என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shanthanu"

    • 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி படகுழுவினர் கலந்துகொள்ள சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தனு பேசியதாவது, "இந்த மேடையில் இருப்பது எனக்கு கனவு மாதிரி இருக்கிறது. இந்த படம் எனக்கு நிறைய பரிசுகள் கொடுத்தது. இந்த படத்தில் என் கதாபாத்திரத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். இது என்னுடைய வாழ்க்கையில் கிடைத்தது இல்லை. இது 'புளூ ஸ்டார்' எனக்கு கொடுத்த பரிசு.


    இந்த படம் சினிமா பற்றிய பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. இது எல்லாம் தாண்டி என் அப்பா- அம்மாவிற்கு சந்தோஷத்தை கொடுத்தது. அவர்கள் முகத்தில் புன்னகையை பார்த்தேன். நான் எவ்வளவு ஏக்கத்தில் இருந்தேனோ அதை விட நூறு மடங்கு ஏக்கத்தில் என் பெற்றோர்கள் இருந்தார்கள். அதற்கு 'புளூ ஸ்டார்' எனக்கு கொடுத்த பரிசு" என்று பேசினார்.

    • சி.சி.எல். தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது.
    • சென்னை அணி கேப்டனாக ஆர்யா செயல்படுகிறார்.

    செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத். சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர்.

     


    வருகிற பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கும் சி.சி.எல். போட்டி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. சென்னை ரைனோஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 25 பிப்ரவரி அன்று ஷார்ஜாவில் எதிர்கொள்கிறது.

    இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஷாந்தனு, "சென்னை ரைனோஸ் அணியில் விளையாடுவது வெற்றி, தோல்வியை கடந்து ஒரு மகிழ்ச்சியான பேரின்பத்தை கொடுக்கிறது. மீண்டும் நண்பர்களுடன் இணைந்து பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது."

    "விஷ்ணு, ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதற்காக அவருக்கு நன்றி. இந்த முறை கப் எடுத்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறோம். எங்களுடன் இணைந்து பயணிக்கும் குழுவிற்கு நன்றி," என்று தெரிவித்தார்.

    • ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார்.


    சினம்

    இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சாந்தனு கூறியதாவது, "எனக்கு அருண் விஜய்யை மிகவும் பிடிக்கும். தனிநபராக அவரைப் பிடித்ததைத் தாண்டி, அவருடைய சினிமா வாழ்க்கை பயணமும் பிடிக்கும். மற்ற துறைகளில் திறமை இருந்தால் மட்டும் போதும். ஆனால், சினிமா துறையில் திறமையைத் தாண்டி வேறு சில விஷயங்களும் நமக்கு சாதகமாக நடக்க வேண்டியுள்ளது.


    சினம்

    எத்தனையோ தடைகள், விமர்சனங்களைத் தாண்டி இன்று தனக்கான இடத்தை அருண் விஜய் பிடித்திருக்கிறார். என்னுடைய ஒரு படம் சரியாக போகவில்லை என்று விஜய் அண்ணாவிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அப்போது அவரும் அருண் விஜய்யை உதாரணமாகச் சொல்லித்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். இத்தனை வருட கஷ்டங்களைத் தாண்டி இன்று நல்ல இடத்திற்கு அருண் விஜய் வந்துட்டாருல, அது மாதிரி உனக்கும் நடக்கும் என்றார்" என்று கூறினார்.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

    அந்த ஆறு முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், சாந்தணு, ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி நடித்துள்ளனர்.



    திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்களும், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்களும், பாலசுப்ரமணியம், எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட 6 ஒளிப்பதிவாளர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    நடிகர் சாந்தனு அடுத்ததாக `இராவண கோட்டம்' என்ற படத்தில் நடிக்கும் நிலையில், இந்த பட அறிவிப்பை பார்த்த நடிகர் விஜய் சாந்தனுவுக்கு வாழ்த்து அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். #Vijay #RAAVANAKOTTAM
    கதிர், ஓவியா நடித்திருந்த `மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கவிருக்கும் படத்திற்கு `இராவண கோட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.


    இதுகுறித்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம என்று எனக்கு குறுந்தகவல் அனுப்பி விஜய் அண்ணா என்னை மெர்சலாக்கி விட்டார். உங்களது வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. #Vijay #RAAVANAKOTTAM #Shanthanu

    ×