search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sex complaint"

    • கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சித்திக் தலைமறைவானார்.
    • சுப்ரீம் கோர்ட்டு சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடுப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில் ஹேமா கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இதில் பாலியல் தொந்தரவு உண்மை தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை வெளியான பிறகு பல்வேறு நடிகர்கள் மீது நடிகைகள் பலர் பாலியல் புகார் கூறி வருகின்றனர். இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், எடவேளை பாபு உள்ளிட்ட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டன.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது.

    இந்த குழு விசாரணையை தொடங்கிய நிலையில், புகார்களின் அடிப்படையில் போலீஸ் நிலையங்களில் நடிகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து பலரும் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்தனர். இதில் நடிகர் சித்திக் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதன் விசாரணைக்கு முன்பு முன்ஜாமீன் கேட்டு நடிகர் சித்திக், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சித்திக் தலைமறைவானார்.

    அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக முடிவு செய்துள்ளார்.

    இதனை அவர் மின்னஞ்சல் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிவித்து உள்ளார். நாளை (திங்கட் கிழமை) சிறப்பு புலனாய்வு குழுவின் முன்பு நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.

    • தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாகபுகார் அளித்தார்.
    • பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி. கடந்த மாதம் இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

    இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். மேலும் தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், ஜானி மாஸ்டருக்கு ஐந்து நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜாமின் பெறுவதற்கு ரூ. 2 லட்சத்திற்கான உத்தரவாதத்தை இருவர் அளிக்க வேண்டும், ஊடகங்களில் பேட்டி எதுவும் கொடுக்க கூடாது, மற்றொரு இடைக்கால ஜாமின் பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

    தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜானி மாஸ்டர் ஜாமின் கோரியுள்ளார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான "திருச்சிற்றம்பலம்" படத்தில் இடம்பெற்ற "மேகம் கருக்காதா" பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரபல நடிகர் தொழில் வாய்ப்பு உறுதி அளித்ததாக தகவல்.

    பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி. 42 வயதாகும் ஷேக் ஜானி பாஷா "ஜானி மாஸ்டர்" என்று அழைக்கப்பட்டு வருகிறார். தென்இந்திய சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்து வரும் இவர் மீது, பெண் நடன கலைஞர் ஒருவர், தான் சிறுமியாக இருந்தபோது ஜானி மாஸ்டரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என புகார் அளித்தார்.

    அந்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜானி மாஸ்டர் வழக்கில் அல்லி அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் பெயர்கள் இழுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் புஷ்பா பட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், தேவையில்லாமல் அல்லு அர்ஜூன் பெயர் இழுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு படம் ஒன்றின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஷ்பா பட தயாரிப்பாளர் ரவி சங்கரிடம், சுகுமாரும் அல்லு அர்ஜூனும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருக்கு தொழில்முறை ஆதரவை உறுதியளித்தார்களா? என்று கேட்டதற்கு, அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ஜானி மாஸ்டர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் இடையே நடந்த விசயம் எல்லாம் அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விசயம். எங்கள் படத்திற்கு கூடுதல் டான்ஸ் மாஸ்டரான அவர் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து இந்த படத்தில் அவர் பணியாற்றுவார்.

    புஷ்பா படத்திற்கு பிரத்யேக டான்ஸ் மாஸ்டராக பணியாற்ற ஜானி மாஸ்டர் இருந்தார். ஆனால், நாங்கள் திட்டமிட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் இது நடந்தது.

    அல்லு அர்ஜூன் ஒருவர் பக்கம் இருக்கமாட்டார் அல்லது தொழில்முறை தொடர்பாக யாருக்கும் ஆதரவாக இருக்கமாட்டார். அல்லு அர்ஜூன் செட்டில் தனக்கு உள்ள வேலைகளை தவிர மற்றவைகள் பற்றி கவலைப்படுவது இல்லை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளார். அவர் ஏன் ஒருவரை வேலை செய்வதைத் தடுக்க வேண்டும் அல்லது வேறொருவரைப் பதவி உயர்த்த வேண்டும்?. நாங்கள் அனைவரும் தொழில் ரீதியாக மட்டுமே அவர்கள் இருவருடனும் இணைந்துள்ளோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நடிகை ஜான்சி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது "இந்தப் பிரச்னையில் தெலுங்குத் திரையுலகம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவருக்காக யாரும் பகிரங்கமாகப் பேசவில்லை என்று தோன்றலாம்.

    ஆனால் ஒரு பெரிய இயக்குனர், குறைந்தது இரண்டு தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் ஒரு பெரிய ஹீரோ மூலம் வேலை உறுதி செய்யப்பட்டது. தொழில் துறை எப்போதும் திறமையை ஆதரிக்கும்" என்றார்.

