search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sergio Ramos"

    அர்ஜென்டினாவின் தலைசிறந்த வீரராக கருதப்படும் மரடோனாவை விட மெஸ்சிதான் சிறந்த வீரர் என செர்ஜியோ ரமோஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2018
    ஸ்பெயின் அணியின் தலைசிறந்த கால்பந்து வீரர் செர்ஜியோ ரமோஸ். 32 வயதான இவர் ரியல் மாட்ரிட் அணியின் பின்கள வீரராக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டன் இவர்தான். ரமோஸ் தற்போது உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி கேப்டனாக உள்ளார்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக கருதப்படும் ஜாம்பவான் டியகோ மரடோனா, செர்ஜியோ ரமோஸை விட அட்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடி வரும் டியகோ காடின் சிறந்த வீரர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கால்பந்து வரலாற்றில் மரடோனாவை விட மெஸ்சிதான் அர்ஜென்டினாவின் தலைசிறந்த வீரர் என்று ரமோஸ் பதிலடி கொடுத்துள்ளார்.



    இதுகுறித்து ரமோஸ் கூறுகையில் ‘‘அர்ஜென்டினாவில், அங்குள்ளவர்களுக்கு கால்பந்து வரலாற்றில் மரடோனாதான் சிறந்த வீரர் என்பது தெரியும். என்னைப் பொறுத்த வரையில் மெஸ்சிதான்.

    ஈரான் வீரர்கள் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருந்தனர். அதேசமயம் நாங்கள் வேறு வழியில் வெற்றி பெற விரும்பினோம். எங்களால் அனைத்து இடத்திலும் முன்னேற்றம் காண முடியும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

    ஸ்பெயின் அணி கடைசி லீக்கில் மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.
    யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சாலா காயம் ஏற்பட காரணமாக இருந்த ரமோஸ்க்கு எதிராக ரூ. 7837 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    யூரோப்பா சாம்பியன் லீக் இறுதிப் போட்டி உக்ரைனில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காரேத் பேலேயின் அபார ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்றது.

    முதல் பாதி நேரத்தின்போது முகமது சாலா பந்தை கோல்நோக்கி எடுத்துச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனும், பின்கள வீரருமான செர்ஜியோ ரமோஸ் சாலாவை தள்ளிக் கொண்டே பந்தை பறிக்க முயன்றார். ஒரு கட்டத்தில் செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கையை வசமாக தன் கைக்குள் பிடித்துக் கொண்டு பலமாக தள்ளினார்.

    இதனால் சாலா தரையில் விழுந்தார். அப்போது இடது கை தோள்பட்டை தரையில் பலமாக தாக்கியது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வலி தாங்க முடியாமல் சாலா வெளியேறினார். இதற்காக செர்ஜியோ ரமோஸிற்கு எந்தவித தண்டனையும் (மஞ்சள் அட்டை இல்லை சிகப்பு அட்டை) கொடுக்கப்படவில்லை. இது லிவர்பூல் அணி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சாலாவின் சொந்த நாடான எகிப்தின் அனைத்து ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இச்சம்பவத்தில் பெரும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ஒருவர், செர்ஜியோ ரமோஸ் வேண்டுமென்றே சாலா காயத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் அவரை மனதளவிலும், உடல் அளவிலும் காயப்படுத்திய சாலாவிற்கும், எகிப்பு மக்களுக்கும் ஒரு பில்லியம் யூரோ (ரூ. 7837 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், பிபாவிற்கு புகாரும் அளித்துள்ளார்.
    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் முகமது சாலா காயத்திற்கு காரணமான செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு உக்ரைனில் நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காரேத் பேலே இரண்டு கோலும், பென்சிமா ஒரு கோலும் அடித்தனர். லிவர்பூல் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறை கோப்பையை கைப்பற்றியது.

    போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பந்தை கோல் நோக்கி கடத்திச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் கேப்டனும், பின்கள வீரரும் ஆன செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கோல் முயற்சியை தடுக்க அவருடன் மோதிக்கொண்டே பந்தை தடுக்கச் சென்றார்.



    அப்போது ரமோஸ் கைக்குள் சாலா கை மாட்டியது. அப்போது சாலாவை ரமோஸ் தள்ளியதால் சாலா கீழே விழுந்தார். இதில் சாலாவின் வலது கை தோள்பட்டை பலமாக தரையில் சென்று தாக்கியது. இதனால் சாலா வலியால் துடித்தார். பின்னர் சிறிது நேரம் விளையாடிய பின்னர் வலி தாங்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ரமோஸிற்கு நடுவர் எந்த தண்டனையும் வழங்கவில்லை.

    இதனால் லிவர்பூல் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அத்துடன் அமெரிக்காவில் பாதிப்படைந்த மக்களுக்காக உதவும் சேஞ்ச்.ஓர்ஜி (Change.org) என்ற இணைய தளத்தில் பிபா மற்றும் யூஈஎஃப்ஏ செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    ×