என் மலர்
நீங்கள் தேடியது "secretly"
புதுச்சேரி:
புதுவை மேரி உழவர் கரையில் சாலையோரமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் குளியல் அறை சாலையையொட்டி அமைந்து இருக்கிறது.
இன்று காலை 5 மணி அளவில் அதன் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மேல் ஏறி குளியல் அறை ஜன்னல் வழியாக வாலிபர் ஒருவர் எட்டிப் பார்த்து கொண்டு இருந்தார்.
குளியல் அறையில் அந்த வீட்டின் பெண் குளித்ததை அவர் ரகசியமாக பார்த்ததாக தெரிகிறது. ஜன்னல் கண்ணாடி வழியாக யாரும் பார்க்க கூடாது என்பதற்காக அதில் பேப்பரை ஒட்டி வைத்திருந்தனர். அதை கிழித்து விட்டு ரகசியமாக பார்த்தார்.
அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து விட்டு கூச்சலிட்டனர். உடனே அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு ஓடி விட்டார்.
ஆனால், அவரது மோட் டார் சைக்கிளில் போதிய பெட்ரோல் இல்லை. எனவே நடுவழியில் நின்று விட்டது. மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அவர் சென்று விட்டார். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.
சில மணி நேரம் கழித்து ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிகொண்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அங்கு வந்தார். பெட்ரோலை மோட்டார் சைக்கிள் டேங்கரில் ஊற்றி விட்டு ஸ்டார்ட் செய்வதற்கு முயற்சி செய்தார்.
அப்போது குளியல் அறையை எட்டிப்பார்த்தது அந்த வாலிபர்தான் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர்.
எனவே, பொது மக்கள் திரண்டு வந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர் ரெட்டியார் பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
அந்த வாலிபர் யார்? என்ற விவரத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.