என் மலர்
நீங்கள் தேடியது "Scrub typhus"
- திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரே வாரத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாடு முழுவதும் சுமார் 600 பேர் இத்தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் (உண்ணி காய்ச்சல்) என்ற நோய் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பரவி வரும் இத்தொற்றுப் பரவலைத் தடுக்கவும், இத்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்க திமுக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்க்ரப் டைபஸ் (உண்ணி காய்ச்சல்) என்ற பாக்டீரியா தொற்று தமிழ்நாட்டில் அதிகரிப்பதாக செய்திகள் வருகின்றன. "ரிக்கட்ஸியா" எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் இந்த தொற்று மனிதர்களுக்கு ஏற்படும் எனவும், இத்தொற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரே வாரத்தில் 8 பேர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாட்களாக சுமார் 600 பேர் இத்தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
மாநிலம் முழுவதும் பரவி வரும் இத்தொற்றுப் பரவலைத் தடுக்கவும், இத்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுப்பதுடன், இத்தொற்றிற்கான மருந்துகள் உரிய அளவில் இருப்பு உள்ளதை உறுதிசெய்யுமாறு முதலமைச்சர் முக ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- ‘ஸ்கரப் டைபஸ்' என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும்.
- ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
சென்னை:
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'ஸ்கரப் டைபஸ்' என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு 'ஸ்கரப் டைபஸ்' நோய் ஏற்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் 'ஸ்கரப் டைபஸ்' நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது.
விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறிய முடியும். 'ஸ்கரப் டைபஸ்' காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்சிசைக்ளின் ஆகிய நோய் எதிர்ப்பு மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.
அதன் பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, இதுகுறித்து பொதுமக்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.