என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shalini ajith kumar"

    • இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
    • ஐதராபாத்தில் நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவியை சந்தித்தார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஷாலினி. நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட ஷாலினி, அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு பேபி ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோததரரும் உண்டு.

    இந்த நிலையில், ஷாலினி அஜித்குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரி மற்றும் சகோதரருடன் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தற்போது விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வசிஷ்டா இயக்குகிறார்.

     


    முன்னதாக விஷ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்தார். மேலும், படக்குழுவுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார். இது தொடர்பான படங்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.

    இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை எடுத்து வருகிறார்.

    அதனால் அஜீத்குமார் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை கவனித்துக் கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

    இது சம்பந்தமான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் எப்போதும் உங்களை காதலிக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×