search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling alcohol"

    • சட்ட விரோதமாக மது விற்பதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மது விற்று கொண்டிருந்த ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் உக்கரம் வாய்கால் கரை அருகே சட்ட விரோதமாக மது விற்பதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போ து அங்கு இருசக்கர வாகனத்தில் மது விற்று கொண்டிருந்த உக்கரம் பகுதியை சேர்ந்த ராமசாமியை (வயது 65) போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை பறி முதல் செய்த இன்ஸ்பெக்டர் துரைபாண்டி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

    திருச்சி மாவட்டம் துறையூர் முருகம்பட்டியை சேர்ந்த வீரபாண்டியன் (42) என்பவர் பெருந்துறை பகு தியில் அரசு மதுபானங்களை விற்று கொண்டிரு ந்தார்.

    தகவலறிந்த பெரு ந்துறை போலீசார் வீரபா ண்டியனை கைது செய்து அவரிடமிருந்த 6 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானிசாகர் பஸ் ஸ்டாப் அருகே அதே பகுதி யை சேர்ந்த வெங்கடேஷ் (42) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தார்.

    தகவலறிந்த பவானிசாகர் போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜூ (31). இவர் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் அருகே மது விற்று கொண்டிருந்தாக ஈரோடு தெற்கு போலீசார் பாண்டியராைஜ கைது செய்தனர்.

    பின்னர் அவரி டமிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி அய்யம்பா ளையம் பகுதியை சேர்ந்த குமார் (62) என்பவர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்று கொண்டிருந்தார். தகவலறிந்த கவுந்தபாடி போலீசார் குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரி டமிருந்த 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னிமலை-காங்கே யம் சாலையில் ஈ.சி.ஆர் நகரை சேர்ந்த தண்டபாணி (40) என்பவர் போதை பொருட்களை விற்றதாக சென்னிமலை போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசார் தண்டபாணியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது விற்றதாக வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர்.
    • மது அருந்த அனுமதித்தாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிங்கிரிபாளையத்தில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கோவை சூலூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ரகுபதி (31) என்பவரை போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு கொல்லம்பாளையத்தில் மது விற்றதாக பச்சப்பாளியை சேர்ந்த வெங்கடேஷ்(49) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறையில் மது விற்றதாக கவுரிசங்கர் (31) என்பவரை போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக புளியம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43), பாண்டியன் (72), பெருந்துறையில் தனபாலன் (34), பழனிசாமி (60), ஈஸ்வரன் மனைவி புஷ்பா (53) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • தாலுகா போலீசார் ரோந்து சென்றனர்.
    • அப்போது சட்டவிரோதமாக மது விற்ற விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு சட்டவிரோதமாக மது விற்ற திங்களூா் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சோலார் டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டு சட்டவிரோதமாக மது விற்ற சாஸ்திரி நகரை சேர்ந்த சிவக்குமாரை தாலுகா போலீசாரும்,

    ஈரோடு ரெயில்நிலையம் அருகில் மதுவிற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜூவை (31) சூரம்பட்டி போலீசாரும்,

    சூளை குப்புக்காடு பகுதியில் மது விற்ற சுக்கிரமணியன் வலசை சேர்ந்த சொக்கலிங்கம் (47) என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசாரும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு வடக்கு, கோபி, அந்தியூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து 4 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 33 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கடத்தூர் போலீசார் சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
    • அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டி பாளையம் அடுத்த சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கு இருந்து தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்று வளைத்து பிடித்தனர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவ ட்டம் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (41) என்பதும், அவர் சிங்கிரிபாளையம் பகுதியில் தங்கி அனுமதி யின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 450 மதிப்புள்ள 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அதை வெளியிடத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய 5 சப்.டிவிசன்களுக்குட்பட்ட போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    • பவானி திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
    • போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி குட்ட முனிய ப்பன் கோவில், கூத்தம்பட்டி பகுதியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு திருமண மண்டபத்தின் அருகில் உள்ள மறைவான இடத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் பவானி, திருவள்ளுவர் நகர் பகுதிைய சேர்ந்த சிங்காரவேலு (45) என்பதும் அரசு அனுமதி இன்றி அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து சிங்காரவேலுவை போலீ சார் கைது செய்து அவரிடம் இருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பவானி போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், பவானி அருகில் உள்ள எலமலை கிராமம், குள்ளம்பாறை பகுதியில் சித்தோடு போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குள்ளம் பாறை பகுதியில் மறைவான இடத்தில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த கந்தசாமி‌ (73) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்து 7 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஒரத்தநாட்டில் மதுபானம் பதுக்கி விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதையொட்டி அங்கு செயல்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த 18 நாட்களாக மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஒரத்தநாடு பகுதியில் கடைகளில் பதுக்கி மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. 

    இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை மது விலக்குப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரத்தநாடு மன்னை முக்கம் பகுதியில் டீக்கடை சின்னையன் (வயது 58), டிபன் சென்டர் சுகுமார் (40), அண்ணாநகர் அலமேலு (45) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்த லிங்கம் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி தென்னமநாடு மாரியப்பன் கோவில் சசிகுமார் (40) என்பவரையும் கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி பகுதியில் மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் கடை உள்பட அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் சிலர் மொத்தமாக மதுபாட்டில்களை கொள்முதல் செய்து பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.

    கண்டமனூர் சப்-இன்ஸ் பெக்டர் சுல்தான் பாட்சா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தெற்கு தெருவில் வீட்டில் பதுக்கி மது விற்ற ரத்தினம்மாள், ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் மயிலாடும்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ரோந்து சென்றபோது சுடுகாடு அருகே மது விற்ற குமணன் தொழுவை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து 199 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது வைகை அணை பகுதியில் மது விற்ற ஜெயமங்கலத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடுகூர்கோனார்குளம் அருகே மறைத்து வைத்து ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மது பாட்டில்களை விற்றது கடுகூரை சேர்ந்த ஆதிமூலம் (வயது 44) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் மண்ணுழி சுடுகாடு பகுதியில் மது விற்ற அண்ணா நகர் காலனி தெருவை சேர்ந்த சுப்ரமணியன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் 2 பேரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
    உடையார்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்ற மூதாட்டி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தத்தனூர் பொட்டகொல்லை கிராமத்தை சேர்ந்த அன்புமணி (வயது 48) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அன்புமணியை கைது செய்து, அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு பெண் மறைத்து வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுபாட்டில்களை விற்றது ஸ்ரீபுரந்தான் தெற்கடி தெருவை சேர்ந்த பார்வதி (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பார்வதியை கைது செய்து, அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தா.பழூரில் மது விற்ற இடையாறு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் (43) என்பவரை தா.பழூர் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வாணியம்பாடியில் தொடர்ந்து சாராயம் விற்ற வாலிபர் 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வாணியம்பாடி நேதாஜிநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் திருப்பதி (வயது 24). சாராயம் விற்பனை செய்ததாக வெங்கடேசன் மீது வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்ட திருப்பதி கடந்தாண்டு குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் இருந்து திருப்பதி வெளியே வந்தார். அதன்பின்னரும் அவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் நேதாஜி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பெரிய கேனுடன் வந்த திருப்பதியை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த கேனில் சாராயம் இருந்தது. போலீசார் விசாரணையில், மோட்டார்சைக்கிளில் சாராயத்தை திருப்பதி கடத்தி வந்து நேதாஜி நகரில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து திருப்பதியை போலீசார், கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி தொடர்ந்து சாராய விற்பனை செய்து வந்ததால், அவரை 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன், பரிந்துரை செய்தார். அதன்பேரில் திருப்பதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

    அதையடுத்து, அதற்கான ஆணையின் நகல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் திருப்பதியிடம் நேற்று போலீசார் வழங்கினர். 
    ×