என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sehwag"

    அறிமுக போட்டியில் பிரித்விஷா பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளதால் அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். #ravishastri

    மும்பையை சேர்ந்த பிரித்விஷா அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். குறைந்த வயதில் அறிமுக போட்டியில் சதம் அடித்து இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    பிரித்விஷா பயமின்றியும், பதற்றமின்றியும் அருமையாக விளையாடினார். அவரது ஆட்டத்தை தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர்.

    பிரித்விஷாவை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

    பிரித்வி ஷா அருமையாக விளையாடினார். அவர் அறிமுக போட்டியில் பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங்கில் தெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்றார்.


    பிரித்விஷாவுக்கு இது தனி சிறப்பு வாய்ந்த நாளாக இருந்திருக்க வேண்டும். அறிமுக டெஸ்டில் சதம் அடித்துள்ளார். ரஞ்சி கோப்பை, துலிப் டிராபி ஆகியவற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த அவர் சர்வதேச போட்டியிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார். ஆனால் அவரை ஷேவாக்குடன் ஒப்பிடக் கூடாது.

    பிரித்விஷாவை அவரது உலகத்தை பார்க்க விட வேண்டும். அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. தென் ஆப்பிரிக்க மண்ணிலும் ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவர் ஷோவாக்குடன் ஒப்பிட கூடாது என்றார்.

    சுரேஷ் ரெய்னா கூறும் போது, பிரித்விஷா கடினமாக உழைக்கும் வீரர். அவரது பேட்டிங் எனக்கு ஷேவாக்கை ஞாபகப்படுத்துகிறது. அவரது ஷாட்டுகள் உயர்தரமானது. அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. #PrithviShaw #ravishastri #sachin #sehwag 

    சிறந்த வெளிநாட்டு அணியாக இருக்கும் என்று வாய் ஜாலம் காட்டினால் மட்டும் போதாது, செயலில் காட்ட வேண்டும் என்று ரவி ஷாஸ்திரி மீது சேவாக் சாடியுள்ளார். #ENGvIND
    சவுத்தாம்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்குப்பின் முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரியை முன்னாள் வீரர் சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்திய அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்று 2-1 என்றகணக்கில் இருந்தன. இந்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 245 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

    கடந்த 2011, 2014-ம் ஆண்டுகளில் இங்கிலாந்து வந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்திருந்த நிலையில், இந்த முறை கோலி தலைமையில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, புஜாரா, ரகதனே ஆகிய 3 வீரர்களைத் தவிர எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேட் செய்யவில்லை. பந்துவீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு புறப்படும் முன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகிலேயே எந்த நாட்டுக்குச் சென்றாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடக் கூடிய அணியாக இந்திய அணி திகழ்கிறது என்று தெரிவித்திருந்தார்.



    இதைக் குறிப்பிட்டு சேவாக் சாடியுள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘உலக அளவில் வெளிநாடுகளில் சென்று சிறப்பாக விளையாடக்கூடிய அணி இந்திய அணி என்று பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி பேச்சில் மட்டும்தான் கூறுகிறார். ஆனால், பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை. வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படும் அணிகள் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவன் மூலம் உருவாக்கப்படுகிறது.  ஓய்வறையில் அமர்ந்து கொண்டு பேசுவதால் உருவாக்கப்படுவதில்லை.

    ஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம். ஆனால் வீரர்களின் பேட் பேசவில்லை என்றால், ஒருபோதும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் அணியாக முடியாது’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் விளையாட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியடைந்தது. டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    தற்போது முடிந்துள்ள 3 டெஸ்டில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளைமறுநாள் (30-ந்தேதி) சவுதாம்ப்டனில் தொடங்குகிறது. இந்த ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா இரண்டு அஸ்வின், ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான்காவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா அஸ்வின் உடன் இணைந்து விளையாட வேண்டும். தலைசிறந்த இவர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியும்.

    அஸ்வின் உடற்தகுதி பெறாவிடில், ஒரு சுழற்பந்து வீச்சுடன் விளையாடினால் அது இந்தியாவிற்கு சிக்கலானதாக இருக்கும். இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். அஸ்வின் உடற்தகுதி பெற வாழ்த்துகிறேன். இரண்டு பேருடன் களம் இறங்க வேண்டும். இரண்டு பேரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அது இந்தியாவிற்கு அதிக வலுவூட்டும்’’ என்றார்.
    சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிக்கு திரும்ப நினைக்கையில், இந்தியா பசித்த புலிபோல் விளையாடும் என சேவாக் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 30-ந்தேதி தொடங்கும் (வியாழக்கிழமை) சவுத்தாம்ப்டன் டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்ற நினைக்கும். அதேவேளையில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய விரும்பும்.

    நான்காவது டெஸ்டில் இந்தியா பசித்த புலியை போன்று விளையாடும் என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதை வைத்து பார்க்கும்போது 4-வது டெஸ்டில் இந்தியா நான்காவது நாள் ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அவர்கள் வெற்றி உத்வேகத்தில் உள்ளனர். ஆனால், இங்கிலாந்து அணியும் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். ஆனால், இந்தியா பசித்த புலிகள் மாதிரி. அவர்கள் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவார்கள்.



    தற்போதுள்ள வேகப்பந்து யுனிட் மிகவும் சிறப்பானது. இதுவரை நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி டெஸ்ட் பிளாட் டிரக். அதில் கூட 20 விக்கெட் வீழ்த்த முடியும்.

    ஆஸ்திரேலியா ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் சிறந்ததாக இருக்கும். அங்கு 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், வீரர்கள் பெயர்கள் வரலாற்றில் எழுதப்படும். இந்திய பந்து வீச்சாளர்கள் அவர்களது பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    டெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Sehwag #DDCA
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் புதிய நபர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுக்குழு போன்ற விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன.

    இந்நிலையில் டெல்லி அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், காம்பீர் சிறப்பா அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.



    காம்பீர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் தேர்வாளர்களை முடிவு செய்வதில் இவரது பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை மோசமானது. இதனால் இந்தியா விளையாடக் கூடாது என்று சேவாக் சாடியுள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கடெ் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் என 6 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 11-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் இந்தியா 19-ந்தேதி முதல் ஆட்டத்தில் வியைாடுகிறது.

    இந்த தொடர் 15-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் அடுத்தடுத்த நாள் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாடும் அடுத்ததடுத்த நாட்களில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்ட அட்டவணை பார்த்தும் நான் அதிர்ச்சியடைந்தேன். இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டிகளில் கூட இரண்டு நாட்கள் இடைவெளி இருந்தது.



    துபாயில் கடுமையான வெயில் தாக்கம் இருக்கும். இதில் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் விளையாட வேண்டியுள்ளது. ஆகவே. இது சரியான அட்டவணை இல்லை.

    ஏன் ஆசியக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூக்குரலிட வேண்டும். ஆசிய கோப்பையில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அணிகள் உள்நாடு அல்லது வெளிநாடு தொடருக்கு தயாராக வேண்டியதுதான். அடுத்தடுத்த நாட்களில் விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே கடினமானது.
    ×