    ஜான்சி கூறிய இரண்டு பெரிய டைரக்டர் சிவகுமார் என்றும், மெகா ஸ்டார் அல்லு அர்ஜூன் என்றும் கருதப்பட்டது. இந்த நிலையில்தான் புஷ்பா படம் தயாரிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார்.
    • ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

    இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

    தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

    தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.

    இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, என கணவர் ஜானி மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று அவரது மனைவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது.
    • ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை.

    திருப்பதி:

    பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்கிற ஷேக் ஜானி பாஷா. இவரிடம் துணை நடன இயக்குனராக வேலை செய்து வந்த பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாலியல் புகார் அளித்த பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது சினிமா துறையை பார்த்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார். பின்னர் ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குனராக வேலை பார்த்து வந்தார்.


    ஐதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியனில் உறுப்பினராக பணம் கட்டக் கூட முடியவில்லை. அவருக்கு எனது கணவர் ஜானி மாஸ்டர் பண உதவி செய்தார். அப்போது பெண் உதவி நடன இயக்குனர் தான் சிறந்த நடன அமைப்பாளராக ஆக வேண்டும் அல்லது சிறந்த கதாநாயகியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.

    இதனால் ஜானி மாஸ்டர் தன்னுடைய பட வாய்ப்புகளில் அந்த பெண்ணுக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இப்போது அவர் மீது பாலியல் புகார் கூறுகிறார்.

    மைனர் பெண்ணாக இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை யாராவது பார்த்தீர்களா? ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானால் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அப்படியானால் ஜானி மாஸ்டரிடம் வேலை செய்வது அதிர்ஷ்டம் என ஏன் கூறினார்.

    பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முகேஷ் மீதான குற்றச்சாட்டை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும்.
    • பொய்யான குற்றச்சாட்டுகளை வேறுபடுத்துவது கடினமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.

    இதையடுத்து பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் கூறிவரும் பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாளம் மட்டுமின்றி அனைத்து திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரபல நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு கோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி இருக்கிறது.


    இந்நிலையில் முகேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அவரது முன்னாள் மனைவியான மெத்தில் தேவிகா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    முகேஷ் மீதான குற்றச்சாட்டை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும். அது உண்மை என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள நோக்கத்தை சந்தேகிக்கிறேன்.

    நான் முகேசுடனான உறவை முறித்துக் கொண்டாலும், நாங்கள் நல்ல நண்பர்களாக தொடர்கிறோம். எங்களுக்குள் பகையை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு மனைவியாக அவருடன் நான் இனி உறவை தொடர விரும்பவில்லை.

    ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதுடன், உண்மையான குற்றச்சாட்டுகளில் இருந்து பொய்யான குற்றச்சாட்டுகளை வேறுபடுத்துவது கடினமான பணியாக உள்ளது. பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என்று யாரையும் குற்றம் சாட்டுவது ஒரு புதிய இயல்பான ஒன்றாகிவிட்டது.

    இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களின் பொருத்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை.
    • பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை.

    ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் பகிர்கிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியாமணியும் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

    பிரியாமணி கூறும்போது, ''மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைத்து அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்கிறார்கள்.

    மலையாளத்தில் கமிட்டி அமைத்ததுபோல தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகிலும் கமிட்டிகள் அமைத்தால் நல்லது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். திரைத்துறை மட்டுமன்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தைரியமாக பேசுவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

    பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு ஆதாரம் தரமுடியாது. இப்போது கேமரா போன்கள் வந்துள்ளன. ஆனாலும் இப்போது வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும்.

    எனக்கு இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. பாலியல் தொல்லையை எதிர்கொண்டவர்களும் என்னிடம் வந்து சொன்னது இல்லை'' என்றார்.

    • நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் உடைமாற்ற கூட சரியான இடம் கிடையாது.
    • கேரவனில் உடை மாற்றுவது மட்டுமன்றி, வேறு மோசமான விஷயங்களும் நடந்துள்ளன.

    மலையாள திரையுலகில் ஒரு காலத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷகிலா. இவரது படங்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களைவிட அதிகம் வசூல் செய்துள்ளன.

    தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, ஷகிலா தொடர்ந்து தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். மலையாள பட உலகம் போன்று தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன என்றார்.

    மேலும் ஷகிலா கூறும்போது, "நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் உடைமாற்ற கூட சரியான இடம் கிடையாது. எந்த வசதியும் இல்லாத இடங்களுக்கு செல்லும்போது மேலே ஒரு ஆடையை போர்த்திவிட்டு உடை மாற்றுவோம்.

