என் மலர்
நீங்கள் தேடியது "Sayyeshaa Seigal"
`என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #Suriya37 #KVAnand
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் லண்டனில் நடந்தது. சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருந்த கேவ்மிக் யு அரி வேறு படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக அபிநந்தன் ராமானுஜம் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
#Suriya37#TechnicalTeam
— Lyca Productions (@LycaProductions) June 26, 2018
Director - #KVAnand
Music Director - #HarrisJeyraj
Cinematographer - #AbhinabdanRamanujam
Art Director - #Kiran#Suriya37KickStarts 🎬🎬🎬🔥🔥🔥 pic.twitter.com/gYb6T2b5tj
லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand
செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் சூர்யா பிசியாக நடித்து வரும் நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Suriya37 #KVAnand
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் இன்று துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யா விரைவில் லண்டனில் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand
என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சூர்யா ஜோடி மற்றும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. #Suriya37 #Sayyeshaa
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.
இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், சூர்யா ஜோடி மற்றும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37 #Sayyeshaa
சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தணிக்கை குழுவில் படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. #Ghajinikanth #Arya
சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்த நிலையில், சன்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக இயக்கியிருக்கும் `கஜினிகாந்த்' படம் தணிக்கை குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளது. சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான `ஹரஹர மகாதேவகி', `இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு படங்களுக்கும் தணிக்கை குழுவில் `ஏ' சான்றிதழே கிடைத்த நிலையில், முதல்முறையாக அவரது படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா முன்னணி கதாபாத்திரத்திலும், கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன், சம்பத், ஆடுகளம் நரேன், உமா பத்மநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி இசை அமைத்திருக்கிறார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Ghajinikanth #Arya #Sayyeshaa
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் 37-வது படத்தில், சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #Suriya37
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.
இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிக்க, சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37