என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sidharth"

    • தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    டெஸ்ட்

    டெஸ்ட்

    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் டக்கர்.
    • இப்படத்தின் டீசரை சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், தற்போது நடித்துள்ள படம் 'டக்கர்'. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார்.சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். இதில் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ளனர்.


    டக்கர்

    டக்கர்

    இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு டக்கர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் வருகிற மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.



    • தெலங்கானாவில் நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் திருமணம் செய்துகொண்டனர்.
    • திருமணத்திற்கு பின்பு சித்தார்த்துக்கும், அதிதி ராவும் சேர்ந்து போட்டோசூட் எடுத்துள்ளனர்.

    நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் இன்று தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றது.

    இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.

    பின்னர் தங்களது திருமண புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அப்புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு சித்தார்த்துக்கும், அதிதி ராவும் சேர்ந்து போட்டோசூட் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியாகிறது.
    • இந்தப் படத்தில் சித்தார்த், மாதவன் மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர்.

    'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தெரிகிறது.

     


    இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சித்தார்த்.
    • மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்த அதிதிராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     

    சித்தார்த் - அதிதிராவ்

    சித்தார்த் - அதிதிராவ்

    சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா நடைபெறும் இடத்திலும் ஒன்றாகவே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள்இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர்.

    அதிதிராவ் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சித்தார்த்.
    • மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்த அதிதிராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சித்தார்த் - அதிதிராவ்

    சித்தார்த் - அதிதிராவ்

    இந்த நிலையில் மும்பை ஊடகங்களில் நடிகர் சித்தார்த் நடிகை அதிதிராவ் இருவரும் காதலிப்பதாக தகவல்களை எழுதி வருகிறார்கள். சமீபத்தில் அவர்கள் ஓட்டலில் சந்தித்துப் பேசிவிட்டு ஒரே காரில் சென்ற வீடியோவையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

    அதிதிராவ் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×