search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sharwanand"

    • நடிகர் சர்வானந்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடைய பிரபலமானவர்.
    • இந்த படத்தை பலே மஞ்சி ரோஜு படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியிருக்கிறார்

    நடிகர் சர்வானந்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடைய பிரபலமானவர். அதன் பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சர்வானந்த் 96 படத்தின் ரீமேக்கான ஜானு, ஸ்ரீஹாரம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

    அதைத்தொடர்ந்து இவர் 'கணம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். கணம் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை. அதேசமயம் நடிகர் சர்வானந்த் மனமே எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பலே மஞ்சி ரோஜு படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியிருக்கிறார். இதில் சர்வானந்த்துக்கு ஜோடியாக கீருத்தி ஷெட்டி நடித்துள்ளார்.

    இந்த படமானது லண்டன் ஐதராபாத், போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். முதல் பாடல் வெற்றி பெற்ற நிலையில் படத்தின் அடுத்தப்பாடலான ஓ மனமே பாடலை இன்று மாலை வெளியிடவுள்ளனர். படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்த்.
    • ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானது.

    தமிழில் எங்கேயும் எப்போதும், நாளை நமதே, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் அதிக படங்களிலும் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சர்வானந்துக்கு சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து வருகிற ஜூன் 3-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.


    சர்வானந்த் -ரக்ஷிதா ரெட்டி

    இந்த நிலையில் நேற்று (மே 28) காலை ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில தினங்களில் திருமணம் ஆகவுள்ள நிலையில் சர்வானந்த் விபத்திற்குள்ளானது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    சர்வானந்த் -ரக்ஷிதா ரெட்டி

    இந்நிலையில் இந்த விபத்து குறித்து சர்வானந்த் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று காலை என்னுடைய கார் விபத்துக்குள்ளான செய்திகள் வெளியாகின. இது ஒரு சிறிய விபத்துதான். உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் நான் வீட்டில் நலமுடன் இருக்கிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. என் மீது வைத்துள்ள உங்கள் அக்கறைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் இடையேயான மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #96TheMovie #96TeluguRemake
    விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர் இல்லாமல் நூறாவது நாள் கொண்டாடியது வரை பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

    தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று, இசை.



    படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை மாற்றிவிட்டு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் எனத் தயாரிப்பாளர் கூறிவருகிறார்.

    இதனால், ‘தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு மற்றும் இயக்குனர் பிரேம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ எனவும் செய்திகள் வருகின்றன. அனேகமாக இயக்குனர் மாற்றப்படலாம் என்கிறார்கள். #96TheMovie #96TeluguRemake #Sharwanand #Samantha #PremKumar #GovindVasantha

    பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பு விரைவில் உருவாகவிருக்கும் நிலையில், அதுகுறித்த பரவிய வதந்திக்கு பிரேம் குமார் விளக்கமளித்துள்ளார். #96TheMovie #96TeluguRemake
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ‌ஷர்வானந்த்தும் நடிக்கிறார்கள்.

    பிரேம் குமாரே தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். 96 படத்தில் கதை 22 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து கதை பயணித்ததால் அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து இருந்தார்கள். விஜய் சேதுபதி, திரிஷாவின் சிறு வயது கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கி‌ஷன் ஆகியோர் நடித்து இருந்தனர்.



    ஆனால் தெலுங்கு பதிப்பில் கதையின் பிளாஷ்பேக் 2009-ஆம் ஆண்டுடன் நின்றுவிட உள்ளதாகவும், அதாவது பள்ளிக்காதலுக்குப் பதிலாக கல்லூரி காதலை படமாக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. எனவே ‌ஷர்வானந்த், சமந்தா இருவரும் தங்கள் இளமைத் தோற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

    இந்த செய்திக்கு பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். ‘96 தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்காக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழில் இருந்த பள்ளிக்காதல் தான்’ என்று கூறி உள்ளார். #96TheMovie #96TeluguRemake #PremKumar #Sharwanand #Samantha

    ஷர்வானத் ஜோடியாக சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘படி படி லேச்சு மனசு’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் படம் நஷ்டமடைந்ததால் சாய் பல்லவி தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளாராம். #SaiPallavi #PadiPadiLecheManasu
    மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வகவனம் செலுத்தி வருகிறார். சாய் பல்லவி, தனுஷ் ஜோடியாக நடித்த மாரி-2 படம் டிசம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் தெலுங்கில் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஷர்வானத் - சாய்பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு’ என்ற தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆந்திராவில் அதிகமான தியேட்டர்களில் திரையிட்டனர். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. வசூலும் ஈட்டவில்லை.



    இந்த படம் ரூ.22 கோடிக்கு வியாபாரமாகி ரூ.8 கோடி மட்டுமே வசூலானதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்துக்கு சாய்பல்லவிக்கு பேசிய சம்பளத்தில் ஒரு தொகையை படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் முன்பணமாக கொடுத்து இருந்தார்.

    மீதி தொகை ரூ.40 லட்சத்தை படம் ரிலீசான பிறகு தருவதாக சாய் பல்லவியிடம் தயாரிப்பாளர் வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது ரூ.40 லட்சத்தை கொடுக்க அவர் முன்வந்தபோது சாய்பல்லவி வாங்க மறுத்துவிட்டார். படம் நஷ்டமடைந்ததால் ரூ.40 லட்சத்தையும் அவர் விட்டுக்கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. சாய்பல்லவி செயலை தெலுங்கு பட உலகினர் பாராட்டுகிறார்கள். #SaiPallavi #PadiPadiLecheManasu

    ×