என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » shilpa manjunath
நீங்கள் தேடியது "Shilpa Manjunath"
சி.விஜயன் இயக்கத்தில் விவேக் - ஷில்பா மஞ்சுநாத் - சச்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் விமர்சனம்.
சச்சுவின் மகன் லிவிஸ்டன், பேத்தி ஷில்பா மஞ்சுநாத். வயதானாலும் இளமையோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார் சச்சு.
அதே பகுதியில் வசித்து வரும் நாயகன் விவேக் ஒரு போட்டோகிராபர். அழகான பெண் ஒருவரை தேர்வு செய்து அவரை வைத்து மாடலிங் போட்டோக்கள் எடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று விரும்புகிறார். இந்த நிலையில், ஷில்பாவை பார்த்து அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்.
இதற்கிடையே, சச்சுவின் லூட்டியை தாங்க முடியாத லிவிங்ஸ்டன் அவரை திட்ட, சச்சு வீட்டை விட்டு வெளியேறி கார்பரேட் நிறுவனம் ஒன்றின் பிடியில் சிக்கிக் கொள்கிறார். இளமையுடன் வாழ்வதற்கான மருந்தை சச்சுவை வைத்து அவர்கள் சோதிக்கிறார்கள். அழகிலும் இளமையிலும் அதிக கவனம் செலுத்தும் சச்சு, இந்த கும்பலிடம் சிக்கி தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போன்ற உருவத்துக்கு மாறிவிடுகிறார். இதற்கிடையே விவேக் - ஷில்பா இடையே காதல் ஏற்படுகிறது. தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இவர்களுக்கிடையே விவேக் சிக்கித் தவிக்க, ஒரு கட்டத்தில் இவர்களது காதலில் பிளவு ஏற்படுகிறது.
கடைசியில், இளமையான தோற்றத்தில் இருக்கும் சச்சு தனது பழைய தோற்றத்துக்கு மாறினாரா? ஷில்பா - விவேக் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஷில்பாவிற்கு வித்தியாசமான இரட்டை வேடம். அசத்தி இருக்கிறார். பாட்டி குரலில் அவர் பேசிக்கொண்டு அடிக்கும் கலாட்டாக்கள் சிரிப்பை வரவைக்கின்றன. படத்தின் இன்னொரு நாயகியாக சச்சு. அனுபவ நடிப்பால் கவர்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இறங்கி அடித்துள்ளார்.
பாட்டி யார், பேத்தி யார் என்பது தெரியாமல் குழம்பும் ஷில்பாவின் காதலர் பாத்திரத்தில் விவேக், சச்சுவின் மகனாக லிவிங்ஸ்டன், கார்ப்பரேட் அதிபராக சரவண சுப்பையா, போட்டோவில் மட்டும் வாழ்ந்துகொண்டு அடிக்கடி பாட்டியுடன் உரையாடும் கணவர் டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
புதுமையான ஒருவரிக்கதையை எடுத்து அதில் சரியான கதாபாத்திரங்களை உருவாக்கி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் சி.விஜயன். முன்பாதியில் உள்ள வேகமும் விறுவிறுப்பும் பின்பாதியிலும் தொடர்வது சிறப்பு. திரைக்கதை, வசனத்திலும் தொழில்நுட்ப விஷயங்களிலும் இன்னும் கவனம் செலுத்தி இன்னும் நன்றாக சிரிக்க வைத்து இருக்கலாம். வித்தியாசமான கதைக்களத்தில் ஷில்பா, சச்சுவின் நடிப்பால் இந்த பேரழகி கவர்கிறாள்.
இ.ஜே.நவ்ஷத்தின் ஒளிப்பதிவு தரம். சார்லஸ் தனாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் ஒட்டவில்லை.
மொத்தத்தில் `பேரழகி ஐ.எஸ்.ஓ' அழகு தான்.
காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படங்களின் மூலம் பிரபலமான ஷில்பா மஞ்சுநாத், தற்போது நயன்தாரா, திரிஷா வரிசையில் பின் தொடர்கிறார். #ShilpaManjunath
காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படங்களின் மூலம் பிரபலமானவர் ஷில்பா மஞ்சுநாத். இவர் அடுத்து இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் பேரழகி ஐ.எஸ்.ஓ.
கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ளார். ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.
படம் குறித்து பேரழகி விஜயன் கூறியதாவது: ‘இது ஒரு அறிவியல் புனைவு படம். சீரியசாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, திரிஷா வரிசையில், ஷில்பா மஞ்சுநாத்தும் இணைந்துள்ளார்.
பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவம் குறித்து நடிகைகள் ஆவேசமாக கருத்து கூறியிருக்கிறார்கள். #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
‘பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை தாண்டி வரவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது.
மற்ற நாடுகளில் இது மாதிரி விஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவார்கள். இதை அரசியலாக மட்டும் மாற்றி விடாதீர்கள். இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டு விடாதீர்கள்.
யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது தான். அதேநேரம் நீங்கள் நம்புகிற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாக போவதை தவிர்த்து விடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பையில் ஒரு தற்காப்பு பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களின் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:-
நட்பான குடும்பம் அமையாததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேட காரணம். வீட்டில் மனம் விட்டுப் பேசி, நட்பாய் பழக ஆட்கள் இருந்தால், எந்தப் பெண்ணிற்கும் வெளியில் அதனைத் தேட வேண்டிய தேவை இருக்காது.
