என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "school bus accident"
- மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.
- விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் மகேந்திர கர்க் மாவட்டம் நர்னால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 4 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
பள்ளி பஸ் உன்ஹானி கிராமத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே கிராம மக்கள், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 6 மாணவர்கள் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கூறும்போது, முதற்கட்ட விசாரணையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மரத்தில் மோதியுள்ளது. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார்.
விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கி உள்ளது. மேலும் விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
- பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சூலூர்:
கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடுபாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக பஸ் ஒன்று சென்றது.
பஸ்சை கார்த்திக் என்பவர் ஓட்டினார். நடுப்பாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை ஏற்றி விட்டு, பட்டணம் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றுவதற்காக கார்த்திக் பஸ்சை அங்கு ஓட்டி சென்றார்.
அப்போது ஜே.ஜே.நகர் பகுதி அருகே சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் இருந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், வேனில் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியான பஸ் டிரைவர் கார்த்திக், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் ஒரத்தில் இருந்த 12 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் கார்த்திக் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பள்ளத்தில் இருந்த பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கடந்த 9 வருடமாகவே இந்த சாலை இப்படி தான் உள்ளது. இதனை சீரமைத்து தருமாறு கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலத்தில் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது.
- கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர் ஆசிட் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.
பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆசிட் பாட்டில் சாய்ந்து விழுந்து, ஆசிட் கொட்டியது. இதனால் பஸ் முழுவதும் கடும் நெடியுடன் துர்நாற்றம் வீசியது. இதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பஸ்சினை நிறுத்திய டிரைவர், மாணவர்களை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து கிளினர் அம்ம களத்தூர் ராஜவேல் (36) உதவியுடன் ஆசிட் மீது நீரை ஊற்றி சுத்தம் செய்தார்.
தொடர்ந்து பஸ்சினை இயக்கிய டிரைவர், மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டார். வகுப்பறைக்கு சென்ற ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நேற்று மாலை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பள்ளி பஸ்சின் டிரைவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சின்னசேலத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.
இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டம் சங்ரா நகரில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து, மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் மலையில் இருந்து உருண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தினுள் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் டிரைவர் என 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HimachalAccident
ஷாரா மயீன்:
ஆப்பிரிக்க நாடான ஜோர்டானில் ஷாரா மயீன் என்ற சுற்றுலா தலத்துக்கு ஒரு பள்ளி பஸ் புறப்பட்டு சென்றது. அதில் 37 மாணவர்களும், 7 ஊழியர்கள் இருந்தனர். இவர்களுடன் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்தனர்.
இவர்கள் ‘டெட் சீ’ எனப்படும் சாக்கடல் பகுதியில் சென்ற போது, திடீரென வந்த வெள்ளம் இவர்களது பஸ்சை அடித்துச் சென்றது. இதில் பஸ்சில் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். 13 பேர் மட்டும் காயமின்றி உயிர் தப்பினர்.
மீட்பு பணியில் ஜோர்டான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அண்டை நாடான இஸ்ரேலின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே பக்ரைன் சென்ற ஜோர்டான் மன்னர் அப்துல்லா சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார். #Flood #schoolbusflood
திருவாரூர், ஜூலை.9-
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நன்னிலம், பூந்தோட்டம், பேரளம், குடவாசல் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி வாகனங்கள் மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அதன்படி இன்று காலை வெள்ள மண்டபம் என்ற இடத்தில் இருந்து 30 மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது அச்சுதமங் களம் என்ற இடத்தில் உள்ள சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுபப்பாட்டை இழந்து பஸ் ஓடியது. இதில் ரோட்டோரத்தில் உள்ள ஆலங்குடி வாய்க்காலில் பஸ் இறங்கி பக்கவாட்டில் சாய்ந்தது.
இந்த விபத்தில் பள்ளி பஸ்சில் இருந்த 20 மாணவ- மாணவிகள் மற்றும் டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர்.
பள்ளி பஸ் டிரைவர் மகேந்திரன், பள்ளி மாணவ- மாணவிகள் நிஷா(7), கார்த்திகா (9), ராம்குமார் (8), வைஷ் ணவி(8), உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நன்னிலம் அரசு மருத்துவ மனையில் சிகிச் சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
மேலும் நிஷா, வைஷ்ணவி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக் காக திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த விபத்து பற்றி நன்னிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். * * * பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் பள்ளி வேன்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்