search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shamsi"

    முதல் ஒருநாள் போட்டியில் ரபாடா மற்றும் ஷம்சி ஆகியோரின் அபார பந்து வீச்சால் இலங்கை அணி 193 ரன்னில் ஆல்அவுட் ஆனது. #SLvSA #Rabada
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, உபுல் தரங்காக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். டிக்வெல்லா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தரங்கா 10 ரன்னில் ரன்அவுட் ஆனார்.


    குசால் பேரேரா

    அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்னில் ரபாடா பந்தில் வெளியேறினார். 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பேரேரா தாக்குப்பிடித்து விளையாட, கேப்டன் மேத்யூஸ் 5 ரன்னிலும், ஜெயசூர்யா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 36 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேராவுடன், ஆல்ரவுண்டர் திசார பெரேரா ஜோடி ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. குசால் பெரேரா 81 ரன்களும், திசாரா பெரேரா 49 ரன்களும் எடுக்க இலங்கை அணி 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.



    ரபாடா 8 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஷம்சி 8.3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா அணியின் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான ஷாம்சி குடும்பச் சூழ்நிலை காரணமாக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய காலே டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி இரண்டரை நாளிலேயே முடிவடைந்தது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 2015-ம் ஆண்டிற்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. மகாராஜ் உடன் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான ஷாம்சி இடம் பிடித்திருந்தார். இவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.



    20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் 2-வது டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஷாம்சி இடம்பிடிப்பது உறுதியாக இருந்தது. இந்நிலையில் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஷாம்சி அவசரமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார. அவர் எப்போது இலங்கை திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை.

    ஒருவேளை போட்டிக்கு முன் அவர் இலங்கை திரும்பாவிடில், புதுமுக வீரர் ஷான் வோன் பெர்க்கிற்கு இடம் கிடைக்கும்.
    இலங்கை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் ஷாமிசி ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 12-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. இதற்கு முன் இலங்கை கிரிக்கெட் போர்டு லெவன் அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அந்த பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை போர்டு லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் குணதிலகா 53 ரன்னும், சில்வா 76 ரன்னும் அடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கேப்டன் மேத்யூஸ் 92 ரன்கள் சேர்த்து மேலும் வலுவூட்டினார். ஒரு கட்டத்தில் இலங்கை போர்டு லெவன் அணி 161 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 78.2 ஒவர்களில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



    தென்ஆப்பிரிக்கா அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷாம்சி சிறப்பாக பந்து வீசு 13.2 ஓவரில் 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஸ்டெயின் 12 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
    ×