search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddaganga seer"

    கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி(111) இன்று காலமானார். அவரது மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக உள்ளவர் சிவகுமார சுவாமி. இவர் கடந்த 1941-ம் ஆண்டில் இருந்து துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

    மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார சுவாமியின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பரிந்துரைத்திருந்தார்.

    சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிவகுமார சுவாமிஜி கடந்த ஆண்டு பெங்களூரு நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மடத்துக்கு திரும்பினார்.

    இந்நிலையில், நேற்றிரவு வயோதிகம்சார்ந்த பிரச்சனைகளால் அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி  இன்று காலை 11.40 மணியளவில் தனது 111-வது வயதில் காலமானார்.

    அவரது மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல் மந்திரிகள் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


    நாளை மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அவரது மறைவுக்கு கர்நாடக மாநில அரசின் சார்பில் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    கடந்த 2007-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கர்நாடக மாநிலத்துக்கு வந்திருந்தபோது துமக்கூருக்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமியை சந்தித்தது நினைவிருக்கலாம்.

    ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
    ×