search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sexual offenses"

    • 71 கல்லூரிகளில் 2 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
    • போலீஸ் புரோ திட்டமும் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அண்மையில் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் அடங்குவதற்கு கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கல்லூரியில் வேலை பார்த்த தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அரங்கேறியது.

    இப்படி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் பெண்கள், மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுப்பது தொடர்பாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர்கள், போலீசார், கல்லூரி முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அதில் முக்கியமாக கோவை மாநகர போலீசார் தாங்கள் செயல்படுத்தி வரும் போலீஸ் அக்கா திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அது மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாகவும் மாநகர போலீஸ் சார்பில் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    கோவையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதால், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

    கோவையில் கல்லூரி மாணவிகளிடம் வரவேற்பை பெற்ற போலீஸ் அக்கா திட்டம் பற்றிய விவரம் வருமாறு:-

    கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியாக என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.

    இதனால் சில நேரங்களில் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது தான் போலீஸ் அக்கா திட்டம்.

    இந்த திட்டமானது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் பாலகிருஷ்ணன் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்.

    இந்த திட்டத்தில் போலீஸ்காரர் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு போலீஸ் அக்கா பணியில் இருப்பார்.

    அவருக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டு இருக்கும். அத்துடன் கல்லூரியில் பணியில் இருக்கும் அந்த போலீஸ் அக்காவின் செல்போன் எண் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும்.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தொடங்கும் போது, அந்த கல்லூரியில் உள்ள போலீஸ் அக்காவை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். மேலும் போலீஸ் அக்காவின் செல்போன் எண்ணும் மாணவிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

    அந்த எண்ணை தொடர்பு மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும், அவர்களது விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படும்.

    கோவை மாநகரில் உள்ள 71 கல்லூரிகளில் இந்த திட்டம் 2 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் உள்ளடக்க புகார் கமிட்டி தான் இந்த திட்டத்தை தொடங்க உந்துதலாக இருந்ததாகவும், அவர்களுடன் இணைந்து போலீஸ் அக்கா பணியாற்றி வருகின்றனர் எனவும் கோவை மாநகர போலீசார் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அக்காவான பெண் போலீஸ் ஒரு சகோதரியை போல, மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடம் கனிவுடன் பேசுவார்கள்.

    இதன் மூலம் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்திருந்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கின்றனர்.

    பிரச்சினைகளை கேட்டதும் அந்த பெண் போலீஸ் அதனை சாதுர்யமாக கையாண்டு, மாணவியை அந்த பிரச்சினையில் இருந்து வெளியில் வர வைக்கின்றனர். இதன் மூலம் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்படுகின்றன.

    கோவை மாநகரில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 473 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்திற்கும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகுந்த முறையில் தீர்வு கண்டுள்ளனர்.

    இதுகுறித்து சென்னையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர் கூறும் போது, போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளுக்கு பாதுகாப்பான உணர்வையும், அவர்கள் பிரச்சினைககளில் இருந்து வெளிவருவதற்கான தீர்வை ஏற்படுத்தும் அமைப்பாகவும் உள்ளது என தெரிவித்தார்.

    தற்போது இந்த திட்டத்தை தான் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் செயல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீசாருக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸ் அக்கா திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டம் வருவதன் மூலம் மாணவிகள் தாங்கள் சொல்ல முடியாத பிரச்சினைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்து தீர்வு காணமுடியும்.

    இதேபோல் கல்லூரி மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போலீஸ் புரோ திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்.
    • பாலியல் குற்றங்களுக்கு உடனே தண்டனை என்பது கிடைப்பதில்லை.

    பாலியல் வன்புணர்வு செய்யும் மனநிலை எங்கிருந்து வருகிறது?

    இது இன்றைக்கு நேற்று அல்ல பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதுள்ள கால கட்டங்களில் குற்றங்கள் கடுமையாக்கப்படாமல் இருப்பதினால் தான் இந்த மாதிரியான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாக இருக்கின்றன.

    இதற்கு முக்கிய காரணம் மனிதர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் இருப்பது தான். நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது, லேப்டாப்பில் அதிகநேரம் வேலை செய்வது, மன அழுத்தம், மற்றவர்களை பற்றி புரிந்துகொள்ளும் மனநிலை இல்லாமல் போவது போன்ற காரணங்களால் தான் இந்த மாதிரியான எண்ணங்கள் அதிகம் ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன.

