என் மலர்
நீங்கள் தேடியது "september 30"
திரிபுரா மாநிலத்தின் காலியாக உள்ள 3 ஆயிரத்து 386 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #TripuraPanchayatByelections
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் சுமார் 3 ஆயிரத்து 386 உள்ளாட்சி இடங்கள் காலியாக உள்ளன. இங்கு வேட்பாளர்கள் இறப்பு மற்றும் ராஜினாமா போன்ற காரணங்களால் அந்த இடங்கள் காலியாகின.
பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி மற்றும் ஜில்லா பரிஷத் என காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, செப்டம்பர் 30-ம் தேதி உள்ளாட்சிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 3-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. #TripuraPanchayatByelections