என் மலர்
நீங்கள் தேடியது "sends back"
பாகிஸ்தான் எல்லையில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறுவனுக்கு இந்திய ராணுவத்தினர், பரிசுகள் வாங்கி கொடுத்து பத்திரமாக வழி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து கடந்த 24 ஆம் தேதி, மொகமது அப்துல்லா என்னும் 11 வயது சிறுவன் ஒருவன் வழிதவறி, இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துவிட்டான். இந்த சிறுவனை இந்திய பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளை காஷ்மீர் போலீசார் செய்தனர். கடந்த 3 நாட்களாக காஷ்மீர் போலீசாரிடம் இருந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறைப்படி இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்தனர்.
அந்த சிறுவனை ஒப்படைக்கும் போது, அவனுக்கு புதிய ஆடைகள், இனிப்புகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து இந்திய ராணுவத்தினர் பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அனைவர் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.