என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » silence
நீங்கள் தேடியது "Silence"
அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படம் கடைசியாக வெளியான நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.
நடிகை அனுஷ்கா மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார்.
ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கடைசியாக அவரது நடிப்பில் ‘பாகமதி’ படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை.
இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது ஏற்றிய தனது உடல் எடையை வெளிநாடு சென்று குறைத்துவிட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் தான் ஒல்லியாக இருக்கும் தோற்றத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருகிறார்.
ஹேமந்த் மதுகர் இயக்கும் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் பிசியாகி இருந்த மாதவன், தனது புதிய தோற்றத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
இதுதவிர அனுஷ்கா சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக பயிற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #Anushka
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். 2011-ம் ஆண்டு ‘வஸ்டடு நா ராஜு’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹேமந்த் மதுகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அனுஷ்கா செவித்திறன், பார்வைத் திறன் குறைபாடுள்ளவராக நடிக்கிறார். இதற்காக தற்போது பிரத்தியேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதால் அந்தந்த திரையுலகைச் சார்ந்த நடிகர்களைப் படத்தில் இணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கீதாஞ்சலி, சங்கராபரணம் உள்ளிட்ட படங்களை தயாரித்த கோனா வெங்கட் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது.
பாகுபலி 2, பாகமதி படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருக்கும் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. #AnushaShetty
நடிகர் மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அனுஷ்கா மாதவன் கூட்டணியில் 2006-ஆம் ஆண்டு ரெண்டு திரைப்படம் வெளியானது.
My best birthday wishes to the wonderful human being Anushka!! Happy to start our next project with her soon... Shooting begins in 2019 in U.S.A. @peoplemediafcy@ActorMadhavan@actorsubbaraju@KonaFilmCorp@hemantmadhukar@Gopimohanpic.twitter.com/N0H5fjdMPa
— kona venkat (@konavenkat99) November 7, 2018
12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். விக்ரம் வேதா திரைப்படத்தில் கலக்கிய பிறகு ஒரு இடைவெளி விட்ட மாதவன், தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்ற பிறகு ‘சைலன்ஸ்’ பட வேலைகள் ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வந்த வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #AnushkaShetty #Madhavan #Silence
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. #ThoothukudiShooting #Modi #AbhishekManuSinghvi
புதுடெல்லி :
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக டெல்லியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளார் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக ட்விட்டரில் கருத்து பதிவிடும் மோடி, தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியான விவகாரத்தில் மவுனம் சாதித்து வருவதற்கான காரணத்தை மக்களிடம் விளக்கி கூற வேண்டும். 13 பேர் பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய உயரதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படாமல், அவர்கள் பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் அதன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய எந்த கால வரையறையும் அரசு நிர்ணயம் செய்யவில்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மிருகத்தனமான செயல். விசாரணையானது சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. இதன் பின்னணியில் உள்ள அனைவரையும் தண்டிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் துப்பாக்கி சூடு விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting #Modi #AbhishekManuSinghvi

×

X