    அப்போது எங்களை சுற்றி நிறைய ஆண்கள் நின்று கொண்டு இருப்பார்கள். அது பெரிய கொடுமையாக இருக்கும். இப்போது இருப்பது போன்று கேரவன் வசதிகள் அப்போது அதிகம் இல்லை.

    கேரவனில் உடை மாற்றுவது மட்டுமன்றி, வேறு மோசமான விஷயங்களும் நடந்துள்ளன. அதை நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    மலையாள பட உலகில் ஒரு அதிகார குழு உள்ளது. அந்த குழுவில் மோகன்லால், மம்முட்டி, முகேஷ் உள்பட பலர் இருக்கிறார்கள்'' என்றார்.

    • இயக்குனர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.
    • சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பல நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.

    இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து திரையுலகத்தினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைகள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.

    அதன்பேரில் நடிகர்கள் முகேஷ், சித்திக், மணியன் பிள்ளை ராஜூ, ஜெயசூர்யா, எடவேள பாபு இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர். அந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், காங்கிரஸ் நிர்வாகி வி.எஸ். சந்திரசேகரன், நடிகர்கள் மணியன் பிள்ளை ராஜூ, எடவள பாபு ஆகியோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் நடிகரும், எம்எல்ஏ-வுமான முகேஷ் மற்றும் எடவள பாபு ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

    • ஹேமா அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
    • தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகை சவுமியா பாலியல் சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    அந்த அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    நடிகைகளின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகை சவுமியா பாலியல் சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நடிகை சவுமியா, "எனக்கு அப்போது 18 வயது, நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். என் பெற்றோருக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. அந்த நேரத்தில் தான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது என் வீட்டின் அருகே வசித்த நடிகை ரேவதியால் மயங்கிக் கிடந்தேன்

    இயக்குநர் மற்றும் அவரது மனைவியுடன் படத்தில் நடிப்பதற்கான ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு நான் சென்றேன். படத்தில் நடிக்கும் போது நான் முழுக்க இயக்குனரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். அவரின் ஒவ்வொரு மிரட்டலுக்கும் நான் பயந்தேன்.

    ஒருநாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாதபோது என்னை அவரது மகள் என்றுகூறி முத்தமிட்டார். அப்போது நான் உறைந்துவிட்டேன். என்னால் அப்போது அதனை வெளியில் சொல்லமுடியவில்லை. பிறகு என்னை அவர் பலமுறை பலாத்காரம் செய்தார். நான் கல்லூரி படித்த காலத்தில் ஒரு வருடத்திற்கு மேல் இது நடந்தது. அப்போது நான் இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன்.

    அப்போது அந்த இயக்குனர் என்னை அவரது மகள் என்றும் என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அவர் அப்போது என் மூளையை மொத்தமாக குழப்பிவிட்டார்.

    இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு 30 வருடங்கள் ஆகியுள்ளது" என்று வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

    "தனக்கு நேர்ந்த துயரத்தை காவல்துறையிடம் பகிர்ந்து கொண்டதாக கூறிய சௌமியா, தனது பாதுகாப்பை மனதில் வைத்து இயக்குனரின் பெயரை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.
    • நடிகைகளை தொடர்ந்து சீரியல் நடிகை பாபியல் புகார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    அந்த அறிக்கை வெளியானதையடுத்து பல நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    நடிகைகளின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகம் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் புயலை கிளப்பியிருக்கிறது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நடிகைகள் மற்றும் நடிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேரளாவில் சீரியல் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்த நடிகை, கேரளாவை சேர்ந்த சீரியல் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் மீது திருவனந்தபுரம் அருங்காட்சியகம் போலீசில் பாலியல் புகார் கூறியிருக்கிறார்.

    ஒரு சீரியலில் நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து, 2018-ம் ஆண்டு கனகாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து சீரியல் தயாரிப்பாளர் சுதீஷ் சேகர் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் ஷானு ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் சுதீஷ் சேகர் மற்றும் ஷானு ஆகிய இருவரின் மீதும் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களின் மீது 376 (கற்பழிப்பு) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். திரைப்பட நடிகைகளை தொடர்ந்து, சீரியல் நடிகை ஒருவரும் பாலியல் புகார் கூறியிருப்பது கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் முன்ஜாமீன் மனு தாக்கல்.
    • வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து வருகின்றனர்.

    ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

    பிரபல மலையாள இயக்குனரான ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். 2009-ம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்க அழைத்து பாலியல் நோக்கத்துடன் தொட்டு தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தாக இயக்குனர் ரஞ்சித் மீது அந்த நடிகை குற்றம் சாட்டியிருந்தார்.

    அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் ரஞ்சித் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இயக்குனர் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டு ஜாமீனில் விடக்கூடிய தாகவும், அது குறித்து போலீசார் ஆலோசித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தின் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    ×