என் மலர்
நீங்கள் தேடியது "Seema Raja"
யுடர்ன் மற்றும் சீமராஜா படத்தை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா, தேசிய விருது வாங்க வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். #Samantha
சமந்தா நடிப்பில் யு டர்ன், சீமராஜா 2 படங்களும் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து சமந்தா பேன்டசி காமெடி படம் ஒன்றில் 70 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கிறார்.
2014-ம் ஆண்டு வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் வெற்றிபெற்ற ‘மிஸ் கிரானி’ படத்தின் ரீமேக்தான் இப்படம். பிரபல தெலுங்குப் பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.

திருமணத்துக்கு பின்னும் கூட தனது படங்கள் வெற்றி பெறுவதால் தன்னுடைய கதாபாத்திர தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார். முக்கியமாக தனக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிக்கிறார். 70 வயது மூதாட்டியாக நடிக்க சம்மதித்து இருப்பது தேசிய விருது வாங்க வேண்டும் என்ற ஆசையில் தான் என கூறுகிறார்கள்.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வடசென்னை’ திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் சிவகார்த்திகேயன் படமும் வெளியாக இருக்கிறது. #Dhanush #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த ப்ளாஷ்பேக் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஜூன் 19ம் தேதி முழுவதுமாக முடிவடைய இருக்கிறது. இதனையடுத்து, டீசர், டிரைலர்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இதே தினத்தில்தான் தனுஷின் ‘வடசென்னை’ படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #Sivakarthikeyan #Seemaraja