என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » second oneday match
நீங்கள் தேடியது "second oneday match"
மவுண்ட் மவுங்கானுவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #NZvSL #ThisaraPerera
மவுண்ட் மவுங்கானுய்:
நியூசிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கொலின் முன்றோ சிறப்பாக ஆடி 87 ரன்னில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 90 ரன்னில் அவுட்டானார். கடைசி வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் நீசம் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் 4 வீரர்கள் ரன் அவுட்டாகினர்.
அதன்பின், 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர். குணதிலகா பொறுப்புடன் ஆடி 71 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் திசாரா பெரேரா வெற்றிக்காக போராடினார். அவர் அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 13 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை 46.2 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக இலங்கை வீரர் திசாரா பெரேரா தேர்வானார். #NZvSL #ThisaraPerera
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #AFGvIRE
ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய டி-20 தொடரில் ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் முன்னிலை வீரர்கள் சொதப்பினர். நஜ்புல்லா சத்ரான் 42 ரன்களும், கேப்டன் அஷ்கர் ஆப்கான் 39 ரன்களும், ரஹ்மத் ஷா 32 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி சார்பில் டிம் முர்டாக் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. ஆண்ட்ரூ பால்பிரினி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னிலும், பால் ஸ்டிரிலிங் 39 ரன்னிலும் அவுட்டாகினர்.
சிமி சிங் இறுதிவரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 36 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். அயர்லாந்து அணி 43.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், மொகமது நபி 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை கைப்பற்றும் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. #AFGvIRE
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X