search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC dismisses"

    முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்து கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SCDismisses #TripleTalaq #TripleTalaqOrdinance
    புதுடெல்லி:

    இஸ்லாம் மதத்தில் ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அங்கு சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது.

    இருப்பினும், ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவசர சட்டமாக முத்தலாக் ஒழிப்பு சட்டம் 19-9-2018 அன்று அமல்படுத்தப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து மீண்டும் இருமுறை நீட்டிப்பும் செய்யப்பட்டது. இறுதியாக 21-2-2019 அன்று இந்த அவசர சட்டம் நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த அவசர சட்டம் செல்லுபடியாகத்தக்கதல்ல என கேரள மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    இதுதொடர்பாக இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இவ்விவகாரத்தில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.  #SCDismisses #TripleTalaq #TripleTalaqOrdinance
    இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. #SCdismisses #twochildnorm #fieldcandidates #SCdismissespil
    புதுடெல்லி:

    பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என உள்ளது. அதே நேரத்தில் இரு குழந்தைகள் உள்ளவர்கள் உறுப்பினர்களாக அல்லது தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர்கள் பதவி இழக்க நேரிடும் எனவும் அச்சட்டத்தில் உள்ளது.

    இந்நிலையில், இந்த சட்டவிதியை மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலிலும் அமல்படுத்த வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களை அரசியல் கட்சிகள்  தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.



    அரசு வேலைவாய்ப்பு, அரசாங்க நிதியுதவி மற்றும் மானியங்களுக்கும் இந்த அளவுகோலை வைக்க வேண்டும். மூன்று குழந்தைகளை பெற்றவர்கள் தேர்தல்களில் நிற்க தடை விதிப்பதுடன், அவர்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட வேண்டும்  என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #SCdismisses #twochildnorm #fieldcandidates  #SCdismissespil
    போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #BoforsCase #CBIAppeal #SupremeCourt
    புதுடெல்லி:

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய ராணுவத்திற்கு பீரங்கி வாங்குவதற்காக ஸ்வீடன் நாட்டின் ஆயுத தயாரிப்பு  நிறுவனமான போபர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதில்  ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

    இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம் மற்றும் இந்துஜா சகோதரர்களை விடுதலை செய்து 2005ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.



    இந்த தீர்ப்பு வெளியான 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. வலுவான ஆதாரங்கள் சிபிஐயிடம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில்,  சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனுவை இன்று தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டுக்கான காலம் கடந்துவிட்டதால் விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

    இதேபோல் பாஜக மூத்த தலைவர் அஜய் அகர்வாலும் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்தார். அவரது மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. #BoforsCase #CBIAppeal #SupremeCourt
    பி.எஸ்.என்.எல். இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரிய தயாநிதி மாறன் அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #DayanidhiMaran #SC
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  2004-06ம் ஆண்டு வரை  தொலைத்தொடர்பு துறை மந்திரியாக தயாநிதி மாறன்  பதவி வகித்தார்.

    அப்போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது இல்லத்துக்கு அருகே தனியாக தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் ஒன்று அமைத்து சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணைப்புகளைப் பயன்படுத்தி, அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த மோசடி தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல்.  பொதுமேலாளர் பிரம்மநாதன், துணை மேலாளர் எம். வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன்நெட்வொர்க் துணைத் தலைவர் கண்ணன், தொழில்நுட்ப ஊழியர் ரவி ஆகியோர் மீது சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அதே ஆண்டு அக்டோபர் மாதம் 7 பேரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மீதான மனுவின் மீதான விசாரணை, வாதங்கள் முடிந்தன. இதில் மாறன் சகோதரர்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

     பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை. ஆதலால், இந்த வழக்கில் இருந்து 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிபதி நடராஜன் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 25-ம்  வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது செல்லாது என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.



    இந்த உத்தரவை எதிர்த்தும் இவ்வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு மாறன் சகோதரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளுமாறு மனுதாரர்களை அறிவுறுத்தியுள்ளது. #DayanidhiMaran #SC

    ×