    இந்த மாதிரியான பாலியல் குற்றங்களுக்கு உடனே தண்டனை என்பது கிடைப்பதில்லை. போக்சோ சட்டப்படி 6 மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் எத்தனை பேருக்கு இந்த தண்டனைகள் கிடைக்கின்றன என்றால் இல்லை.

    பெற்றோர்கள் தான் குழந்தைகளை கவனமுடன் வளர்க்க வேண்டும். குழந்தையை பெற்றுவிட்டோம் என்று விட்டுவிடாமல் குழந்தை எப்படி வளர்கிறது. அவனது நண்பர்கள் யார்? அவர்கள் யாரிடம் அதிகம் பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானதை பெற்றோர்கள் தான் கவனித்து பார்க்க வேண்டும்.

    இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் படிப்பை விட சமூக வலைதளங்களில் தான் அதிகநேரம் மூழ்கிக்கிடக்கின்றனர். அந்த குழந்தைகள் எதை இணையதளங்களில் பார்க்கின்றார்களோ அது சம்பந்தமானவைகளே கூகுலும் அவர்களுக்கு விவரிக்கிறது. எனவே குழந்தைகள் மனதில் இன்னும் அதிமான தாக்கத்தை இணையதளங்களே உருவாக்கி கொடுக்கின்றன.

    மன அழுத்தத்தில் உள்ள குழந்தைகளுக்கும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் ஒரு மனநல மருத்துவரிடன் கவுன்சிலிங்கிற்கு அழைத்து செல்வது பெற்றோர்களிடம் கடமை.

    குழந்தைகள் சாதாரணமாக இல்லாமல் இருந்தால் அதை பெற்றோர்கள் எளிதில் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக இரவில் விழித்துக்கொண்டு இருப்பது. படிப்பை தவிர்ப்பது, படிப்பில் கவனமின்மை, மற்றவர்களை கண்டு பயப்படுவது போன்ற பல காரணங்களால் குழந்தைகளிடம் ஏதோ மாற்றங்கள் உள்ளது என்பது எளிதில் கண்டுகொள்ள முடியும்.

    எனவே பெற்றோர்கள் பருவ வயதை அடைந்த குழந்தைகளிடம் தினமும் பேச வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை, எது விருப்பம் என்று கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். என்ன நடந்தாலும் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை குழந்தைகளுக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பிளாக்மெயில் சம்பவங்கள் பற்றி குழந்தைகளிடம் விவரிப்பதும் மிகவும் அவசியம். தவறாக நடக்கும் சில பிளாக்மெயில் செய்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை பார்க்கிறோம். எனவே எந்த சூழ்நிலையிலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பக்கபலமாக இருக்கிறோம் என்பதை குழந்தைகளிடம் அவ்வப்போது வெளிப்படுத்துவது நல்லது.

    முக்கியமாக 6 வயதில் இருந்து குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்பதை விவரிக்க வேண்டும். மேலும் உறவுகளுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றும் உறவுக்காரர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும், யாராக இருந்தாலும் குழந்தைகள் பயமில்லாமல் பெற்றோர்களிடம் தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளையும் குழந்தைகளுக்கு விவரிக்க மறக்க கூடாது.

    பெற்றோர்கள் இதுபோன்ற பாலியல் கல்வி முறைகளை சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு பெண் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும். அவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும். பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் முன்பு பெற்றோர்களும் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். இதனை வைத்து தான் ஒரு குழந்தை நல்ல குழந்தையாக வளர முடியும்.

    • நடத்தைகளில் பல வகை உள்ளன.
    • பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பெண்ணை அடிக்கடி பின்தொடர்வது, கண்காணிப்பது, தொந்தரவு பண்ணுவது, தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நச்சரிப்பது, கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்புவது... இதுபோன்ற செயலினால் பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை `ஸ்டாக்கிங்' என்கிறார்கள். இம்மாதிரியான நடத்தைகளில் பல வகை உள்ளன. பெண்களால் நிராகரிக்கப்பட்டதால், அடிக்கடி பின்தொடர்வதும் தொந்தரவு செய்வதும் உண்டு. அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும்கூட மாறலாம்.

