என் மலர்
நீங்கள் தேடியது "Sentenced to death"
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜூகுன்ஜூ பகுதியில் 3 வயது சிறுமி கடந்த 2-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வினோத்குமார் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஜூகுன்ஜூ மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 13-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 30-ந் தேதி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக வினோத்குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வினோத்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பின் போது நீதிபதி கண்ணீருடன் கவிதை வாசித்து தனது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் நடந்த 29 நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

