என் மலர்
நீங்கள் தேடியது "Shirdi Saibaba"
- சீரடி இசுலாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழ்ந்த கிராமம்.
- அந்த முகம் கடவுளுக்கு இணையான பொலிவுடன் இருப்பதை கண்டு வணங்கினாள் கங்காபாய்!
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்
கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை
ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.
சீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.
இன்றைக்கு நாடி வந்தோர் அனைவருக்கும் நல்லன எல்லாம் வழங்கும், தினம் தினம் அற்புதங்கள் நடக்கும்
சீரடி புண்ணிய ஷேத்திரம் 1853ம் ஆண்டில் வெறும் 500 வீடுகள் மட்டும் உள்ள ஒரு குக்கிராமம் ஆகும்.
குக்கிராமத்தின் ஊர் தலைவர் பாட்டியா என்ற நாத்திகர்.
சீரடி விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி பெரும்பாலனவர்கள் ஏழ்மை நிலையில் வாழும் கிராமம்.
இசுலாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழ்ந்த கிராமம்.
அக்கிராமத்தில் 60 வயது மதிக்கதக்க ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள்.
அவள் பெயர் கங்காபாய். அவளது வீடு ஊரின் நடுவில் ஒரு வேப்பமரத்துடன் இருந்தது.
அவள் கணவன் காலமாகி பல வருடம் ஆகி இருந்தது.
அவளது மகன் சிறு வயதிலேயே காணாமல் போய் இருந்தான்.
யாரும் ஆதரவற்ற மனிதர்களுக்கு கடவுளே ஆதரவு என்பது போல கங்கா பாய்க்கு ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு நாள் விடியற்காலை 4 மணிக்கு கங்காபாய் வீட்டின் முற்றம் சுத்தப்படுத்தி கோலமிட வெளியே வருகையில் ஒரு அற்புத தரிசனத்தை கண்டார்.
அவரது வீட்டின் எதிரே உள்ள வேப்ப மரத்தின் அடியில் பக்கிரி தோற்றத்தில் ஒரு 16 வயது மதிக்கத்தக்க பாலகன் ஒருவன் தியான நிலையில் அமர்ந்து இருந்தான்.
அவனுடைய முகம் கடவுளுக்கு இணையான பொலிவுடன் இருப்பதை கண்டு வணங்கினாள் கங்காபாய்!
அந்த பக்கிரி தோற்றத்தில் இருந்த பாலகனே இன்று உலகம் முழுமைக்கும் கடவுளாக வணங்கும் சத்குரு ஸ்ரீ சீரடி சாய்பாபா
- இந்த வேப்பிலை மிகவும் இனிமையாக இருப்பதாக சொல்லி தொடர்ந்து சாப்பிடுகிறான்.
- அந்த இலைகள் வழக்கத்துக்கு மாறாக தேனினும் இனிமையாக இருந்தது.
சிறுவனின் தியானம் பற்றி கேள்விப்பட்டு கிராம மக்கள் அங்கே கூடி நிற்க,
இந்த செய்தி கேள்விப்பட்டு ஊர் தலைவர் பாட்டியா அங்கே வந்து சேர்கிறார்.
அந்த சமயம் அந்த பாலகன் கண் விழித்து வேப்ப இலைகளை சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்த கங்காபாய்
தன்னுடைய தாய்மை உணர்வு உந்தப்பட்டு, அந்த பாலகனுக்கு உணவை தயாரித்து எடுத்து வருகிறார்.
தான் கொண்டு வந்த உணவை அந்த சிறுவனை சாப்பிடும்படி கங்காபாய் வேண்டி நிற்க,
அந்த பாலகனோ மறுத்து இந்த வேப்பிலையே தனக்கு உணவு என்று சொல்லி மேலும் அது மிகவும்
இனிமையாக இருப்பதாக சொல்லி தொடர்ந்து சாப்பிடுகிறான்.
