என் மலர்
நீங்கள் தேடியது "sathya"
- போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது
- இப்படத்தில் இடம் பெற்ற வலையோசை என்ற பாடல் கிளாசிக் பாடல்களின் வரிசையில் இணைந்தது
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1988ல் வெளிவந்த சத்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இளையராஜா இசையில், இப்படத்தில் இடம் பெற்ற வலையோசை என்ற பாடல் கிளாசிக் பாடல்களின் வரிசையில் இணைந்தது.
அண்ணாமலை , பாட்சா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படம் இந்த சத்யா தான். 1985-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த அர்ஜுன் என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் தான் இந்த சத்யா.
கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமான சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு.
- பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு. Zee தமிழின் சத்யா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
2017 ஆம் ஆண்டு 'இவன் யார் என்று தெரிகிறதா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானார். பின்னர், பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 4-வது ரன்னரப்பாக வந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த சி லா சோவ் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
சி லா சோவ் திரைப்படம் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
- இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.
'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார்.
- தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மேலும், எம்எல்ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2016- 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் சத்யா அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, உதவி பொறியாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவு வைரலாகி வருகிறது.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சத்திய பிரியா - சதீஷ்
இந்த தனிப்படை போலீசார் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நள்ளிரவில் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த, கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
விசாரணைக்குப் பிறகு இன்று பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை ௧௫ நாட்கள் அதாவது 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

விஜய் ஆண்டனி
இந்நிலையில், மாணவி சத்திய பிரியா கொலை வழக்கு குறித்து நடிகர் விஜய் ஆண்டனியின் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