வரலட்சுமி சரத்குமார் கூறும்போது,
‘பெண்ணை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒரு பக்கம் மகளிர் தினம் வேறு. இந்த சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.
இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி.
நடிகை ராசிகன்னா கூறும்போது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். #HarishKalyan
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில் இவருக்கு ஜோடியாக ரைசா நடித்திருந்தார். இளன் இயக்கி இருந்த இப்படத்தை இசையமைத்து தயாரித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ‘புரியாத புதிர்’ படம் இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இதில் ஹரிஷுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார்.
மேலும், மாகாபா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இசையமைத்து வரும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குநருடன் கூட்டணி வைக்க இருக்கிறார். #HarishKalyan #RanjithJayakodi
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்து இருந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த ஷில்பாவுக்கு, இதுதான் முதல் தமிழ் படம். பார்ப்பதற்கு மாடர்னாக இருக்கும் இவர், படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். படத்தில் ஷில்பாவின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இவர் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்தப் படத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா நடிக்க இருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை இளன் இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. #HarishKalyan #RanjithJayakodi #ShilpaManjunath
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா நடிப்பில் உருவாகி இருக்கும் `காளி' படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Kaali #VijayAntony
விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் காளி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி 4 வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம்.நாதள் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Kaali #VijayAntony
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காளி' படத்தின் விமர்சனம். #Kaali #KaaliReview #VijayAntony
அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒரு அம்மா-மகன், ஒரு மாடு, ஒரு பாம்பு வருகிறது.
மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என்ற குணமுடைய விஜய் ஆண்டனி, அதையே தனது மருத்துவமனையில் புணிபுரிபவர்களுக்கும் போதிக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி செயழிலந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தனது அம்மாவைக் காப்பாற்ற தனது கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக விஜய் ஆண்டனி அவரது அப்பாவிடம் கூறுகிறார்.
ஆனால் விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்றும், அவரை ஆசிரமம் ஒன்றில் இருந்து தத்து எடுத்து வந்ததாக விஜய் ஆண்டனியின் அப்பா கூறுகிறார். இதையடுத்து தனது கனவில் வருவது யார்? தன்னை பெற்ற அம்மாவா? அவர் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறிய தான் இந்தியாவுக்கு போய் வருவதாக தனது வளர்ப்பு பெற்றோரிடம் கூறிவிட்டுச் செல்கிறார்.
இந்தியா வரும் விஜய் ஆண்டனி தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். பின்னர் தனது தந்தை யார் என்பதை தேடி செல்கிறார். அவருக்கு துணையாக யோகி பாபு வருகிறார். அவரது அப்பாவை தேடிச் சென்ற அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இலவச சிகிச்சை செய்வதாகக் கூறி அனைவரது ரத்தத்தையும் எடுத்து, அவர்களது டி.என்.ஏவை, தனது டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
இதில் அந்த ஊர்த் தலைவரான மதுசூதனன் தான் தனது தந்தையாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அவரது கதையை கேட்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி பற்றிய கதையையும் கேட்கிறார். இந்த நிலையில், அதே ஊரில் சித்த மருத்துவராக வரும் அஞ்சலிக்கு, விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது.
கடைசியில் விஜய் ஆண்டனி தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? விஜய் ஆண்டனியின் அம்மா யார்? விஜய் ஆண்டனியின் கனவு முழுமை அடைந்ததா? விஜய் ஆண்டனி - அஞ்சலி இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
4 வித்தியாசமான கெட்-அப்களில் வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பு எப்போதும் போல ரசிக்கும்படியாகவே இருக்கிறது. 4 பரிணாமங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சித்தா மருத்துவராக அஞ்சலியின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக ரசிக்கும்படி வந்திருக்கிறது. சுனைனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதாவும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
காமெடி காட்சிகளில் யோகி பாபு ஸ்கோர் செய்திருக்கிறார். மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் கொடுத்த கதாபாத்தை மெருகேற்றியிருக்கின்றனர்.
ஒரு கனவு, அதில் வருவது யார் என்பதை அறிய இந்தியா வரும் விஜய் ஆண்டனி, அவரது அப்பாவை தேடுகிறார். அதனை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. படத்தின் கதை, கேட்க வித்தியாசமாக இருந்தாலும், அதனை திரையில் சரியாக காட்டவில்லையோ என்று யோசிக்க வைத்துவிட்டார் கிருத்திகா.
4 கெட்-அப்புகளில் விஜய் ஆண்டனி, 4 கதாநாயகிகள் என படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அவரது முதல் படத்தில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லை என்பது வருத்தமே.
பின்னணி இசை, பாடல்களில் விஜய் ஆண்டனி மிரட்டியிருக்கிறார். குறிப்பாக அரும்பே பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `காளி' ஏமாற்றம். #Kaali #KaaliReview #VijayAntony
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காளி’ படத்தில் இடம் பெற்றிருக்கும் அரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
விஜய் ஆண்டனி நடித்து, இசை அமைக்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் படம் "காளி". இப்படத்தில் வரும் "அரும்பே" என்ற பாடல் இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது. அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.
இதுகுறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது, ‘காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.
என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான சூழ்நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.
"அரும்பே" பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது. ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்" என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X