search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seethakaathi"

    விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படம் இன்று ரிலீசாகியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு குறித்து பேசிய விஜய் சேதுபதி காரணமே தெரியாமல் ரூ.11 கோடி ரூபாயை இழந்ததாக கூறினார். #VijaySethupathi #Seethakaathi
    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது:

    2018-ம் ஆண்டு எப்படி போனது?

    இந்த ஆண்டு திருப்திகரமாகத்தான் இருந்தது. ஆனால் பணரீதியாக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தேன். காரணங்கள் என்ன என்றே சரியாகத் தெரியாமல் ரூ.11 கோடி இழந்தேன்.

    ‘சீதக்காதி’ உங்களது 25-வது படம். உங்கள் நடிப்பு வாழ்க்கையில் இது எவ்வளவு முக்கியமான தருணமாக இருக்கிறது?

    நமது தொழில், நமது பங்கு குறித்து அதிகமாக சந்தோ‌ஷப்பட்டால் நாம் மாறிவிடுவோம் என நான் நினைக்கிறேன். எனது அடுத்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ற நிலையில் நான் இருப்பதே எனக்குப் பெரும் மகிழ்ச்சி. நடிப்பு எளிதான வேலை அல்ல. அதை எளிமையாக மக்களுக்குக் கொண்டு செல்வதென்பது மிகப்பெரிய சவால்.

    ஒரு நடிகராக, எப்போதும் சினிமாவைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பீர்களா?

    ஒருகட்டத்துக்குப் பிறகு எல்லோருமே அவர்கள் தொழிலோடு ஒன்றிவிடுவார்கள் என நான் நினைக்கிறேன். நடித்து முடித்த பிறகு மானிட்டர் பார்க்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. நான் எனது ஆடை வடிவமைப்பாளரைப் பார்க்கச் சொல்லி, அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். சில நேரங்களில், அது நன்றாக வந்திருக்கிறது என்று அவர் சொன்னாலும் கூட, அதில் நான் நன்றாக நடித்திருக்கிறேனா என்பதை இரவில் தூங்கும்போது நினைத்துப் பார்ப்பேன்.



    ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்திருக்கிறீர்கள். அவருக்கு எதிராக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

    ரஜினி போன்ற பெரிய நடிகருக்கு எதிராக வில்லனாக நடிக்கும்போது, நாம் வேகமாக இருக்க வேண்டும். அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல நடிக்க வேண்டும். அவருடன் நடிப்பது என்பது நடிப்புக்கான வகுப்பில் கற்றது போல இருந்தது.

    இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் நடித்த அனுபவம்?

    அவர், தனது தொழிலை மதிக்கும் ஒரு உண்மையான மனிதர். எந்தப் படத்திலும் முழு மனதுடன் நடித்தால், அது ரசிகர்களின் மனதைத் தொடும் என்பதை அவர் ஆழமாக நம்புகிறார்.

    நீங்கள் சினிமாவில் நுழையக் காரணம், ரசிகர்களின் கைதட்டல் மட்டும்தானா?

    கண்டிப்பாக... ‘வர்ணம்’ என்றொரு படம். சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவனாக நான் நடித்தேன். அதில் முதல் காட்சியே என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்றது. நான் அதில் நடித்து முடித்ததும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கைதட்டினர். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனென்றால், என்னால் நடிக்க முடியும் என்று நான் உணர்ந்தது அன்றுதான். நான் நடிப்பதால்தான் அந்தக் குழுவில் இயக்குநரில் ஆரம்பித்து லைட்மேன் வரை வேலைசெய்ய முடிகிறது என்பதை எனக்கு நானே பலமுறை சொல்லிக்கொண்டேன். #VijaySethupathi #Seethakaathi

    சங்கம் ஒதுக்கிய தேதியில் திமிரு புடிச்சவன், சீதக்காதி படங்களை திரையிடாததற்கு சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த இரு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தடைவிதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. #ProducersCouncil
    பெரிய படங்களால் சிறுபட்ஜெட் படங்களின் வசூல் பாதிக்கிறது. புதுமுக நடிகர்கள் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்ததால், படங்கள் வெளியாகும் தேதிகளை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்து வாரம்தோறும் தேதிகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தது.

    விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தை தீபாவளிக்கு வெளியிட சங்கத்தில் தேதி ஒதுக்கினர். ஆனால் அந்த படத்தை தீபாவளிக்கு திரையிடாமல் ஒரு வாரம் கழித்து திரையிட்டனர். இதனால் அதே தேதியில் வெளியான சிறிய படங்களின் வசூல் பாதித்ததாக அந்த படங்களின் தயாரிப்பாளர்களான நடிகர் உதயா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் குற்றம்சாட்டி தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் விஜய் ஆண்டனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெறாமல் விஜய் ஆண்டனி படங்களில் திரைப்பட தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது என்று பெப்சிக்கு பட அதிபர்கள் சங்கம் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.



    இதுபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படத்தை டிசம்பர் 14-ந்தேதி திரையிட சங்கம் தேதி ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த படத்தை டிசம்பர் 21-ந்தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதனால் விஜய் சேதுபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் வற்புறுத்தப்பட்டு உள்ளது. #ProducersCouncil #VijayAntony #ThimiruPudichavan #VijaySethupathi #Seethakaathi

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில் நடித்திருக்கிறார். #VijaySethupathi
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சீதக்காதி’. இப்படத்தில் மிகப்பெரும் நடிகர்கள் நடித்துள்ளனர், அவர்களின் கதாபாத்திரங்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார்கள். டிசம்பர் 20ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை கொண்ட படத்தில் வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிப்பது வியப்பில் ஆழ்த்தியள்ளது. நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். 

    இவருடைய கதாபாத்திரம் குறித்து இயக்குனர் பாலாஜி தரணீதரன் கூறும்போது, ‘உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம். திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது. 

    இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம். அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை. 



    ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார். குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார். ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் இருக்கும், பேசப்படும் என்றார். 

    பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் ‘சீதக்காதி’ படத்தை தயாரித்திருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் தோற்றம் மூலம் படத்தின் மீதான நமது ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
    பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Seethakaathi
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது `96', `சூப்பர் டீலக்ஸ்', `ஜூங்கா', `சீதக்காதி', `செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 96 படத்தின் டிசர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    இதையடுத்து விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு ‘சீதக்காதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்கள்.

    தற்போது இப்படக்குழுவினர், ‘சீதக்காதி’ படத்தின் மேக்கிங் டீசரை ஜூலை 15ம் தேதி சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 



    பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பார்வதி மேனன், காயத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கிறார்.
    ×