கதையை முன்வைத்து ‘49பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இந்த சட்டப்பிரிவு குறித்த சுவரொட்டி மூலம் இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

    அதில், ‘உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம் 49பி பிரிவை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ், “மகிழ்ச்சி, தேர்தல் ஆணையம் ‘49 பி’ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இது தொடர்பான அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    ஒருவர் தன்னுடைய வாக்கை செலுத்த வரும் போது அவர் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிந்தால் முதலில் அவருடைய அடையாள ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் அவரிடம் இருந்து 2 ரூபாயை கட்டணமாக பெற்றுக்கொண்டு அவர் கூறுவது உண்மையா என்று விசாரணை நடத்த வேண்டும்.

    விசாரணையில் அவர் வாக்கு கள்ள வாக்காக பதியப்பட்டு இருந்தால் அவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அவர் கூறியது பொய் என்று தெரிந்தால் அவரது 2 ரூபாய் கட்டணத்தை திருப்பி அளித்துவிட்டு அவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு வாக்களிக்கும்போது அந்த வாக்கு தனியாக வாக்கு சீட்டில் தான் பதியப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய அனுமதிக்க கூடாது.’

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #49P #Sarkar #LokSabhaElections2019 #ElectionCommission
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு வருகிற 20-ந் தேதி தொடங்கவிருக்கிறது. 

    படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Kathir

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் நயன்தாராவை தொடர்ந்து மேலும் இரு பிரபலங்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், படத்தில் விஜய்யுடன் இரண்டு இளம் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனிக்க வைத்த கதிரும், மேயாத மான், இந்துஜாவும் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்று செய்தி வந்துள்ளது.



    விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகள் கதையில் வருகிறதாம். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்க இருக்கிறது. படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Kathir #Indhuja

    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள பெட்டிக்கடை படத்தை விஜய்யின் சர்கார் படத்துடன் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சமுத்திரக்கனி அதனை தவிர்த்திருக்கிறார். #Pettikadai #Samuthirakani
    நடிகர் சமுத்திரகனி சமூக அக்கறை கொண்ட கதைகளை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் லட்சுமி கிரியே‌ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

    இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பெட்டிக்கடை என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட ஆசிரியராக நடிக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமுத்திரகனி பேசும்போது, பெட்டிக்கடைகளின் அழிவு அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார். 

    இயக்குனர் திடீர் என்று ஒரு நாள் வந்து சர்கார் படத்துடன் நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம். அவங்க சர்காரைப் பற்றி சொல்றாங்க. நாம சமூக விரோதிகளைப் பற்றி சொல்றோம்.



    ஒரே தேதியில் ரிலீஸ் செய்வோம் என்றார். நான் தான் அப்படியெல்லாம் வேண்டாம். நமக்கு என்று ஒரு தேதி வரும் அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன். அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை’. இவ்வாறு சமுத்திரகனி பேசினார். #Pettikadai #Samuthirakani

    அரசை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்று முருகதாஸ் வழக்கில் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. #Sarkar #ARMurugadoss
    சர்க்கார் படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதை தொடர்ந்து முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார், அப்போது நடந்த வாதம் வருமாறு:

    நீதிபதி:-சர்கார் படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பின்னர், தனி நபரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எப்படி செயல்பட முடியும்? ஏன் செயல்படுகிறீர்கள்?

    ஏ.நடராஜன்:-அரசு வழங்கும் இலவச பொருட் களை எரிக்கும் காட்சியில் படத்தின் இயக்குனர் முருகதாசே நடித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

    நீதிபதி:-இதில் என்ன உள்நோக்கம் உள்ளது. ஒரு திரைப்படம் என்றால், அதை திரைப்படமாகவே பார்க்க வேண்டும். ஒருவேளை படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் ஏதாவது இடம் பெற்றிருந்தால், அந்த காட்சிகளை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?



    கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தை பார்த்த நிலையில், தனி நபர் கொடுத்த புகாரின் பேரில் ‘மதம், இனம், மொழி சம்பந்தமான விரோத உணர்ச்சிகளை தூண்டியதாக இயக்குனர் முருகதாஸ் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்?

    அரசின் கொள்கைகளுக்கு பொதுமக்கள் எதிர் கருத்து தெரிவிக்கக்கூடாதா? அரசை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்காலத்தில் அரசை விமர்சித்து படம் எதுவும் எடுக்கக்கூடாது என்று இயக்குனரிடம் உத்தரவாதம் கேட்பது என்பது, அவரை அரசு மிரட்டுவதற்கு சமம்.

    இவ்வாறு வாதம் நடந்தது.
    சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. #Sarkar #ARMurugadoss
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு பின்னர் வெளியானது. 

    படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்பட்டன. 

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முருகதாசுக்கு எதிராக புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முருகதாசுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

    இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எப்.ஐ.ஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவராஜனிடம் பிரபலமானவர்கள் செய்தால் அது தவறு; பிரபலம் இல்லாதவர்கள் செய்தால் அது தவறில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். #Sarkar #ARMurugadoss
    சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

    இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின், இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.



    தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். #Sarkar
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்வதற்காக படக்குழு அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. #Vijay63 #Thalapathy63
    விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்வதற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.



    லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vijay63 #Thalapathy63

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 63 படத்திற்காக விஜய்யின் உடலை பிட்டாக மாற்ற சிறப்பு பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Thalapathy63 #Vijay63
    விஜய் 1984-ம் ஆண்டு வெற்றி என்ற படத்தில் சிறுவனாக அறிமுகமானார். அவர் கதாநாயகனாக நடித்த நாளைய தீர்ப்பு படம் இதே நாளில் தான் 1992 ஆம் ஆண்டு வெளியானது.

    எனவே விஜய் தனது சினிமா வாழ்க்கையில் 26 ஆண்டுகள் பூர்த்தி செய்ததை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.



    அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு நடிப்பது மட்டுமே இப்போதைக்கு முடிவாகியுள்ளது. கதைப்படி விளையாட்டு பயிற்சியாளராக நடிப்பதால் விஜய்யின் தோற்றம் இன்னும் பிட்டாக இருக்க வேண்டும் என அட்லி முடிவு செய்திருக்கிறார். 

    இதற்காக சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை வைத்து விஜய்யின் உடல் அமைப்பை மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. #Thalapathy63 #Vijay63

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #Vijay63 #Thalapathy63
    ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தில் இணையும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், படத்தில் இந்தி நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜியும் நடிக்கிறார்.

    விஜய்யுடன் `பைரவா’ படத்தில் டேனியல் பாலாஜி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vijay63 #Thalapathy63

    ×