இதனை கேட்டு திடுக்கிட்ட கங்காபாய் தனக்கும் சில இலைகளை தரும்படி கேட்டு வாங்கி சுவைக்க
அந்த இலைகள் வழக்கத்துக்கு மாறாக தேனினும் இனிமையாக இருக்க, அந்த தருணத்தில் ஊர் பூசாரி
மகல்சாபதியும் வந்து வாங்கி உண்டு மகிழ்ந்து இருந்த நிலையில், ஊர் தலைவர் பாட்டியாவிற்கு
கொடுக்கப்பட்ட இலைகள் அவரது உள்ளம் போலவே மிகவும் கசப்பு சுவையுடன் இருக்கிறது.
பாட்டியா அந்த பாலகனை போலி மந்திரவாதி என்று நினைத்து கடும் சொற்களால் திட்டி ஊரை விட்டு துரத்தும் படி கட்டளையிடுகிறார்.
அன்று இரவு பெருமழையும், பேரிடியுமாக இயற்கை பெரும் தாண்டவம் ஆட, அந்த பாலகன் நிலை குறித்து
கவலை கொண்டவளாய் கங்காபாய் வீட்டின் ஜன்னல் வழியே வெளியே பார்க்க அங்கே ஒரு அற்புத காட்சியை காண்கிறாள்.
வேப்ப மரத்தின் முன் நிலம் இரண்டாக பிளக்க, அந்த பாலகன் பூமி உள்ளே சென்று பின்
பூமி பழைய நிலைக்கு சமமாக மாறுவதைக் கண்டு வணங்குகிறாள்.
- பாபா சீரடி திருத்தலத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
- இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
பாபா சீரடி திருத்தலத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
இந்த வேப்பமர இலைகள் சாய்பாபா அருளால் கசப்புத் தன்மையை இழந்ததாக கூறப்படுகிறது.
பாபா ஷிர்டியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார்.
அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது.
இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.
மூன்று முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள்.
தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள்.
- பின் சாய்நாதர் மக்களிடம் அது தன்னுடைய குரு தவம் செய்த இடம் என்று கூறினார்.
- இன்று கோவிலின் வெளியே அந்த குருஸ்தானம் உள்ளது.
பத்தாண்டுகளுக்கு பின்னர் சாந்த்பாய் என்ற இசுலாமியரின் உறவினர் இல்ல திருமண கூட்டத்தினருடன் மீண்டும் சாய்நாதர் சீரடிக்கு வந்தார்.
அப்போது பூமியினுள் சாயிநாதர் சென்ற நிகழ்வை கங்காபாய் அனைவரிடமும் தெரிவிக்க,
அந்த இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்து, அனைவர் முன்னிலையிலும் தோண்டினர்.
அங்கே பத்தடி ஆழத்தில் ஒரு கதவும், அந்த கதவின் உள்ளே ஒரு தியான பலகையும் அதன் மீது
உத்திராட்ச மாலையும், நான்கு விளக்குகள் எரிந்துகொண்டும் இருந்தன.
பின் சாய்நாதர் மக்களிடம் அது தன்னுடைய குரு தவம் செய்த இடம் என்றும்,
அதன் பெயர் குரு ஸ்தானம் என்றும் அதனை மூடி விடும்படி கேட்டுக்கொண்டார்.
இன்று கோவிலின் வெளியே அந்த குருஸ்தானம் உள்ளது.
- ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அத்தியாவசியத் தேவைகள்.
- ஆனால் பாபா உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டார்.
சீரடி சாயி பாபா இரண்டாவது முறையாக இளைஞனாக சீரடி வந்தபோது மகல்சாபதிதான் அவரை வரவேற்றார்.
அவ்வூர் மக்களுக்கு அவர் ஒரு மஹான் என்பதோ பெரும் ஞானி என்பதோ சத்குரு என்பதோ தெரியவில்லை.
ஆகவே அவர் தங்க இடம் கேட்டபோது அவரை சிதிலம் அடைந்த மசூதிக்கு அனுப்பினார்கள்.
ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன அத்தியாவசியத் தேவைகள்.
ஆனால் பாபா உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டார். கிழிந்து போன உடை, இடிந்து பாழாய்ப் போன ஒரு மசூதி.
இவற்றுக்காக ஏதும் முணுமுணுத்தாரா? அவருக்கு எல்லாம் சமம்தானே! நாளாவட்டத்தில் அந்த மசூதி கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தப்பட்டது.
