search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shock information"

    • 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.
    • கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது.

    கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.

    2010 -ல் பெரும்பாலும் வறண்டது. 'ஆரல்' கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது. 1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது. 


    இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன. இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியது. ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது. இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது.
    • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் தெற்கு மாசி வீதியில் நேற்று பிளாஸ்டிக் கடை மற்றும் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம் அடைந்தது.

    இந்த தீயை அணைக்க 7 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற் பட்ட தீயணைப்பு வாக–னங்களைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட் டது.

    இதைக்கண்ட பொதுமக் கள் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இதுபோன்று தீ விபத்துகள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவ–தாக தெரிவித்து வந்தனர். மேலும் குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வசந்த ராயர் மண்ட–பத்தில் ஏற்பட்ட தீ விபத் துக்கு பின்னர் இது போன்ற தீ விபத்துகள் நடைபெறு–வதால், மதுரை–யில் பெரும் அசம்பாவிதம் நடைபெறுமா என்ற அச்சத்தில் ஆன்மீகவா–திகள், பொதுமக்கள் இருக் கின்றனர்.

    இந்த சூழ்நிலையில் சமூக ஆர்வலர் நாகேந்திரன் தக–வல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக மதுரை மாவட்டத் தில் நடைபெற்ற தீ விபத்து குறித்து தகவல் கேட்டு இருந்தார். அதற்காக தீய–ணைப்புத் துறைகளால் கொடுக்கப்பட்டுள்ள தக–வல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடை–பெற்று இருப்பதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தீயணைப்புத்துறையினரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 85 நிறுவ–னங்கள் மட்டுமே தீயணைப் புத்துறையினர் மூலம் தடை–யில்லா சான்றிதழ் பெற்றுள் ளனர் என்றும், ஆனால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவி–லைச்சுற்றி நடைபெற்ற தீ விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மதுரை மாநக–ரில் உள்ள 50 ஆண்டு முதல் நூறு ஆண்டுகள் வரையி–லான பழமையான கட்டிடங் களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களுக்கு 95 சதவீதம் முறையான ஆவ–ணங்கள் இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரி விக்கப்பட்டு உள்ளது.

    வரும் காலங்களில் பழ–மையான கட்டிடங்களை உரிய முறையில் தணிக்கை செய்து தீ விபத்துக்களை தடுக்க உறுதியான நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவில் மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
    • நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகள் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்கண்ட கால கட்டத்தில் மக்கள் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை 6 மில்லி மீட்டர் (0.24 அங்குலம்) கடல் மட்டத்திற்கு சமமாக உயர்த்தி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

    கடந்த காலங்களில் துருவங்களின் சறுக்கல் கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்பமான பாறைகளின் வெப்ப சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சி முடிவுகள் நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

    மேலும் பூமியின் சுழற்சி துருவம் உண்மையில் நிறைய மாறுதல்களை கண்டுள்ளது என ஆய்வுக்கு தலைமை தாங்கிய சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளர் கி. வியோன் சியோ தெரிவித்துள்ளார். இதனை ஆய்வில் ஈடுபடாத ஜெட் பிரபல்சன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி சுரேந்தரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சியதால் ஏற்பட்ட மாற்றங்களால் பருவங்கள் மாறும் அபாயம் இல்லை. அதே வேளையில் புவியியல் நேர அளவீடுகளில் துருவ சறுக்கல் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலநிலை தொடர்பான காரணங்களில் நிலத்தடி நீரின் பகிர்வு உண்மையில் பூமி சுழற்சி சறுக்கலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளதாக விஞ்ஞானி சியோ கூறியுள்ளார். மேலும் மத்திய அட்சரேகையில் இருந்து தண்ணீரை மறு பகிர்வு செய்வது துருவ சறுக்கலை கணிசமாக பாதிக்கிறது.

    பெரும்பாலான மறு பகிர்வு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்திய பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் மத்திய அட்சரேகைகளில் அமைந்துள்ளன. பூமியின் சுழற்சியை மாற்றுவதில் நீரின் பங்கு இருப்பதாக கடந்த 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வரை அதன் சறுக்கல்களுக்கான நிலத்தடி நீரின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. இதுவே முதன் முறை என தெரிவித்துள் ளனர்.

    ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்க பல நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மீண்டும் மாற்ற இயலும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதன் பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வில், 1995-ம் ஆண்டில் துருவ சறுக்கலின் திசை தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று 1995-2020 வரையிலான சராசரி சாய்வின் வேகம் 1981-95 காலகட்டத்தை ஒப்பிடும்போது 17 மடங்கு வேகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் நீர் நிலைகளில் இருந்து 18 ட்ரில்லியன் டன் தண்ணீரை மாற்றாமல் பிரித்தெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    • இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் இறப்பு சதவீதம் ஆயிரம் பேருக்கு 3.97 சதவீதமாக இருந்தது.

    அதன்பின்பு இம்மாவட்டத்தில் இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட இறப்பு சதவீதத்தை காட்டிலும் அதன்பின்பு வந்த ஆண்டுகளில் இறப்பு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    அதாவது 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் முதியோர் இறப்பு 12 சதவீதமாகவும், பெண்கள் 11 சதவீதமாகவும், இதய நோய் உள்ளவர்கள் 10 சதவீதமாகவும் உள்ளனர்.

    இதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள பிறப்பு-இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தோம்.

    இந்த பதிவேடுகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 7931 ஆக பதிவாகி உள்ளது. இது 2022-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 8665 ஆக பதிவாகி உள்ளது.

    கொரோனா தொற்று குறைந்த நிலையில் அதற்கு பிந்தைய இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்ன? என்பது பற்றி விஞ்ஞானிகள் சோதனை நடத்த வேண்டும் என்று இந்த ஆய்வை நடத்திய குழுவினர் கூறியுள்ளனர்.

    கொரோனாவுக்கும், கொரோனாவுக்கு பிந்தைய சாவு எண்ணிக்கை உயர்வதற்கான காரணம் குறித்து இந்த ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×