என் மலர்
நீங்கள் தேடியது "Satwiksairaj"
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
- முதல் செட்டை லக்ஷ்யா சென் கைப்பற்றினார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் சியோ சியுங்-ஜே - காங் மின்-ஹியுக் இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சியோ சியுங்-ஜே - காங் மின்-ஹியுக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சாருடன் மோதினர். முதல் செட்டை சென் கைப்பற்றினார். அடுத்த 2 செட்டை அபாரமாக விளையாடிய குன்லவுட் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 22-20, 21-13, 21-11 என்ற கணக்கில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் தோல்வியடைந்தார்.
- மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களில் ஒருவரான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டியுடன் இணைந்து 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்ல்வெத் விளையாட்டு, 2023-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த இணை உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதித்தது. கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருக்கும் சாத்விக் சாய்ராஜ் இன்னும் அந்த விருதை பெறவில்லை. டெல்லியில் நடைபெறும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் போர்டு அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றுள்ள சாத்விக் கேல்ரத்னா விருதை நேற்று பெற்றுக்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது தந்தையும், முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமான காசி விஸ்வநாதன் (வயது 65) தனது மனைவி ரங்கமணி மற்றும் குடும்ப நண்பருடன் டெல்லி செல்வதற்காக ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் இருந்து ராஜமுந்திரி விமான நிலையத்திற்கு நேற்று காலை காரில் சென்றார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தகவல் அறிந்த சாத்விக் விமானம் மூலம் மாலை சொந்த ஊர் திரும்பினார். சாத்விக்கின் தந்தை உடல் தகனம் நாளை நடக்கிறது.