பாபாவும் அதற்கு துவாரகாமாயி எனப் பெயர் சூட்டினார்.
பாபாவைப் பொறுத்தவரை துவாரகமாயி அன்னையின் ஆலயம்.
அங்கே அமர்ந்தால் ஆபத்துக்கள் தடுக்கப்படும். கவலை ஓடிவிடும்.
கஷ்டங்கள் முடிந்து பேரானந்தம் வரும்.
எனவேதான் பாபா அங்கே அமர்ந்து தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார்.
அவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அது திறந்த வெளி தர்பார்.
ஒளிவு மறைவு என்று ஏதுமில்லை, கெடுபிடியில்லை, எல்லோரும் வரலாம், எளிதாக தரிசனம் பெறலாம்.
- பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும்.
- அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.
துவாரகாமாயீயில் சாய்பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
அதில் விறகுக்கட்டை போட்டு எரித்து கொண்டிருந்தார்.
அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.
தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து "உதி" என்று அழைக்கப்படும்
விபூதியை எடுத்து தருவார். அக்னி குண்டத்தை எடுக்கும்போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம்.
பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது.
எல்லாவித ஊழ்வினைகளையும், வியாதிகளையும் போக்க வல்லது.
தினமும் குளித்தபின் உதியை நெற்றியில் இட்டு கொண்டு, கொஞ்சம் நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.
பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும்.
அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.
சாய்பாபா என்னும் மந்திர சொல்
இந்த மந்திரச்சொல்லின் "சாய்" என்ற சொல்லுக்கு, "சாட்சாத் கடவுள்" என்ற அர்த்தமாம்.
இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.
- சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.
- 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில்
அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.
5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
- கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது.
- அந்த சுடாத மண்பானையை பாபா மரத்தின் அடியில் வைத்து வந்துவிடுவார்.
கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது.
இது நாழிக் கிணறு என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய லென்டிபாக் எனும் நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா.
அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அவ்வாறு இரைக்கப்பட்ட தண்ணீர் சுடாத மண் பானையில் சுமந்து சென்று செடிகளுக்கும், மரங்களுக்கும் ஊற்றுவார் பாபா.
அந்த சுடாத மண்பானையை பாபா மரத்தின் அடியில் வைத்து வந்துவிடுவார்.
அடுத்த நாள் அந்த பானை கரைந்து மண்ணோடு மண்ணாக ஆகிவிடும்.
ஒரு பானை கூட தனது சொத்தாக ஆகிவிடக்கூடாது எனும் தூய துறவறத்தை கடைபிடித்தார் பாபா.
- ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
- ஓம் சீரடி வாசாய வித்மஹே
ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் காயத்ரி
ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்
ஓம் சீரடி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தந்நோ சாய் ப்ரசோதயாத்
- பத்ரி க்ராம ஸமத் புதம்
- த்வாரகா மாயீ வாசினம்
பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி
- ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத்நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது.
- மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார்.
பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
1.தாஸ்கணு மகாராஜ்,
2.நாராயண கோவிந்த சந்தோர்க்கர்,
3.ஹரிசீதாராம் தீட்சித்,
4.உபசானி பாபா,
5.கபர்தே,
6.அன்னாசாகேப் தபோல்கர்.
7.மஹல்சாபதி
ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத்நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது.
நான் எல்லா உயிர்களிடமும் வாழ்கிறேன் கடவுளை அடைய சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும்.
உலக விஷயங்களில் விரக்தி தோன்ற வேண்டும்.
மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார்.
- அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.
- அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, நாட்டுக்கு வழங்கிய பெருமை அவரையே சாரும்.
நாடு முழுவதும் சாய்பாபாவின் தத்துவம் தழைத்தோங்கவும், சாய்பாபா வழிபாடு சிறப்புற்றுத் திகழவும் வழிவகுத்தவர்,
தமிழகத்தைச் சேர்ந்த பூஜ்ய ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி.
அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.
சாய்பாபா மகா சமாதி அடைந்து பல வருடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து
அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, அவற்றை சுவைபட தொகுத்து நாட்டுக்கு வழங்கிய
பெருமை அமரர் நரசிம்ம சுவாமிஜியை சேரும்.