    இம்மாதிரியான ஒரு ஆண், குறிப்பிட்ட ஒரு பெண் தன்னைப் புறக்கணிப்பதாகக் கருதி மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். தான் அவமதிக்கப்பட்டதாக மனம் புழுங்குகிறார். அதைப் பற்றியே திரும்பத்திரும்பச் சிந்திக்கிறார். அந்த எண்ணத்தை மனதில் இருந்து களைய முடிவதில்லை. சில வேளைகளில் பழிவாங்கவும் துடிக்கிறார். தனக்குக் கிடைக்காத ஒரு பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று பொறுமுகிறார். இது சில நேரம் வன்முறையிலும் கொலையிலும் முடிகிறது.

    இன்னொருபுறம், பெண்களை பின்தொடர்ந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். பெண்ணின் உணர்வுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. கோரிக்கை மறுக்கப்படும்போது, அந்த பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பின்தொடரும் நடத்தையை, ஒரு குற்றமாக மட்டும் கருதுவதும் தவறு. இதை ஒரு தனிமனிதனின் மனப்பிறழ்வாகவோ அல்லது வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடாகவோ அணுகுவதும் தவறு.

    மாறாக, நம் சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள பண்பாட்டு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும். ஒரு குற்றத்தின் வேர் எது, கிளை எது? என்று இனம் காண்பது இதில் மிக அவசியம். பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் நடை, உடை, பாவனையைக் குறை கூறுவது சிலரிடையே வாடிக்கையாக உள்ளது. பாலியல் பற்றி ஆரோக்கியமான விவாதமும் அறிவார்ந்த உரையாடலும் இன்று நம்மிடையே இல்லை. பெற்றோரும் இது பற்றி தம் பிள்ளைகளுடன் பேச தயக்கம் காட்டுகிறார்கள். இம்மாதிரியான பண்பாட்டு சூழலில் பாலியல் கல்வி இன்றியமையாத ஒன்றாகிறது.

    • காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
    • வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் குறித்த விழப்புணர்வு தொட க்கவிழா நிகழ்ச்சி நடைபெ ற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசிய தாவது:-

    பெண் குழந்தைகளை கண் இமைபோல் பாதுகாக்க இமைகள் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்ப ட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலா 50 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்ட காவல் அலுவலக த்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பெண் குழந்தைகள் ஒவ்வொருவ ரிடமும் பெண் காவல்துறை யினர் நட்பாக பழகி அவர்களுக்கு பொதுவெ ளியிலோ அல்லது பள்ளி களிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என்று அறிந்து கொள்ள அறிவுறு த்தபட்டுள்ளது. ஏதேனும் பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தால் அதை பெண் காவல்துறையினர் அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்க ளிடையே காவல்துறையினர் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காவல்துறை என்றும் கண் இமைபோல் காக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார். காவல்துறையினரிடம் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, அதைச் சார்ந்த சட்டங்கள் பற்றியும், வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்வதுடன் குற்றம் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளுவது குறித்தும் ஆலோ சனை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், சங்கர் மற்றும் அனைத்து உட்கோ ட்ட துணை போலீஸ் சூப்பிர ண்டு அனைத்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் பாலியல் குற்ற நிகழ்வை மறைத்து வழக்குகள் மாற்றி பதியப்படுகின்றன.
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழக்கின் விபரங்களை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பார்கள்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் கோவில்பட்டியை சேர்ந்த 17 வயது பெண்ணிடம் ஆன்லைன் மூலம் பழகி சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிவகாசிக்கு அந்த பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணை கணவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதற்காக அவரது வீட்டிற்கு பலர் வந்து சென்றனர். அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களை வீடியோக்கள் எடுத்து மிரட்டி அந்த தம்பதி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ராஜபா ளையத்தை சேர்ந்த ஒரு நபர் அந்த பெண் வீட்டிற்கு வந்துள்ளார். வழக்கம்போல் அந்த கும்பல் அவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்து அந்த நபரை மிரட்டி உள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜபாளையத்தை சேர்ந்த நபரை விபச்சார கும்பல் அரிவாளால் வெட்டியது.

    படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்திலும் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆனால் உண்மை தன்மை குறித்து எப்.ஐ.ஆரில் பதிவு செய்யாமல் சாதாரண அடிதடி வழக்காக பதிவு செய்துள்ளனர். பாலியல் தொடர்பாக குற்ற நிகழ்வை மறைத்து போலீசார் சாதாரண வழக்காக பதிவு செய்வதால் இதுபோன்ற குற்றத்தை தடுக்க முடியாது.

    எனவே வழக்கின் உண்மை தன்மையை சரியாக பதிவுசெய்ய போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×