search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sathasivam"

    கஜா புயல் பாதிப்பிற்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கேரள கவர்னர் சதாசிவம் ஒரு லட்சம் ருபாய் வழங்கினார். GajaCyclone #GajaCycloneRelief #Sathasivam
    திருவனந்தபுரம்:
        
    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.30 கோடி ருபாய் வரை நன்கொடை வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கேரள மாநிலத்தின் கவர்னர் சதாசிவம்  ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கியுள்ளார். #GajaCyclone #GajaCycloneRelief #Sathasivam
    கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா தொண்டர்கள் கொலையால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம், கவர்னர் அறிக்கை கேட்டுள்ளார். #Sathasivam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் அரசியல் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 கட்சியை சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்படும் செயல்களும் அரங்கேறி உள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராய் மற்றும் கண்ணூரிலும் அதிகளவு அரசியல் கொலைகள் நடந்துள்ளது.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பாபு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் சமேஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.


    இதனால் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகள் காரணமாக பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பாபு கொலையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அந்த கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல பாபு கொலை தொடர்பாக 4 பேர் மீதும் பாரதிய ஜனதா தொண்டர் சமேஜ் கொலை தொடர்பாக 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா நேரடியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அரசியல் கட்சி தொண்டர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேரள கவர்னர் சதாசிவம் அறிக்கை கேட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு இதேபோல அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபோது கேரள அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaCM #PinarayiVijayan #Governor #Sathasivam
    ×