என் மலர்
நீங்கள் தேடியது "Sevvai"
- உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் அங்காரகன்.
- மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும்.
அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்வித்துச் சிவப்பு வஸ்திரம், பவழம், சிவப்பு அலரி
என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்
துவரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து, தூப தீப
நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரக கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் அங்காரக கிரகதோஷம் நீங்கும்.
உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் அங்காரகன்.
பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,4,7,8,12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர்.
ஆனால் இதை மட்டுமே வைத்து தோஷம் என்று கூறுவது தவறாகும்.
மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும்.
செவ்வாய் தோசம் சிலருக்கு 60 வயதுக்கு மேல்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் தீர ஆராய்ந்தே செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க வேண்டும்.
செவ்வாய் கிழமை உபவாசம் இருந்து, ஏதாவது கோவிலில் தீபம் ஏற்றுதல் எளிய பரிகாரமாகும்.
செவ்வாய் அரசியலில் புகழ்பெற
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு
- கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி.
- ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம்.
1. கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி.
2. வைத்த மாநிதி பெருமாள் (நவதிருப்பதி-3), திருக்கோவில், திருக்கோளூர், தூத்துக்குடி.
3. தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல்.
4. சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்.
5. நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை.
6. பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை.
7. ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி.
8. நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை.
9. திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை.
10. விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை.
11. வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம், காஞ்சீபுரம்.
12. சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காங்கேயநல்லூர், வேலூர்.
13. சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குருசாமி பாளையம், நாமக்கல்.
14. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி, ஈரோடு.
15. முத்துகுமார சுவாமி திருக்கோவில், பவளமலை, ஈரோடு.
16. சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை, ஈரோடு.
17. பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்.
18. மலையாள தேவி துர்காபகவதி திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்.
19. தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்.
20. அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பணந்தாள், தஞ்சாவூர்.
21. அகோர வீரபத்திரர் திருக்கோவில், வீராவாடி, திருவாரூர்.
22. வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம்.
23. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர், கடலூர்.
24. நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், எழுச்சூர், சென்னை.
25. கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், சென்னை.
26. அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை.
1. கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியும்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி சடாயுயென்பார் தாம் இருவர்
புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்கு வேளூரே.
2. தையலார் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா ராவணனை மேலோடி ஈடழித்துப்
பொய் சொல்லாது உயர்போனான் புள்ளிருக்கு வேளூரே.
3. வாசநலம் செய்திமையோர் நாள்தோறும் மலர்தூவ
ஈசன்எம் பெருமானார் இனிதாக உறையும் இடம்
யோசனை போய்ப் பூக்கொணர்ந்து அங்கு ஒரு நாளும் ஒழியாமே
பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.
4. மாகாயம் பெரியதொரு மானுரிதோல் உடையாடை
ஏகாய மிட்டு கந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயம் தேரோடும் ராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
5. கீதத்தை மிகப்பாடு அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
6. திறங்கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு ராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயு என்பான் புள்ளிருக்கு வேளூரே.
7. அத்தியின் ஈருரிமூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப் போல் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டு பலகாலம் தவம் செய்து
புத்தியன்றை வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.
8. பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள் அது உடையானைப்
புண்ணொன்றைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
9. வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகன் என்ன அகல் ஞாலத் தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்கு வேளூரே.
10. கடுத்துவரும் கங்கைதனைக் கமழ்சடையன்றாடாமே
தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதாய் உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று ராமற்காய்ப்
புடைத்தவனை பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
11. செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்லவல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே.
- அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.
- செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாயில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.
பரத்துவாச முனிவர் யாத்திரை' சென்றபோது நர்மதை நதியில் நீராடினார்.
அங்கே ஒரு மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார்.
இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை பிறந்தது. `அங்காகரன்' என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.
அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.
அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் வழங்கினார்.
அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.
செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.