search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் எண்ணம், வன்மம் அதிகரிக்க காரணம் என்ன?-டாக்டர் சரண்யா ஜெய்குமார் விளக்கம்
    X

    பாலியல் எண்ணம், வன்மம் அதிகரிக்க காரணம் என்ன?-டாக்டர் சரண்யா ஜெய்குமார் விளக்கம்

    • பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்.
    • பாலியல் குற்றங்களுக்கு உடனே தண்டனை என்பது கிடைப்பதில்லை.

    பாலியல் வன்புணர்வு செய்யும் மனநிலை எங்கிருந்து வருகிறது?

    இது இன்றைக்கு நேற்று அல்ல பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதுள்ள கால கட்டங்களில் குற்றங்கள் கடுமையாக்கப்படாமல் இருப்பதினால் தான் இந்த மாதிரியான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாக இருக்கின்றன.

    இதற்கு முக்கிய காரணம் மனிதர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் இருப்பது தான். நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது, லேப்டாப்பில் அதிகநேரம் வேலை செய்வது, மன அழுத்தம், மற்றவர்களை பற்றி புரிந்துகொள்ளும் மனநிலை இல்லாமல் போவது போன்ற காரணங்களால் தான் இந்த மாதிரியான எண்ணங்கள் அதிகம் ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன.

    இந்த மாதிரியான பாலியல் குற்றங்களுக்கு உடனே தண்டனை என்பது கிடைப்பதில்லை. போக்சோ சட்டப்படி 6 மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் எத்தனை பேருக்கு இந்த தண்டனைகள் கிடைக்கின்றன என்றால் இல்லை.

    பெற்றோர்கள் தான் குழந்தைகளை கவனமுடன் வளர்க்க வேண்டும். குழந்தையை பெற்றுவிட்டோம் என்று விட்டுவிடாமல் குழந்தை எப்படி வளர்கிறது. அவனது நண்பர்கள் யார்? அவர்கள் யாரிடம் அதிகம் பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானதை பெற்றோர்கள் தான் கவனித்து பார்க்க வேண்டும்.

    இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் படிப்பை விட சமூக வலைதளங்களில் தான் அதிகநேரம் மூழ்கிக்கிடக்கின்றனர். அந்த குழந்தைகள் எதை இணையதளங்களில் பார்க்கின்றார்களோ அது சம்பந்தமானவைகளே கூகுலும் அவர்களுக்கு விவரிக்கிறது. எனவே குழந்தைகள் மனதில் இன்னும் அதிமான தாக்கத்தை இணையதளங்களே உருவாக்கி கொடுக்கின்றன.

    மன அழுத்தத்தில் உள்ள குழந்தைகளுக்கும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் ஒரு மனநல மருத்துவரிடன் கவுன்சிலிங்கிற்கு அழைத்து செல்வது பெற்றோர்களிடம் கடமை.

    குழந்தைகள் சாதாரணமாக இல்லாமல் இருந்தால் அதை பெற்றோர்கள் எளிதில் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக இரவில் விழித்துக்கொண்டு இருப்பது. படிப்பை தவிர்ப்பது, படிப்பில் கவனமின்மை, மற்றவர்களை கண்டு பயப்படுவது போன்ற பல காரணங்களால் குழந்தைகளிடம் ஏதோ மாற்றங்கள் உள்ளது என்பது எளிதில் கண்டுகொள்ள முடியும்.

    எனவே பெற்றோர்கள் பருவ வயதை அடைந்த குழந்தைகளிடம் தினமும் பேச வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை, எது விருப்பம் என்று கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். என்ன நடந்தாலும் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை குழந்தைகளுக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பிளாக்மெயில் சம்பவங்கள் பற்றி குழந்தைகளிடம் விவரிப்பதும் மிகவும் அவசியம். தவறாக நடக்கும் சில பிளாக்மெயில் செய்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை பார்க்கிறோம். எனவே எந்த சூழ்நிலையிலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பக்கபலமாக இருக்கிறோம் என்பதை குழந்தைகளிடம் அவ்வப்போது வெளிப்படுத்துவது நல்லது.

    முக்கியமாக 6 வயதில் இருந்து குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்பதை விவரிக்க வேண்டும். மேலும் உறவுகளுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றும் உறவுக்காரர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும், யாராக இருந்தாலும் குழந்தைகள் பயமில்லாமல் பெற்றோர்களிடம் தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளையும் குழந்தைகளுக்கு விவரிக்க மறக்க கூடாது.

    பெற்றோர்கள் இதுபோன்ற பாலியல் கல்வி முறைகளை சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு பெண் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும். அவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும். பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் முன்பு பெற்றோர்களும் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். இதனை வைத்து தான் ஒரு குழந்தை நல்ல குழந்தையாக வளர முடியும்.

    Next Story
    ×